ilakkiyainfo

முன்னாள் போராளிகள் அரசியலுக்கு வரலாமா??- சுபத்திரா- (கட்டுரை)

முன்னாள் போராளிகள்  அரசியலுக்கு வரலாமா??- சுபத்திரா- (கட்டுரை)
July 15
22:22 2015

விடு­தலைப் புலிகள் இயக்கம் தமது போரா­ளி­களை பாரா­ளு­மன்றம் அனுப்பும் ஆசைக்­காக கூட்­ட­மைப்பை உரு­வாக்­க­வில்லை. அதை­விட, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை உரு­வாக்­கி­யது புலி­களும் அல்ல. அதை வலுப்­ப­டுத்­தி­ய­வர்கள் தான் அவர்கள். எனவே, கூட்­ட­மைப்பு என்­பது புலி­க­ளுக்குச் சொந்­த­மா­னது என்­பது போல உரிமை கோரு­வதும் நியா­யப்­ப­டுத்த முடி­யாத ஒரு செய­லா­கவே தெரி­கி­றது.

விடு­தலைப் புலி­களின் முன்னாள் போரா­ளிகள் அர­சியல் அமைப்­பாக ஒருங்­கி­ணை­வ­தற்கு முன்­னெ­டுக்­கப்­பட்ட முயற்­சிகள் கடந்த வாரத்தில் அர­சியல் வட்­டா­ரங்­களில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

கடந்த 3ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்தில் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­டாத ஒரு இடத்தில்- நடந்­த­தாகக் கூறப்­படும் ஒரு கூட்­டத்தில் எடுக்­கப்­பட்ட முடி­வுக்­க­மைய, ஜன­நா­யகப் போரா­ளிகள் என்ற கட்சி உரு­வாக்­கப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது.

அந்தக் கூட்­டத்தில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வேட்­பாளர் பட்­டி­யலில் ஒவ்­வொரு மாவட்­டத்­திலும் தலா இரண்டு முன்னாள் போரா­ளி­களைத் தேர்­தலில் நிறுத்த வேண்டும் எனக் கோரு­வ­தென்று முடி­வெ­டுக்­கப்­பட்­ட­தா­கவும் அறிக்கை ஒன்றில் கூறப்­பட்­டி­ருந்­தது.

அதை­ய­டுத்து வவு­னி­யாவில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வர்­களை முன்னாள் போரா­ளி­களின் கட்சி சார்பில், அதன் ஒருங்­கி­ணைப்­பா­ளரும் ஊட­க­வி­ய­லா­ள­ரு­மான ந.வித்­தி­யா­தரன் தலை­மை­யி­லான குழு­வொன்று சந்­தித்துப் பேச்சு நடத்­தி­யி­ருந்­தது.

Prabha_and_new_MPs_DM20040421(அன்று… புலிகளுக்கு பயந்து, புலிகள்  சொல்லுவதை  பேசா மடந்தைகளாக  இருந்து  கேட்டுக்கொண்டிருந்த கூட்டமைப்பினர். )

(இன்று..  பேசா மடந்தைகளாக  இருந்து   கூட்டமைப்பினர்  சொல்வதை   கேட்டுக்கொண்டிருக்கும்  புலிகள்.. “யாணைக்கு ஒரு காலம் வந்தால் பூனை ஒரு காலம்” வரும் என்பது இதுதானோ)

வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் ஒவ்­வொரு மாவட்­டத்­திலும் தலா இரு முன்னாள் போரா­ளி­களை வேட்­பா­ளர்­க­ளாக நிறுத்த வேண்டும் என்று அவர்­களால் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கையை, கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் நிரா­க­ரித்­தி­ருந்­தனர்.

தேர்­த­லுக்­கான அறி­விப்பு வெளி­யி­டப்­பட்டு, வேட்­பு­மனுத் தாக்கல் ஆரம்­பித்­தி­ருந்த நிலையில் தான் இந்தக் கோரிக்கை விடுக்­கப்­பட்­ட­தா­கவும், இது­கு­றித்து அவ­ச­ர­மாக முடி­வெ­டுக்கக் கூடிய நிலை இல்லை என்று கூட்­ட­மைப்புத் தலை­வர்கள் பதி­ல­ளித்­த­தாகவும் அவர்கள் தரப்பில் கூறப்­பட்­டது.

அதே­வேளை, முன்னாள் போரா­ளி­களை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­வ­ணைத்து அர­சியல் நடத்தத் தயா­ரில்லை என்று நிரா­க­ரித்து விட்­ட­தாக, அதன் ஒருங்­கி­ணைப்­பாளர் ந.வித்­தரன் தெரி­வித்­தி­ருந்தார்.

இரு­த­ரப்­பிலும் மாறு­பட்ட கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்ட இந்தச் சூழலில் அர­சியல் வட்­டா­ரங்­களில் இது ஒரு பெரிய விவாதப் பொரு­ளாக மாறி­யி­ருந்­தது.

முன்னாள் போரா­ளிகள் அர­சி­ய­லுக்கு வர­லாமா? – கூடாதா? என்ற விவாதம் இப்­போது மேலோங்­கி­யி­ருக்­கி­றது.

போர் முடி­வுக்கு வந்து ஆறு ஆண்­டுகள் கழித்து, முன்னாள் போரா­ளி­க­ளுக்கு சமூ­கத்தில் சரி­யான அங்­கீ­காரம் கிடைக்­க­வில்லை என்­பது உண்மை.

அதே­வேளை, முன்னாள் போரா­ளிகள் அர­சி­ய­லுக்கோ அல்­லது சமூ­கத்தின் எந்த உயர் நிலைக்கோ வரக்­கூ­டாது என்ற கருத்து எவ­ரி­டத்­திலும் காணப்­பட்­டாலும், அது தவ­றான பிற்­போக்­குத்­த­ன­மான அணு­கு­முறை என்­பதில் சந்­தே­க­மில்லை.

தமது உயிரைக் கூட, போராட்­டத்­துக்­காக கொடுக்கத் துணிந்­த­வர்கள் அவர்கள். அதற்­காக அவர்கள் பல்­வேறு இன்­னல்­க­ளையும் அபா­யங்­க­ளையும் சந்­தித்­த­வர்கள்.

ஆயு­தப்­போ­ராட்டம் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தோடு முன்னாள் போரா­ளிகள் மீது சமூ­கத்திலிருந்து வந்த மதிப்பு கேள்­விக்­கு­றி­யா­னது.

அவர்­களின் உரி­மைகள், எதிர்­காலம் குறித்துப் பெரும்­பா­லானோர் சிந்­திக்­க­வே­யில்லை. விடு­தலைப் புலி­களின் போராட்டம் தோற்­க­டிக்­கப்­பட்ட பின்னர், முன்னாள் போரா­ளிகள் சிலர் செயற்­பட்ட விதம், ஒட்­டு­மொத்த முன்னாள் போரா­ளிகள் பற்­றியும் ஒரு­வித சந்­தேகம், அச்­சத்தை தமிழ்ச் சமூ­கத்­துக்குக் கொடுத்­தி­ருந்­தது.

அதா­வது, அவர்கள் யாரு­டைய பக்­கத்தில் நிற்­கி­றார்கள் என்ற சந்­தே­கமே அது. உண்­மை­யான போரா­ளி­க­ளாக – தமது கொள்­கையை மதிக்­கின் ­ற­வர்­க­ளாக இருக்­கின்ற ஆயி­ரக்­க­ணக்­கான போரா­ளி­க­ளையும் கூட, இந்தச் சந்­தே­கமும், பார்­வையும், வேத­னைப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தது.

என்­றாலும், கடந்­த­கால கசப்­பான அனு­ப­வங்­களால் ஏற்­பட்ட சந்­தேகம் மற்றும் அச்­சத்­தினால், தமிழ்ச் சமூகம் முன்னாள் போரா­ளிகள் விட­யத்தில் சற்று ஒதுங்­கி­யி­ருக்­கவே விரும்­பி­யது. இந்தச் சந்­தே­கமும் அச்­சமும் தமிழ்ச் சமூ­கத்தை விட்டு இன்­னமும் வில­கி­வி­ட­வில்லை.

அதே­வேளை, ஆயுதப் போராட்­டத்தின் முடிவில், அர­ச­ ப­டை­க­ளிடம் சர­ண­டைந்து, புனர்­வாழ்வு பெற்று வெளியே வந்த முன்னாள் போரா­ளி­களை அர­சாங்­கமும், அர­ச­ப­டை­களும் உண்மையாக நம்­பி­வி­ட­வில்லை. அவர்­களைப் பின்­தொ­டர்­வதும், கண்­கா­ணிப்­பதும் வழக்­க­மான விட­யங்­க­ளா­கவே நீடிக்­கின்­றன.

முன்னாள் போரா­ளிகள் சிலர் எங்­கா­வது கூடி நின்று பேசினால் கூட, அவர்கள் விசா­ர­ணை­களை எதிர்­கொள்ளும் நிலை தான் இன்று வரை நீடிக்­கி­றது.

ஆக, அர­சாங்கத்தரப்பின் நம்­ப­கத்­ தன்மையையும் பெற முடி­யாத நிலையில், தமிழ்ச் சமூ­கத்­துடன் இயல்­பா­கவும் முழு­மை­யா­கவும் ஒன்­றி­ணை­யவும் முடி­யாத நிலையில் – ஒரு ஒட்டா மனி­தர்­க­ளா­கவே முன்னாள் போரா­ளிகள் வாழ்­கின்­றனர்.

ஒரு காலத்தில் மதிப்­பு­மிக்க போரா­ளி­க­ளாக, – தள­ப­தி­க­ளாக,- பொறுப்­பா­ளர்­க­ளாக இருந்­த­வர்­களும், பார்க்­கப்­பட்­ட­வர்­களும், எல்­லா­வற்­றையும் இழந்து தமக்கு யாரா­வது உத­வு­வார்­களா என்று கையேந்­து­கின்ற ஒரு நிலை உரு­வா­கி­யது. அந்த நிலை இன்றும் பெரி­தாக மாறி­வி­ட­வில்லை.

அதே­வேளை, முன்னாள் போரா­ளிகள் எந்­த­வ­கை­யிலும் மீள ஒருங்­கி­ணை­யவோ, ஒன்­று­கூ­டவோ விடா மல் தடுத்து வந்­தி­ருக்­கி­றது அர­சாங்கம்.

கிட்­டத்­தட்ட 3,600 முன்னாள் போரா­ளி­களை சிவில் பாது­காப்புப் படையில் இணைத்து இரா­ணு­வத்தின் கண்­கா­ணிப்பில் வைத்­தி­ருக்­கி­றது அர­சாங்கம். எஞ்­சி­யுள்­ளோ­ரையும் வெளியே சுதந்­தி­ர­மாக இருக்­க­வி­ட­வில்லை.

இந்தச் சூழலில், முன்னாள் போரா­ளிகள் மத்­தியில் இருந்து அர­சியல் கட்சி ஒன்றை உரு­வாக்கும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­மையை, இயல்­பா­ன­தொன்­றாக தமிழ்ச் சமூகத்தினால் நோக்க முடி­ய­வில்லை என்­பது முக்­கி­ய­மா­ன­தொரு விடயம்.

இதன் பின்­னணி என்ன – இவர்­களின் இலக்கு என்ன – என்ற கேள்­விகள் இருக்­கின்­றன.

இந்தச் சந்­தே­கங்­களை நியா­ய­மான வகையில் தீர்க்க வேண்­டிய பொறுப்பு, அர­சி­ய­லுக்கு வரத் துடிக்கும் முன்னாள் போரா­ளி­க­ளுக்கு இருக்­கி­றது.

ஏனென்றால், சாதா­ர­ண­மாக ஒரு­சில முன்னாள் போரா­ளி­களே ஒன்று கூடிப் பேச­மு­டி­யாத ஒரு சூழ்­நி­லையில்- ஒரு அர­சியல் அமைப்­பாக இருந்து இயங்­கு­வ­தற்கு அர­சாங்­கத்தின் இரா­ணுவக் கட்­ட­மைப்பு ஒத்­து­ழைக்­குமா என்ற சந்­தேகம் வலு­வாக இருக்­கி­றது.

தமது பிரச்­சி­னை­களை, அர­சியல் கைதிகள், காணா­மற்­போ­ன­வர்­களின் பிரச்­சி­னை­களை எடுத்துக் கூறவே பாரா­ளு­மன்­றத்தை ஒரு தள­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்ள இவர்கள் விரும்புவதாக கூறி­யுள்­ளனர்.

முன்னாள் போரா­ளி­களின் நலன்­களை எவரும் கருத்தில் கொள்­ள­வில்­லை­யாயின், முதலில், அவர்­க­ளுக்­கான ஒரு சமூக நல அமைப்புத் தான் தொடங்­கப்­பட்­டி­ருக்க வேண்­டுமே தவிர, அர­சியல் கட்சி அல்ல.

முன்னாள் போரா­ளி­க­ளுக்­கான நலன்­புரி அமைப்பு அல்­லது புனர்­வாழ்வு அமைப்பு ஒன்றை உரு­வாக்கி, அதன் மூலம் முன்னாள் போரா­ளி­க­ளுக்கு உத­வி­களைப் பெற்றுக் கொடுத்தல், கடன் உத­வி­களை பெற்றுக் கொடுத்தல் வாழ்­வா­தா­ரத்தை உரு­வாக்­குதல் என்று ஏதா­வது முயற்­சி­களில் ஈடு­பட்­டி­ருக்­கலாம்.

அத்­த­கை­ய­தொரு தளத்தில் இருந்து அவர்கள் அர­சியல் தளத்தை நோக்கி நகர்ந்­தி­ருப்­பார்­க­ளே­யானால், அது­கு­றித்து யாரும் சந்­தே­கப்­பட்­டி­ருக்­கவோ கேள்வி எழுப்­பி­யி­ருக்­க­வோ­மாட்­டார்கள்.

ஆனால், திடீ­ரென தேர்தல் அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டதும், அர­சியல் கட்­சியை அமைக்கும் முடிவை எடுப்­பதும், எடுத்த எடுப்­பி­லேயே தமக்கு இரண்டு வேட்­பு­ம­னுக்­களைக் கோரு­வதும் நியா­ய­மற்­ற­தொரு செய­லா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இணைந்­துள்ள கட்­சிகள் ஒரு இடத்­தைபப் பெறு­வ­தற்கே போராடும் ஒரு நிலையில், மாவட்டம் தோறும் இரண்டு இடங்­களை கோரு­வதும், அதுவும் விடு­தலைப் புலி­களின் பெயரைப் பயன்­ப­டுத்திக் கோரு­வது சர்ச்­சைக்­கு­ரிய விட­யமே.

இந்தப் போரா­ளிகள் விடு­தலைப் புலிகள் அமைப்பில் இருந்­தி­ருக்­கி­றார்கள், அதற்­காக பாடு­பட்­டி­ருக்­கி­றார்கள் என்­ப­தெல்லாம் உண்மை.

அதற்­காக, விடு­தலைப் புலி­களின் ஒட்­டு­மொத்த தியா­கங்­க­ளுக்கும், போராட்­டங்­க­ளுக்கும் உரிமை கோரும் அதி­காரம் இவர்­க­ளுக்கு இருக்­கி­றதா என்ற கேள்வி இருக்­கி­றது.

விடு­தலைப் புலிகள் இயக்கம் ஒரு போராட்ட இயக்­க­மாக இருக்க நினைத்­ததே தவிர, அர­சியல் கட்­சி­யாக விரும்­ப­வில்லை.

ஒரு அர­சியல் கட்­சியை உரு­வாக்க வேண்­டிய தேவை வந்த போது, ஏனைய புளோட், ஈபி­ஆர்­எல்எவ், ரெலோ, ஈரோஸ் போன்ற இயக்­கங்­களைப் போல, விடு­தலைப் புலிகள் தமது பெயரில் கட்­சியை உரு­வாக்­க­வில்லை.

விடு­தலைப் புலிகள் மக்கள் முன்­னணி என்ற பெயரைத் தான் வைத்­தனர்.

எனவே, முன்னாள் போரா­ளிகள், விடு­தலைப் புலிகள் என்ற அடை­யா­ளத்தை அர­சி­ய­லுக்­காக பயன்­ப­டுத்த முனை­வது, அவர்கள் உண்­மை­யா­கவே, தமது இயக்­கத்தின் கொள்­கையை நேசித்­தார்­களா என்ற கேள்­வியை எழுப்ப வைக்­கி­றது.

அதை­விட, விடு­தலைப் புலி­களே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை ஒருங்­கி­ணைத்­தார்கள் என்றும், எனவே அவர்­க­ளுக்கு இரண்டு இடங்­களைக் கோரும் உரிமை உள்­ளது என்­பது போன்று ம்கேட்­பது அபத்­த­மா­னது.

விடு­தலைப் புலிகள் இயக்கம் தமது போரா­ளி­களை பாரா­ளு­மன்றம் அனுப்பும் ஆசைக்­காக கூட்­ட­மைப்பை உரு­வாக்­க­வில்லை.

அதை­விட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை உரு­வாக்­கி­யது புலி­களும் அல்ல. அதை வலுப்­ப­டுத்­தி­ய­வர்கள் தான் அவர்கள்.

எனவே கூட்­ட­மைப்பு என்­பது புலி­க­ளுக்குச் சொந்­த­மா­னது என்­பது போல உரிமை கோரு­வதும் நியா­யப்­ப­டுத்த முடி­யாத ஒரு செய­லா­கவே தெரி­கி­றது.

முன்னாள் போரா­ளிகள் விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் இணைந்து போரா­டி­ய­வர்கள் – துன்­பங்­க­ளையும், காயங்­க­ளையும் எதிர்­கொண்­ட­வர்கள்.

மர­ணத்தின் வாயிலை எட்டிப் பார்த்து விட்டு வந்­த­வர்­களும் இருக்­கின்­றனர்.

அவர்­களின் தியா­கங்­களை மக்கள் மறந்து விட­வில்லை.

அது­போ­லவே, முன்னாள் போரா­ளி­க­ளுக்கு தமிழ் மக்­களின் மீது அக்­கறை இருக்­கி­றது. உரி­மையும் இருக்­கி­றது. ஆனால், அந்த அக்­க­றையும், உரி­மையும் அர­சியல் ஆதாய நோக்­கத்தை அடிப்­ப­டை­யாக கொண்­ட­தாக இருக்க முடி­யாது.

அதே­வேளை, முன்னாள் போரா­ளிகள் அர­சி­ய­லுக்கு ஒத்­து­வ­ரா­த­வர்கள் என்றோ, அவர்­களை அர­சியல் நீரோட்­டத்தில் இணைய முடி­யா­தென்றோ யாரும் கூற முடி­யாது.

ஒரு காலத்தில் இலங்­கையில் ஆயுதம் ஏந்திப் போரா­டிய, ஈபி­ஆர்­எல்எவ், ரெலோ, புளொட் போன்ற அமைப்­புகள் இன்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இருக்கும் போது- ஈபி­டிபி போன்ற அமைப்­புகள் கூட்­ட­மைப்­புக்கு வெளியில் இருந்து அர­சியல் நடத்தும் போது- ஒன்­றுக்கு இரண்டு ஆயுதப் புரட்­சி­களை நடத்தி தோல்­வி­கண்ட ஜேவிபி அர­சியல் கட்­சி­யாக இயங்கும் போது-

விடு­தலைப் புலி­களின் முன்னாள் போரா­ளி­களை மட்டும் ஒதுக்கி வைப்­பதில் நியா­ய­மில்லை.

அவர்கள் மறு­வாழ்வு அளிக்­கப்­பட்டு சமூ­கத்­துடன் இணைக்­கப்­பட்­ட­வர்கள். அவர்­க­ளுக்கும் ஏனை­ய­வர்­க­ளுக்கு உள்ள எல்லா உரி­மை­களும் உள்­ளன. ஆனால், அந்த உரி­மை­களை அவர்கள் எந்த வழி­மு­றையின் ஊடாக அடைய முனைய வேண்டும் என்ற விட­யத்தில் தான் பலரும் முரண்­ப­டு­கின்­றனர்.

தேர்தல் காலத்தில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் பேரம் பேர முற்­பட்­டது, வர­வேற்­கத்­தக்­க­தொரு அணு­கு­மு­றை­யாக பார்க்­கப்­ப­ட­வில்லை.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து வேலைத் திட்­டங்­களை முன்­னெ­டுத்து, அவர்­களின் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்பி, அதன் ஊடாக அர­சியல் ரீதி­யான கூட்டு ஒன்­றுக்குள் நுழை­வது குறித்து பேசு­வது பொருத்­த­மா­னது.

அவ்­வா­றின்றி, திடீ­ரென ஒரு கட்­சியை உரு­வாக்­கு­வ­தாக அறி­வித்து விட்டு, வேட்­பு­மனுக் கோரு­வதை எந்தக் கட்­சி­யுமே ஏற்­றுக்­கொள்­ளாது.

முன்னாள் போரா­ளிகள், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து செயற்படுவதையே தமிழ் மக்கள் விரும்புவர் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் அதற்காக, கூட்டமைப்பின் ஒற்றுமையையோ, அதன் செல்வாக்கையோ சீரழிப்பதற்கு முன்னாள் போராளிகள் முற்பட்டால் அதை அவர்கள் நிச்சயம் விரும்பப் போவதில்லை.

ஏனென்றால், இன்றைய நிலையில், சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ்மக்களின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான். அதைப் பலவீனப்படுத்தும் எத்தகைய நகர்வும், தமிழ்மக்களால் சகித்துக் கொள்ளப்படமாட்டாது.

அந்தவகையில் முன்னாள் போராளிகளுக்கு இப்போது வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், அடுத்தடுத்த தேர்தல்களில் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே அவர்களின் தேவையாக இருக்கும்.

அவ்வாறான ஒரு நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாய்ப்பளிக்க மறுத்தால் அதற்கெதிராக தமிழ்மக்கள் நிச்சயம் நியாயம் கேட்பார்கள்.

இப்போதுள்ள சூழலில், முன்னாள் போராளிகளின் நகர்வுகளை தெற்கிலுள்ள சிங்களப் பேரினவாத சக்திகளே அதிகம் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.

இந்தச் சூழலில், முன்னாள் போராளிகள் தமது அரசியல் பாய்ச்சலுக்காக சற்று பதுங்கித் தான் ஆக வேண்டும்.

பதுங்கிக் கொள்ள வேண்டியது பாய்வதற்காகவே தவிர, ஒதுங்கிக் கொள்வதற்காக அல்ல.

– சுபத்திரா-

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com