ilakkiyainfo

யாழில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட குழுவின் தலைவர் கைது: உருக்கிய நிலையில் தங்கக் கட்டிகளாக நகைகளும் மீட்பு

யாழில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட குழுவின் தலைவர் கைது:  உருக்கிய நிலையில் தங்கக் கட்டிகளாக  நகைகளும் மீட்பு
May 06
07:08 2016

யாழ் நகரில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்த வீடுடைப்பு, வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் 57பவுண்  தங்க கட்டிகளுடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்களால் திருடப்பட்ட நகைகள் அனைத்தும் உருக்கிய நிலையில் தங்கக் கட்டிகளாகவே மீட்கப்பட்டுள்ளன.

யாழ் நகரில் மேற்படி சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு பொலிஸ் நிலையங்களில் 22 முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன. இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பிரதான சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

வீடுடைப்பு, முகம் மறைத்து வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக இது தொடர்பாக சுன்னாகம் பகுதியில் 15 முறைப்பாடுகளும் தெல்லிப்பழை பகுதியில் 3 முறைப்பாடுகளும் அச்சு வேலி பகுதியில் 4 முறைப்பாடுகளும் கோப்பாய் பகுதியில் 1 முறைப்பாடும் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றிருந்தன.

அதனடிப்படையில் பொலிஸார் பல குழுக்களாக பிரிந்து விசாரணையை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் மேற்கூறிய பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட சுமார் ஐவர் கொண்ட குழு தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் விரைந்த பொலிஸார் சுன்னாகம் பகுதிக்கு கொள்ளையடித்த நகைகளை விற்பதற்காக வந்திருந்த பிரதான சந்தேக நபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை விசாரணை செய்தபோது திருடிய நகைகளை உருக்கி கடைகளுக்கு விற்கும் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் இக்குழுவின் ஏனைய சந்தேக நபர்கள் தப்பி சென்று தாங்கள் பாவித்த தொலைபேசி இலக்கங்களை மாற்றி மறைவாக வாழ்வதாக பொலிஸார் கூறினர். மீட்கப்பட்ட நகைகள் 57 பவுணுக்கு அதிகமானது.

மீட்கப்பட்ட நகைகள் உருக்கப்பட்டமையால் சில நகைகள் அடையாளம் காணப்படாமல் உள்ளன.

மீட்கப்பட்ட நகைகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரான சுன்னாகம் அளவெட்டி கிழக்கு பகுதியை சேர்ந்த சிக் புக் என்று செல்லமாக   அழைக்கப்படும்    தவராசா தயாபரனின் (வயது-24) ஆலோசனையில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த மற்றுமொரு சந்தேக நபரான வீரசிங்கம் சிவானந்தனினால் (வயது-45) யாழ் நகர்ப்பகுதி நகைக்கடைகளில் விற்கப்பட்டனவாகும்.

இவர் பிரதான சந்தேக நபரினால் கொள்ளையடிக்கப்படும் நகைகளை பெற்று அதனை உருக்கி கடைகளுக்கு விற்பனை செய்பவராவார்.

பொலிஸார் 3 மாதங்களாக விசாரணை மேற்கொண்டு சந்தேக நபர்களது தொலைபேசி இலக்கங்களை பின்தொடர்ந்து தகவல்களை பெற்ற பின்னர் இவர்களை கைது செய்துள்ளனர்.

இது தவிர குறித்த குழுவில் பிரதான சந்தேக நபர் மாத்திரம் ஒரு தொலைபேசி இலக்கத்தை மாத்திரம் பாவித்துள்ளார். இவரை தாவடி பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

padankalஇவருக்கு 3 மனைவியர் உள்ளதாகவும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.

அக்குழுவில் உள்ள ஏனைய நால்வரும் மறைமுகமாக வாழ்ந்து வருவதுடன் தொலைபேசி இலக்கங்களை அடிக்கடி மாற்றி பயன்படுத்தி வருவதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான தொடர் கொள்ளையில் ஈடுபட்ட போது இக்குழுவினர் வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டமையினால் பொதுமக்கள் மீளவும் ஆவா குழுவினர் வந்து விட்டனர் என கதைக்கின்றனர்.

nakaiஇது தவறு என பொலிஸார் குறிப்பிடுவதுடன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் வாள் வெட்டில் ஈடுபட்ட ஆவா குழுவை சேர்ந்த ஐவர் தற்போது சிறையில் இருக்கின்றனர்.

இதர உறுப்பினர்கள் தப்பி சென்று அக்குழு இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. எனவே அது குறித்து எவ்வித அச்சமும் மக்கள் கொள்ளத்தேவையில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அத்துடன் கொள்ளை தொடர்பிலான தகவல்கள் தெரிந்திருந்தால் தந்துதவுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் மேற்படி கொள்ளை சந்தேக நபர் கைது நடவடிக்கையில் சுன்னாகம் பிரதம பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.எல் துஸ்மந்த தலைமையிலான பெரும் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பியசாந்த,தேவதயாளன்,ஜேசுராஜ்,ஹேரத்,நாமல்,அபயசேகர உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களும் பங்கெடுத்தனர்.

இக்கொள்ளையில் ஈடுபட்ட சந்தேக நபரிடம் இருந்து தங்க நகைகளை வாங்கிய நகை கடை உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள பொலிஸ் தரப்பு கவனம் செலுத்தியுள்ளது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

November 2020
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com