அம்பாறை, திருக்கோவில் சாகாமம் பகுதியில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது இடி மின்னல் தாக்கியதில் கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (30)  மாலை 6 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

இவர்கள் இன்று மாலை சாகாமம் தேசிய நீர் வடிகால் சபை தண்ணீர் தாங்கிக்கு அருகாமையில் உள்ள தமது காணியில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மாலை 6 மணியளவில் கனத்த மழையுடன் ஏற்பட்ட இடடிமின்னல் தாக்குதலில்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில், திருக்கோவில் விநாயகபுரம் பழைய தபாலக வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய 3 பிள்ளைகளின் பெற்றோறே இவ்வாறு  பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த இருவரது சடலமும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்ப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.