முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார் .

மூங்கிலாறு பகுதியிலிருந்து குறித்த இளைஞன் செலுத்திய மோட்டார்  வண்டி வேக கட்டுப்பாட்டை மீறி மின்சார கம்பத்துடன் மோதி  விபத்துக்குளானதில் குறித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  பலியாகியுள்ளார்.

விபத்தில் பலியானவர் முகாமைத்துவ பீடத்தில் பேராதனியா பல்கலை கழகத்துக்கு தெரிவான உடையார்கட்டு மூங்கிலாறு தெற்கு எனும் முகவரியை சேர்ந்த ஆனந்தராசா பிரசன்னா (வயது 24)  என்பவராவார் .

இதேவேளை, நேற்றையதினமும் முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலை மாணவர் ஒருவர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .