வெலிகடை சிறைச்சாலைக்குள் பூனையின் ஊடாக ஹெரோயின் போதைப்பொருள் கொண்டு செல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெலிகடை சிறைச்சாலையின் முன்னால் உலாவிக்கொண்டிருந்த பூனையொன்றை சிறைச்சாலை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பிடித்து சோதனைக்கு உட்படுத்திய போதே இந்த விடயம் வெளியாகியுள்ளது.

இதன்போது குறித்த பூனையின் கழுத்தில் 1 கிராம் 2 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொள் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பூனையை பொரள்ளை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக சிறைச்சாலை ஆணைக்குழு சந்தன ஹேகநாயக்க தெரிவித்துள்ளார்.

 

Share.
Leave A Reply