ilakkiyainfo

மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று

மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று
October 15
16:05 2020

மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 49 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் 13 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளம் காணப்பட்டதாக COVID ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஏனைய 36 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை சந்தித்தவர்களாவர்.

இதன் பிரகாரம் மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 1770 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையும் 5,219 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 1,826 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 8 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை உணவுப்பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை வேளையில் 21 மாவட்டங்களில் இருந்து கொரோனா நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்.

வவுனியா, திருகோணமலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து கொரோனா நோயாளர்கள் பதிவாகவில்லை.

தொற்றுக்குள்ளானவர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com