அமரர் ஆறுமுகம் தொண்டமானின்  பூதவுடல் கொழும்பிலிருந்து அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள  பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைப்பதற்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீதியின் இரு மருங்கிலும் கூடியிருந்த பொது மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி, அன்னாரின் பூதவுடலுக்கு கண்ணீர் மல்க மலர் தூவி தமது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை பிரதான நகரங்களில் உள்ள கடைகள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

மலையகத்தின் பெரும் பகுதிகள் இன்று சோகமயத்தில் ஆழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றனார்.

அமரர் ஆறுமுகனின் பூதவுடல் கொழும்பிலிருந்து ஹெலிக்கொப்டரில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அமரர் ஆறுமுகனின் பூதவுடலை எடுத்துச் சென்ற கெலிக்கொப்டர், கம்பளையில் மைதானம் ஒன்றில் தரையிறங்கி அங்கிருந்து தரைவழியாக மக்கள் அஞ்சலியுடன் வெவண்டனுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

அரசியல் பிரமுகர்கள் மக்கள் அஞ்சலியுடன் அமரர் ஆறுமுகனின் பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவரது, ரம்பொடை வேவண்டனில் உள்ள  பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டவுள்ளது.