ilakkiyainfo

ருத்ரமா தேவி படத்துக்காக ரூ 5 கோடியில் செய்யப்பட்ட தங்க நகைகள் விற்பனைக்கு!

ருத்ரமா தேவி படத்துக்காக ரூ 5 கோடியில் செய்யப்பட்ட தங்க நகைகள் விற்பனைக்கு!
March 01
21:12 2015
ருத்ரமா தேவி படத்துக்காக ரூ 5 கோடி செலவில் செய்யப்பட்ட பண்டைய பாணியிலான தங்க நகைகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். தெலுங்கு பட உலகின் முன்னணி இயக்குநர் குணசேகரன் உருவாக்கி வரும் சரித்திரப் படம் ருத்ரமா தேவி. தெலுங்கு சினிமா உலகம் பார்த்திராத பிரமாண்ட படைப்பாக உருவாகி வருகிறது.28-1425107977-anushka-rudramadevi-6090-jpg

அனுஷ்கா
ராணி ருத்ரமா தேவியாக இதில் நடித்துள்ளார் அனுஷ்கா. அல்லு அர்ஜூன், ராணா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், சுமன், விஜயகுமார், ‘மெட்ராஸ்’ பட நாயகி கேத்தரின் தெரேசா, ஹம்சா நந்தினி, அதிதி செங்கப்பா என முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
28-1425107957-anushka-holds-parihara-pujai-in-rudramma-devi-temple3-600

பிரமாண்ட செட்கள்
ஒரிசாவில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் இப்படத்திற்காக எடுக்கப்பட்ட போர்க்களக் காட்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான துணை நடிகர்கள் பங்குகொள்ள பிரம்மாண்டமாக படமாக்கியுள்ளனர். அரண்மனை, தர்பார், பிரம்மாண்டமான கோவில், மாபெரும் கடைவீதி, குளம் என 16-க்கும் மேலான அரங்கங்களை தோட்டாதரணி அமைத்து கொடுத்துள்ளார்.
28-1425107983-rudrama-devi-movie-600

3டி
முழுக்க முழுக்க ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களின் ஈடுபாட்டோடு 3 டி வேலைகள் நடைபெறுகிறது. இதில் 110-க்கும் மேலான கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பலகோடிகள் செலவு செய்துள்ளனர்.
28-1425107992-rudrama-devi-movie-stills-6

சென்னையில் தயாரான தங்க நகைகள்
இந்த படத்திற்காக சென்னையில் உள்ள என்.ஏ.சி. நகைக் கடையில் ஐந்து கோடி ரூபாய் செலவில் ருத்ரமாதேவிக்காக தங்க ஆபரணங்கள், அன்றைய கலை நுணுக்கத்தோடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டன.
shetty1415252858

விற்பனை
அனுஷ்கா அணிந்து நடித்த இந்த ருத்ரமாதேவி நகைகள் என்.ஏ.சி. நகைக் கடையில் பொதுமக்களுக்கு விற்பனைக்கு வரவிருக்கிறது.
28-1425108064-ilayaraja-600-jpg

இளையராஜா
தோட்டாதரணிதான் படத்துக்கான செட்களை அமைத்துள்ளார். அஜயன் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, வசனம் பாடல்களை பா.விஜய் எழுதுகிறார். இளையராஜா இசையமைக்கிறார்.
28-1425107957-anushka-holds-parihara-pujai-in-rudramma-devi-temple3-600

தேனாண்டாள் பிலிம்ஸ்
கதை, திரைக்கதை எழுதி குணசேகர் இயக்கியுள்ளார். ‘ருத்ரமா தேவி’ படத்தை என்.ராமசாமி தனது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் தமிழில் வெளியிடுகிறார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com