ilakkiyainfo

‘வெளிய தெரிஞ்சா குடும்ப மானம் போயிடும்’.. பெற்ற மகள்களுக்கு தாய் செய்த கொடூரம்.. அதிர்ந்துபோன குடும்பம்..!

‘வெளிய தெரிஞ்சா குடும்ப மானம் போயிடும்’.. பெற்ற மகள்களுக்கு தாய் செய்த கொடூரம்.. அதிர்ந்துபோன குடும்பம்..!
April 25
06:06 2020

திருச்சி அருகே பெற்ற மகள்களுக்கு தாய் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சமுத்திரம் காந்திநகரைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி சாந்தமீனா. இவர்களுக்கு லோகநாதன் (15), கோகிலா (13), லலிதா (11) என்ற மூன்று பிள்ளைகள்.

தனது கணவரின் சகோதர்களுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை சாந்தமீனா வேலைக்கு சென்றிருந்த நிலையில், அவரின் இரண்டு மகள்களும் வீட்டுக்குள் மயக்கமடைந்து கிடந்துள்ளனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே அவர்கள் இருவரையும் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைகாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சிறுமிகள் இருவரும் ஒன்றன்பின் ஒன்றாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனை அடுத்து சிறுமிகளின் தாய் சாந்தமீனா மணப்பாறை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அங்கு போலீசாரிடம் சாந்தமீனா அளித்த வாக்குமூலத்தில், ‘நாங்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறோம்.

எனது கணவரின் சகோதரர் வைத்திருக்கும் பணம் அவ்வப்போது காணாமல் போனது. அதை எனது மகள்தான் எடுத்தனர்.

இது வெளியே தெரிந்தால் குடும்ப மானம் போய்விடும் என்ற பயத்தில் சிறுமிகளுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தேன்’ என தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து சாந்தமீனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com