எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் 5 இலட்சத்து 239 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ள 8 ஆவது பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு காங்கேசன் துறைத் தேர்தல் தொகுதியில் 63 ஆயிரத்து 217 பேரும், கோப்பாய்த் தொகுதியில் 55 ஆயிரத்து 891 பேரும்,மானிப்பாய்த் தொகுதியில் 54 ஆயிரத்து 567 பேரும், சாவகச்சேரித் தொகுதியில் 51 ஆயிரத்து 702 பேரும்,வட்டுக்கோட்டைத் தொகுதியில் 47 ஆயிரத்து 621 பேரும்,
நல்லூர்த் தொகுதியில் 46 ஆயிரத்து 699 பேரும்,உடுப்பிட்டித் தொகுதியில் 39 ஆயிரத்து 204 பேரும்,பருத்தித் துறையில் 36 ஆயிரத்து 138 பேரும்,யாழ்ப்பாணம் தொகுதிpயில் 33 ஆயிரத்து 50 பேரும்,ஊர்காவற்துறைத் தொகுதியில் 22 ஆயிரத்து 57 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
திகாமடுள்ள மாவட்டத்தில் 4,65,757 பேர் வாக்களிக்கத் தகுதி
எதிர்வரும் பொதுத் தேர்தலில் திகாமடுள்ள மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் நான்கு தொகுதிகளிலும் 4 இலட்சத்து 65 ஆயிரத்து 757 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்கள் வாக்களிக்கவென 464 நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திலின விக்ரமரட்ன தெரிவித்தார்.
இதன்படி அம்பாறை தேர்தல் தொகுதியில் 1,61,999 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 80,357 பேரும் கல்முனைத் தேர்தல் தொகுதியில் 71,257 பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 1,52,147 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அம்பாறை தொகுதியில் 160 வாக்களிப்பு நிலையங்களும் சம்மாந்துறைத் தொகுதியில் 87 வாக்களிப்பு நிலையங்களும் கல்முனைத் தொகுதியில் 66 வாக்ளிளப்பு நிலையங்களும் பொத்துவில் தொகுதியில் 151 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம்
அம்பாறை மாவட்டம் (Ampara District) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது.
அம்பாறை நகரம் இதன் தலைநகரமாகும். இந்நகரம் இலங்கைத் தலைநகரமான கொழும்பிலிருந்து 320 கிலோமீற்றார் தூரத்தில் அமைந்துள்ளது.
முஸ்லிம்கள், தமிழர், சிங்களவர், ஆகிய மூவினத்தவரும் இந்நகரத்தில் வசிக்கினறன்ர். அம்பாறை மாவட்டம் 4 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 504 கிராமசேவகர் பிரிவுகளையும் 19 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை அங்கு வாழும் மொத்தச் சனத்தொகையில் 44.0 வீதமானோர் முஸ்லிம்களாவர். சிங்களவர்கள் 37.5 வீதம், இலங்கைத் தமிழர்கள் 18.3 வீதமாகும்.
வரலாறு
இவற்றுடன் பதுளை மாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மகா ஓயா, பதியத்தலாவை என்பவற்றுடன் இணைத்து அம்பாறை எனும் மாவட்டம் உருவக்கப்பட்டது.[1]