ilakkiyainfo

மோடியின் கொழும்பு பயணம் தடைப்படுவதன் மர்மம்? – ஹரிகரன் (கட்டுரை)

மோடியின் கொழும்பு பயணம் தடைப்படுவதன் மர்மம்? – ஹரிகரன் (கட்டுரை)
October 24
14:37 2014

இ ந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி விரைவில் இலங்­கைக்குப் பயணம் செய்வார் என்று வெளி­யான ஊகங்­க­ளுக்கு, இந்­தியத் தூதுவர் யஸ்வந்த் குமார் சின்ஹா முற்­றுப்­புள்ளி வைத்­தி­ருக்­கிறார்.

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி, இலங்­கைக்கு விரைவில் பயணம் செய்வார் என்­றாலும், உட­ன­டி­யாக அத்­த­கைய பய­ணத்­துக்கு வாய்ப்­பில்லை என்று அவர் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியை கூடிய விரைவில் கொழும்­புக்கு அழைப்­ப­தற்கு மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் பெரும் முயற்­சி­க­ளை­யெல்லாம் மேற்­கொண்­டி­ருந்­தது.

ஆனால், நரேந்­திர மோடி பத­வி­யேற்று, கிட்­டத்­தட்ட ஐந்து மாதங்கள் முடிந்து விட்ட பின்­னரும், அயல் நாடு­களில் இருந்து ஐ.நா. வரை­யிலும் அவர் சென்று வந்து விட்ட போதிலும், கொழும்பை மட்டும் அவர் எட்டிப் பார்க்­க­வில்லை.

நரேந்­திர மோடியை கொழும்­புக்கு வர­வ­ழைப்­பதில், இலங்கை அர­சாங்கம் கடு­மை­யான முயற்­சி­களை மேற்­கொள்­வ­தற்கு முக்­கி­ய­மான ஒரு காரணம் உள்ளது.

இந்­தியப் பிர­த­ம­ராக இருந்த ராஜீவ்­காந்தி, 1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் இலங்­கைக்கு    மேற்­கொண்ட பய­ணத்­துக்குப் பின்னர், எந்­த­வொரு இந்­தியப் பிர­த­ம­ருமே, கொழும்­புக்கு அதி­கா­ர­பூர்வ பய­ணத்தை மேற்­கொள்­ள­வில்லை.

கிட்­டத்­தட்ட 27 ஆண்­டு­க­ளாக இந்த இறுக்க நிலை நீடிக்­கி­றது. ராஜீவ்­காந்­திக்குப் பின்னர், வி.பி.சிங், சந்­தி­ர­சேகர், தேவ­கௌடா, நர­சிம்ம ராவ், இந்தர் குமார் குஜ்ரால், அடல் பிகாரி வாஜ்பாய், மன்­மோகன் சிங், என்று இந்­தி­யாவில் ஏழு பிர­த­மர்கள் வந்து போய் விட்­டனர்.

இப்­போது எட்­டா­வது பிர­த­ம­ராக ஆட்­சியில் இருக்­கிறார் நரேந்­திர மோடி. இவர்­களில், அடல் பிகாரி வாஜ்பாய் 1998ஆம் ஆண்டும், மன்­மோ­கன்சிங் 2008ஆம் ஆண்டும் சார்க் மாநா­டு­களில்    பங்­கேற்­ப­தற்­காக மட்டும், கொழும்­புக்கு வந்­தனர். அது அர­சு­முறைப் பய­ண­மாக அமைந்­தி­ருக்­க­வில்லை. இருதரப்பு உற­வு­களை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான பய­ண­மாக இருக்­க­வில்லை.

ராஜீவ்­காந்­திக்குப் பின்னர் எந்­த­வொரு இந்­தியப் பிர­த­மரும், இலங்­கைக்கு அதி­கா­ர­பூர்வ பய­ணத்தை மேற்­கொள்­ளா­தது இலங்கை அர­சாங்­கத்­துக்குப் பெரி­ய­தொரு அழுத்­த­மா­கவே இருந்து வரு­கி­றது.

மன்­மோகன் சிங் இந்­தியப் பிர­த­ம­ராகப் பத­வி­யேற்ற பின்னர், 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம், இலங்­கைக்குப் பயணம் மேற்­கொள்­ள­வுள்­ள­தாக, கூறியிருந்தார். ஆனால், அந்தப் பயணம், நடக்­க­வே­யில்லை.

அவர் பத­வி­யி­லி­ருந்த காலத்தில், இலங்­கையில் ஜனா­தி­ப­தி­யாக இருந்த சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும், மஹிந்தராஜபக் ஷவும், அழைப்பு விடுத்த போதெல்லாம், அந்த அழைப்­பு­களை ஏற்றுக் கொண்டார். ஆனால் கடைசி வரையில், அவர் இலங்­கைக்குப் பய­ணத்தை மேற்­கொள்­ள­வில்லை.

2008ஆம் ஆண்டு சார்க் மாநாட்­டுக்­காக கொழும்பு வந்­தி­ருந்த இந்­தியப் பிர­தமர் மன்­மோகன் சிங்­கிற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் கொழும்பு வரு­வ­தற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்­தது.

கொழும்பில் நடந்த கொமன்வெல்த் மாநாட்டில் அவர் பங்­கேற்க வேண்­டிய நிலையில் இருந்தார்.

ஆனால், தமிழ்­நாட்டின் அழுத்­தங்­களால், அவர் கொழும்­புக்­கான பய­ணத்தை மேற்­கொள்­ள­வில்லை. இவ்­வா­றாக, அயல்­நா­டு­க­ளாக இருந்தும், 27 ஆண்டுகளாக, கொழும்­புக்கு ஒரு இந்­தியப் பிர­தமர் அதி­கா­ர­பூர்வ பய­ணத்தை மேற்­கொள்­ளாத ஒரு­வித தேக்க நிலை இன்று வரை நீடித்து வரு­கி­றது.

இது­போன்று தான் இந்­தி­யாவின் எல்லை நாடு­களில் ஒன்­றான நேபா­ளத்­துக்கும் 17 ஆண்­டு­க­ளாக இந்­தியப் பிர­த­மர்கள் எவரும் அர­சு­முறைப் பய­ணத்தை மேற்­கொள்­ள­வில்லை.

ஆனால், அந்த தேக்க நிலையை இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி தான் அண்­மையில் நீக்கி வைத்தார். 2005ஆம் ஆண்டு புது­டில்­லியில் இலங்கைத் தூதுவ­ராக இருந்த மங்­கள முன­சிங்க, 1998ஆம் ஆண்டில் இருந்து இந்­தியப் பிர­த­மரை கொழும்­புக்கு வரு­மாறு அழைப்பு விடுக்­கிறோம்.

இன்­னமும் அந்தப் பயணம் கைகூ­ட­வில்லை என்று, 2005ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் கூறி­யி­ருந்தார். அதே நிலை கருத்தைக் திரும்பத் திரும்ப பல தூது­வர்கள் கூறு­கின்ற நிலை தான் இன்­னமும் நீடிக்­கி­றது. இந்த இடைப்­பட்ட 27 ஆண்­டு­க­ளுக்குள் இரண்டு நாடு­க­ளிலும் பல்­வேறு தலை­வர்கள் ஆட்சிப் பொறுப்­புக்கு வந்து விட்­டார்கள்.

கட்­சிகள், ஆட்­சிகள் மாறிய போதும், புதிய தலை­வர்கள் வந்த போதும், இந்­தியப் பிர­த­ம­ராகப் பொறுப்­பேற்ற எவ­ருமே, கொழும்­புக்கு வர­வில்லை. இதனால் தான் நரேந்­திர மோடி­யை­யா­வது எப்­ப­டியும் கொழும்­புக்கு அழைத்து வந்து விட வேண்டும் என்று அர­சாங்கம் நினைக்­கி­றது.

எதற்­காக நீடிக்­கி­றது இந்த பனித் திரை என்று தெரி­யா­ம­லேயே 27 ஆண்­டு­க­ளாக நீடிக்கும், தேக்க நிலைக்கு நரேந்­திர மோடி முடிவு கட்­டுவார் என்று தான் முன்னர் எதிர்­பார்க்­கப்­பட்­டது.

நரேந்­திர மோடியின் முதல் வெளி­நாட்டுப் பயணம் கொழும்­புக்­கா­ன­தா­கவே இருக்கும் என்று இலங்கை அர­சாங்கம் வலு­வா­கவே எதிர்­பார்த்­தது. ஆனால், அது நடக்­க­வில்லை. அதற்குப் பின்னர், அவர் நேபாளம், பூட்டான், ஆப்­கா­னிஸ்தான், ஜப்பான், பிரேஸில், அமெ­ரிக்கா என்று பல நாடு­க­ளுக்குச் சென்று வந்து விட்டார்.

ஆனாலும், கொழும்­புக்­கான பயணம் மட்டும் இன்­னமும் உறு­தி­யா­க­வில்லை. கடந்த செப்­டெம்பர் மாதம், சீன ஜனா­தி­பதி ஜி ஜின்பிங் கொழும்­புக்கு வந்திருந்த பின்­ன­ணியில், இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியும், விரை­வி­லேயே கொழும்­புக்கு வரலாம் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது.

அண்­மையில், பா.ஜ.க தலை­வர்­களில் ஒரு­வ­ரான சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி கூட, டுவிட்­டரில் விரை­வி­லேயே இலங்கை நாடா­ளு­மன்­றத்தில் நரேந்­திர மோடி உரை­யாற்­ற­வுள்­ள­தாக பதி­விட்­டி­ருந்தார்.

என்­றாலும், இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்கைப் பயணம், இப்­போ­தைக்கு இல்­லை­யென்­றாகி விட்­டது. இலங்­கைக்­கான பயணத் திட்டம் என்பது இந்­தியப் பிர­த­மரின் நிகழ்ச்சி நிரலில் உள்ள போதிலும், அது எப்­போது என்று தீர்­மா­னிக்­கப்­ப­டு­வதில் தான் சிக்கல் உள்­ளது.

அடுத்த மாதம், இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் கொழும்பு வருவார் என்றும், அதன் பின்னர், டிசம்­ப­ரிலோ அல்­லது அடுத்த ஆண்டு ஆரம்­பத்­திலோ இந்­தியப் பிர­த­மரின் பயணம் இடம்­பெறும் என்றும் எதிர்வு கூறப்­பட்­டது.

ஆனால், சீன ஜனா­தி­ப­தியின் பய­ணத்­துக்குப் போட்­டி­யாக, கொழும்பு செல்­வதை இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி விரும்­ப­வில்லை என்று தெரி­கி­றது. ஏனென்றால், அது இந்­தி­யாவின் பெறு­மா­னத்தைக் குறைத்து விடும் என்று புது­டில்லி கரு­து­கி­றது.

சீனா­வுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான உறவின் நெருக்கம் மிகவும் வலு­வ­டைந்­துள்ள சூழலில், இந்த நெருக்­கத்தை இந்­தி­யா­வினால், இனிமேல் குறைக்க முடி­யாது என்­பதை புது­டில்லி உணர்ந்­துள்­ளது.

இத்­த­கைய நிலையில், சீன ஜனா­தி­ப­திக்குப் போட்­டி­யாக, இந்­தியப் பிர­தமர் கொழும்பில் போய் இறங்­கு­வது, இலங்­கையின் காலில் வீழ்­வது போலாகி விடும் என்று புது­டில்லி கரு­து­கி­றது.

எனவே, சீன ஜனா­தி­ப­தியின் கொழும்புப் பய­ணத்­துக்குப் போட்­டி­யாக எதையும் செய்­வ­தற்கு புது­டில்லி முனை­யவும் இல்லை, அதற்கு முயற்­சிக்கப் போவ­து­மில்லை. இந்­தியப் பிர­த­மரின் பயணத் திட்­டத்தில், கொழும்பு முக்­கி­ய­மான இடத்தில் இருந்­தாலும், அது­பற்­றிய உட­ன­டி­யாகப் பரி­சீ­லிக்க இந்­தியப் பிர­தமர் தயா­ராக இல்லை.

Mahinda and Modiகடந்த மே மாதம் புது­டில்­லியில் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் பத­வி­யேற்பு விழா­வை­ய­டுத்து அவரைச் சந்­தித்த போதும், கடந்த மாதம் நியூ­யோர்க்கில் அவரைச் சந்­தித்த போதும், இலங்­கைக்கு வரு­மாறு அழைப்பு விடுத்­தி­ருந்தார் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ.

அந்த அழைப்­பு­களின் பேரில் கொழும்பு வரும் நோக்கம், இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடிக்கு இருந்­தாலும், தற்­போ­தைய சூழலில், அவரைக் கொழும்­புக்கு அழைத்து வரு­வ­தென்­பது குதிரைக் கொம்­பா­கவே இருக்­கி­றது.

அடுத்த ஆண்டு  ஜன­வ­ரியில் ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­து­வ­தற்­கான தயா­ரிப்­பு­களில் அர­சாங்கம் இறங்­கி­யி­ருக்­கி­றது. இத்­த­கைய சூழலில், தாம் கொழும்­புக்குப் பயணம் மேற்­கொள்­வதை நரேந்­திர மோடி விரும்­ப­வில்லை.

இந்­தியப் பிர­த­மரின் பய­ணத்தை ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தனது அர­சியல் இலா­பத்­துக்குப் பயன்­ப­டுத்தி விடக் கூடும் என்­பது இந்­தி­யாவின் ஒரு கவலை ஜனா­தி­பதி தேர்­தலில் யார் வெற்றி பெறு­கிறார் என்­பதை பொறுத்து இரு­த­ரப்பு பேச்­சுக்­களை நடத்­தலாம் என்­பது இன்­னொரு காரணம்.

அதை­விட, இந்­தி­யா­வுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ நிறை­வேற்­றவும் இல்லை, நிறை­வேற்­று­வ­தற்கு முயற்­சிக்­கவும் இல்லை.இத்­த­கைய கட்­டத்தில், கொழும்­புக்­கான பய­ணத்தை மேற்­கொள்­வது, இந்­தியா குறித்து, இலங்கை குறைத்து மதிப்பிடவே உதவும்.

எனவே தான், ஜனவரிக்குப் பின்னரே இந்தி யப் பிரதமரின் பயணம் என்று புதுடில்லி தீர்மா னித்துள்ளது. எவ்வாறாயினும், ராஜீவ் காந்திக்குப் பின்னர், இந்தியப் பிரதமராக இருப்போரின் இலங்கைக்கான பயணம் எதனாலோ தடைப்பட்டு வருகிறது.

இந்த தடைக்கு, இரு நாடுகள் மட்டுமன்றி, இலங்கைப் பிரச்சினை விவகாரத்தில் இரு நாடுக ளுக்கும் உள்ள பொறுப்பு நிறைவேற்றப்படாததும் ஒரு காரணம் தான் என்பதையும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

இப்போதைய நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் உடனடியாக இந்தியப் பிரத மரை அழைத்து வந்து தேர்தல் பூச்சாண்டிக்குப் பயன்படுத்த முடியாது என்பது உறுதியாக விட்டது.

எனவே தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே அதற்கான முயற்சியில் அவரால் மீண்டும் இறங்க முடியும்.

ஹரிகரன்

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com