யாழில் முதலாவதாக கொரோனா தொற்றுக்கு இலக்கானவர் வீடு திரும்பினார்

யாழில். கொரோனா தொற்றுக்கு இலக்காகி முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபர் சுமார் 65 நாள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
புதிதாக கட்டட ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்வது தொடர்பாக சுவிஸ் நாட்டிலிருந்த வந்த மத போதகருடன் பழகிய தாவடி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி கொரோனோ தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கொழும்பில் சுமார் 65 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளார்.
குறித்த நபருக்கு நீரிழிவு நோய் தாக்கம் இருந்தமையினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்த காரணத்தால் நீண்ட கால சிக்கிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்படத்தக்கது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment