ilakkiyainfo

‘முஸ்லிம்கள் வேண்டுமென்றே கொரோனாவை பரப்பினார்களா?” – போலி குரல் பதிவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டார் – அஜித் ரோஹண

‘முஸ்லிம்கள் வேண்டுமென்றே கொரோனாவை பரப்பினார்களா?” – போலி குரல் பதிவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டார் – அஜித் ரோஹண
April 06
04:12 2020

 

 முஸ்லிம்கள் வேண்டுமென்றே கொரோனா வைரஸை பரப்புவதாக, உளவுத் தகவல் எனக் கூறி போலி குரல் பதிவொன்றினை வெளியிட்ட நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவரைக் கைதுசெய்ய சி.ஐ.டி. யின் சிறப்புக்குழு ஊடாக  நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஒழுக்காற்று மற்றும்  சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

முஸ்லிம்கள் வேண்டுமென்றே கொரோனாவை பரப்புவதாக, தனது பிரதானி தம்மை அறிவுறுத்தியுள்ளதாக குரல் பதிவினை வெளியிட்ட நபர், தன்னை உளவுத் துறை உறுப்பினராக அதில் காட்ட முற்பட்டிருந்தார்.

 எனினும்  சி.ஐ.டி. முன்னெடுத்த விசாரணைகளில் அவருக்கும் உளவுத் துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளதாகவும்,  அந்த போலியான குரல் பதிவை வெளியிட்ட நபர் மற்றும் அதனை சமூகத்தில் பரப்பியோரையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண  சுட்டிக்காட்டினார்.

பல்பொருள் அங்காடிகளுக்கு செல்லும் முஸ்லிம்கள், கொரோனாவை பரப்பும் நோக்குடன், அங்குள்ள பொருட்களில் உமிழ்வதாகவும், அதனை ஒப்புவிக்க வீடியோ சாட்சிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தன்னை உளவுத்துறை உறுப்பினர் என அடையாளப்படுத்திக்கொள்ள முற்படும் குறித்த சந்தேக நபர்  தனது குரல் பதிவில் பதிவிட்டுள்ளார்.

எனினும் அது முற்று முழுதான பொய் எனவும் அவ்வாறான எந்த வீடியோ ஆதாரமோ, வேறு தகவல்களோ இல்லை எனவும்  அந்த குரல் பதிவு முற்றிலும் இனங்களுக்கு இடையே வெறுப்புணர்வை தூண்டும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

 இது குறித்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில்,

‘ இந் நாட்களில் பல் பொருள் அங்காடிகள்  மூடப்பட்டுள்ளன. அதனால் முஸ்லிம் இனத்தவர் மட்டுமன்றி யாருக்கும் அங்கு செல்ல முடியாது.

இது முற்றிலும் இனவாத, இன வெறுப்புணர்வை தூண்டும் விதமாக புனையப்பட்ட கதை.  அதனை உண்மையென நம்பவைக்கவே வீடியோ ஆதாரம் உள்ளதாக குறித்த சந்தேக நபர் குரல் பதிவில் கூறியுள்ளார்.

எனினும் அவ்வாறான எந்த வீடியோக்களும் இல்லை.  அவ்வாறான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம். சற்று சிந்தியுங்கள். சிந்தித்து பார்த்தால் யாரும் இவ்வாறான தகவல்கலை பகிர மாட்டீர்கள்’  என தெரிவித்தார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com