இலங்­கையில் யுத்தம் முடிந்து ஐந்து வரு­டங்­க­ளா­கின்ற சூழலில் இரா­ணுவ சுற்றி வளைப்பு ஒன்றில், விடு­த­லைப்­பு­லி­களை மீளு­ரு­வாக்கம் செய்ய முயன்­ற­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட மூன்­றுபேர் சுட்டுக் கொல்­லப்­பட்­டுள்­ளார்கள்.

கோபி, தேவியன், அப்பன் என அழைக்­கப்­ப­டு­ப­வர்­க­ளாக சித்­த­ரிக்­கப்­பட்­டுள்ள செல்­வ­நா­யகம் கஜ­தீபன், சுந்­த­ர­லிங்கம் கஜீபன், நவ­ரட்னம் நவதீபன் ஆகி­யோரே இரா­ணு­வத்­தி­னரின் துப்­பாக்கிச் சூட்­டுக்குப் பலி­யா­கி­யுள்­ளார்கள்.

சுமார் இரண்டு மாதங்­க­ளாக இவர்கள் மூவரும் தேடப்­பட்டு வரு­வ­தா­கவும், அவர்கள் பற்­றிய தகவல் தெரி­விப்­போ­ருக்கு பத்து இலட்சம் ரூபா சன்­மானம் வழங்­கப்­படும் என்ற அறி­வித்தல் கொண்ட சுவ­ரொட்­டிகள், அவர்­க­ளு­டைய படங்­க­ளுடன் நாட்டின் வடக்­கு கிழக்கு மற்றும் தலை­நகர் கொழும்பு ஆகிய இடங்­களில் ஒட்­டப்­பட்­டி­ருந்­தன.

கடந்த 2009 ஆம் ஆண்டு விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­ட­தை­ய­டுத்து, விடு­த­லைப்­பு­லிகள் இலங்­கையில் முற்­றாக ஒழிக்­கப்­பட்­டு­விட்­ட­தாக அர­சாங்கம் அறி­வித்­தி­ருந்­தது.

அதன் பின்னர், நான்கு வரு­டங்­க­ளுக்கு மேலாக நாட்டில் பயங்­க­ர­வாதச் சம்­ப­வங்கள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை என்று அர­சாங்கம் பெரு­மை­யோடு கூறி வந்­துள்­ளது.

முப்­பது வரு­டங்­க­ளாக நாட்டில் நில­விய பயங்­க­ர­வாதம் ஒழிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, நாடு ஆங்­கி­லே­ய­ரு­டைய ஆட்­சியில் இருந்து 1948 ஆம் ஆண்டு சுதந்­திரம் பெற்ற பின்னர், நாட்டை ஆள்­வ­தற்குப் பெரும் துணை­யாக நீண்ட கால­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வந்த அவ­ச­ர­காலச் சட்­டத்தை அர­சாங்கம் நீக்­கி­யி­ருந்­தது.

வரை­ய­றை­யற்ற முறையில் மோச­மான அதி­கா­ரங்­களைக் கொண்­டி­ருந்த அவ­ச­ர­காலச் சட்டம் நீக்­கப்­பட்ட போதிலும், அதன் இர­ணைப்­பிள்­ளை­யாக இருந்த பயங்­க­ர­வாதச் சட்டம் நீக்­கப்­ப­ட­வில்லை.

மாறாக அவ­சர காலச் சட்­டத்தின் முக்­கிய அதி­கா­ரங்கள் அல்­லது பிரி­வுகள் பயங்­க­ர­வாதச் சட்­டத்­துடன் இணைக்­கப்­பட்டு, அந்தச் சட்டம் மேலும் வலு­வு­டை­ய­தாக மாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது வேறு விடயம்.

நாட்டில் பயங்­க­ர­வா­தமே இல்லை என்று அர­சாங்­கமே கூறும் அள­வுக்கு, யுத்­தத்தின் பின்னர், நிலை­மை­களின் தீவிரம் தணிந்­தி­ருந்­தது. அந்நிய­ரி­ட­மி­ருந்து நாடு சுதந்­திரம் அடைந்த பின்னர், தமிழ் மக்­க­ளுக்கு உரிய ஆட்­சி­ய­தி­கார உரி­மை­களும், அர­சியல் உரி­மை­களும், மாறி மாறி ஆட்­சிக்கு வந்த பேரி­ன­வாத போக்­கு­டைய அர­சாங்­கங்­க­ளினால் படிப்­ப­டி­யாக இல்லாமல் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

தமது உரி­மை­க­ளுக்­காக தமிழ் மக்கள் அஹிம்சை வழியில் கொடுத்­து­வந்த குரல்கள் நசுக்­கப்­பட்டு, அள­வுக்கு அதி­க­மான அடக்­கு­மு­றை­களை அர­சுகள் பிர­யோ­கித்து வந்­தன. அதன் உச்ச கட்­ட­மாக 1983 ஆம் ஆண்டு. கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட இனக்­க­ல­வ­ரத்­தின்­போது, தமிழ் மக்கள் இரக்கமின்றி அடித்து நொறுக்­கப்­பட்­டார்கள்.

அவர்­க­ளு­டைய சொத்­துக்கள் எரித்து நாச­மாக்­கப்­பட்டு, நாட்டின் தலை­நகர் கொழும்­பி­லி­ருந்தும், ஏனைய தென்­ப­கு­தி­க­ளி­லி­ருந்தும் வடக்கு நோக்கி விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டார்கள்.

இந்த மோச­மான அரச பயங்­க­ர­வா­தத்­தை­ய­டுத்தே, தமிழ் மக்­களின் பாது­காப்­புக்­கா­கவும், வாழ்க்கை இருப்­புக்­கா­கவும் தமிழ் இளை­ஞர்கள் முழு அளவில் ஆயுதப் போராட்­டத்தில் குதித்­தி­ருந்­தார்கள்.

அர­சாங்­கத்­தினால் பயங்­க­ர­வாதம் என சித்­த­ரிக்­கப்­ப­டு­கின்ற நட­வ­டிக்­கை­யா­னது, அரச பயங்­க­ர­வாதம் பெற்­றெ­டுத்த பிள்ளை. உண்­மையில் அது பயங்­க­ர­வா­த­மல்ல. இந்த நாட்டில் தமிழ் மக்கள் உயிர்­வாழ்­வ­தற்­கு­ரிய அடிப்­படை உரி­மைக்­கான போராட்­ட­மாகும்.

thevian_appan_gopiஆனால் அது அர­சாங்­கத்­தினால் பயங்­க­ர­வா­த­மாக மாற்­றப்­பட்டு, உலக நாடுகள் பலவும் அதனை ஏற்­றுக்­கொண்­டு­விட்­டது. பயங்­க­ர­வா­தி­க­ளாக உரு­வ­கிக்­கப்­பட்­டி­ருந்த விடு­த­லைப்­பு­லிகள் இல்­லாத நிலை­யிலும், வெளி­நா­டு­களில் உள்ள விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­பி­னரும், அவர்­களின் ஆத­ர­வா­ளர்­களும் நாட்டில் பயங்­க­ர­வா­தத்தை மீளு­ரு­வாக்க முயற்­சிக்­கின்­றார்கள் என்று அர­சாங்கம் குற்றம் சுமத்­தி­யி­ருக்­கின்­றது. இது வெறும் குற்­றச்­சாட்­டல்ல. பார­தூ­ர­மான பழி­சு­மத்­த­லாகும்.

உள்­நோக்கம்

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான இறுதி யுத்­தத்­தின்­போது, யுத்த பிர­தே­சத்தில் சிக்­கி­யி­ருந்த தமிழ் மக்கள் சொல்­லொ­ணாத் துன்ப துய­ரங்­க­ளையும், பேரி­டர்­க­ளையும் சந்­தித்­தார்கள்.

விடு­த­லைப்­பு­லிகள் தமிழ் மக்­களைக் கேட­ய­மாகப் பயன்­ப­டுத்தி இரா­ணு­வத்­திற்கு எதி­ரான தாக்­கு­தல்­களைத் தீவி­ரப்­ப­டுத்­தி­யி­ருந்­தார்கள் என்றும், விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான இரா­ணு­வத்தின் தாக்­கு­தல்­களில் இருந்து தப்­பு­வ­தற்­காக, அவர்கள் பொது­மக்­களைக் கேட­ய­மாகப் பயன்­ப­டுத்­தி­னார்கள் என்றும் அர­சாங்கம் கூறி­யி­ருந்­தது.

ஆயினும், வட­மேற்கே மன்னார் மடு பிர­தே­சத்தில் இருந்தும், தெற்கே வவு­னி­யாவில் இருந்தும் இரு முனை­களில் விடு­த­லைப்­பு­லி­களின் கட்­டுப்­பாட்டில் இருந்த வன்­னிப்­பி­ர­தே­சத்தின் மீது பெரும் படை­யெ­டுப்பை மேற்­கொண்ட அர­சாங்கம், 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடியும் வரையில், விடு­த­லைப்­பு­லி­களின் பிர­தே­சத்தின் உள்ளே இருந்த பொது­மக்கள், ஆபத்­தின்றி இரா­ணுவ கட்­டுப்­பாட்டுப் பிர­தே­சத்தின் உள்ளே வரு­வ­தற்­கான பாது­காப்­பான பாதை­யொன்றைத் திறக்­கவே இல்லை.

மாறாக, விடு­தலைப்பு­லி­களின் கட்­டுப்­பாட்டுப் பிர­தே­சத்தில் இருந்து தமது உயிர்­களைப் பணயம் வைத்து வெளி­யேறி வந்த பொது­மக்கள் மீது இரா­ணுவம் தாக்­கு­தல்­க­ளையே நடத்­தி­யது. இதனால் பலர் படு­கா­ய­ம­டைந்­தார்கள்.

பலர் உயி­ரி­ழந்­தார்கள். சிலர் மாத்­தி­ரமே உயிர் தப்பிப் பிழைத்­தார்கள். அதே­நேரம் விடு­த­லைப்­பு­லி­களும் தமது பிர­தே­சத்­தை­விட்டுச் செல்­லா­த­வாறு தடை­க­ளை­யேற்­ப­டுத்தி மீறிச் செயற்­பட்­ட­வர்கள் மீது துப்­பாக்­கிப்­பி­ர­யோகம் செய்­த­தையும் மறுக்க முடி­யாது.

பயங்­க­ர­வா­திகள் என தன்னால் சித்­த­ரிக்­கப்­ப­டு­கின்ற விடு­த­லைப்­பு­லி­க­ளி­ட­மி­ருந்து தமிழ் மக்­களை மீட்­ப­தற்கு உண்­மை­யா­கவே அர­சாங்கம் விரும்­பி­யி­ருந்­தி­ருக்­கு­மே­யானால், யுத்த பிர­தே­சத்தில் இருந்து பொது­மக்கள் தப்பி வரு­வ­தற்­கான வழி­யொன்றைத் திறந்­தி­ருக்கும். ஆனால் அதனை அரசு செய்­ய­வில்லை.

மாறாக, யுத்த மோதல்கள் நடை­பெற்ற பிர­தே­சத்தில், விடு­த­லைப்­பு­லி­களின் கட்­டுப்­பாட்டுப் பகு­தியில் பாது­காப்பு வலயம் என சில இடங்­களைக் குறிப்­பிட்டு, அந்தப் பகு­திகள் மீது தாக்­குதல் நடத்­தப்­ப­ட­மாட்­டாது என அறி­வித்­தி­ருந்­தது.

vanni_11ஆனால், தனக்கு எதி­ரி­யா­கிய விடு­த­லைப்­பு­லி­களின் கட்­டுப்­பாட்டில் உள்ள பகு­திக்கு வெளியில் இருந்து சண்டை பிடித்துக் கொண்டே, அவர்களு­டைய பகு­தியில் தானே   ஏற்­ப­டுத்­திய   பாது­காப்பு வல­யத்தில் இருந்து விடு­த­லைப்­பு­லிகள் தாக்­குதல் நடத்­தி­னார்கள் எனக் கூறி அந்தப் பகுதிகள் மீது எறி­க­ணை­களை வீசி­யது.

இதனால் பொது­மக்கள் பெரு­ம­ளவில் கொல்­லப்­பட்­ட­தா­கவும், பலர் படு­கா­ய­ம­டைந்­த­தா­கவும் அர­ச­ப­டைகள் மீது குற்றம் சுமத்­தப்­பட்டிருக்கின்றது.

யுத்த மோதல்கள் இடம்­பெ­று­கின்ற பிர­தே­சத்தின் உள்­ளே­யி­ருக்கும் பொது­மக்­களை வெளியில் வரு­வ­தற்கு அனு­ம­திக்­காமல், கொடூ­ர­மான யுத்த மோதல்கள் இடம்­பெ­று­கின்ற சந்­தர்ப்­பத்தில், அவர்­களைப் பாது­காக்கப் போகின்றேன் எனக் கூறி, எதி­ரியின் பிர­தே­சத்தின் உள்ளே பாதுகாப்பு வல­யத்தை ஏற்­ப­டுத்­திய அர­சாங்­கத்தின் உண்­மை­யான நோக்கம் அங்­குள்ள பொது­மக்­களைக் காப்­பாற்­று­வ­தற்­காக அல்ல என்­பது ஆய்­வா­ளர்­க­ளு­டைய கருத்­தாகும்.

எதி­ரியின் பிர­தே­சத்தில் பாது­காப்பு வல­யத்தை உரு­வக்­கி­னாலும், அங்­கி­ருந்து விடு­த­லைப்­பு­லிகள் தாக்­கு­தல்கள் நடத்­து­வார்கள் என்­பதைத் தெளி­வாகத்   தெரிந்து கொண்டு, அந்த மக்கள் மீதே தாக்­குதல் நடத்­து­வதன் ஊடாக விடு­த­லைப்­பு­லி­க­ளுக்குப்   பெரும் நெருக்­க­டியை ஏற்படுத்துவதே அர­சாங்­கத்தின் நோக்­க­மாக இருந்­தது என்றும் ஆய்­வா­ளர்கள் கரு­து­கின்­றார்கள்.

மொத்தத்தில், தமிழ் மக்­களின் நியா­ய­மான அர­சியல் உரி­மைக்­கான போராட்­டத்தைச் சிதைத்து, சிங்­கள பௌத்த நாடாக இதனை முழு அளவில் உரு­வாக்க வேண்டும் என்ற பேரி­ன­வாத சிந்­த­னையைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­கான தொடர் நட­வ­டிக்­கையின் முக்­கிய அம்­ச­மா­கவே, அர­சாங்கம் விடு­த­லைப்­பு­லி­களைப் பயங்­க­ர­வா­த­மாகச் சித்­த­ரித்­தி­ருந்­தது.

இப்­போதும் அதே பயங்­க­ர­வா­தத்தை முதன்­மைப்­ப­டுத்தி பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வருகின்றது. தமிழ் மக்­களின் மீது உண்மை­யான அக்­க­றையும், அவர்­க­ளையும் இந்த நாட்டின் பிர­ஜை­க­ளாக, உலக ஜனநா­யக நாடு­களில் உள்­ள­து­போன்று, பெரும்­பான்மை இன மக்களுக்கு சரி­நி­க­ராக உரி­மை­க­ளோடு  வாழச் செய்ய வேண்டும்  என்று இந்த அர­சாங்கம் விரும்­பி­யி­ருந்தால், யுத்தம் முடி­வ­டைந்த கையோடு, அதி­கா­ரங்­களை, நிரந்­த­ர­மாகப் பகிர்ந்­த­ளிப்­ப­தற்­கான அர­சியல் தீர்­வொன்றைக் காண்­ப­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருக்கும்.

யுத்தம் முடி­வ­டைந்து ஐந்து வரு­டங்­க­ளா­கின்ற நிலை­யிலும், அர­சியல் தீர்வு பற்­றியோ, யுத்­தத்தின் பின்­ன­ரான சம­ர­சத்தை ஏற்­ப­டுத்­துவது­ பற்­றியோ, பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுடன் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது பற்­றியோ அர­சாங்கம் சிந்­திக்­க­வில்லை. அக்­கறை கொள்­ள­வு­மில்லை.

0002மீண்டும் பயங்­க­ர­வா­தமா…….?

அதற்குப் பதி­லாக, யுத்­தத்­தினால் எல்­லா­வற்­றையும் இழந்து எதிர்­காலம் பற்­றிய திட­மான நம்­பிக்­கை­யற்­ற­வர்­க­ளாக இருக்­கின்ற மக்கள் மத்­தியில் இருந்து மீண்டும் பயங்­க­ர­வாதம் உரு­வா­கு­வ­தற்­கான ஏது­நிலை உரு­வா­கி­விடக் கூடாது என்று கூறி, அத்­த­கைய நிலை­மையைத் தடுப்­ப­தற்­காக யுத்தம் நடை­பெற்ற பிர­தே­சத்தை இரா­ணுவ மய­மாக்­கி­யி­ருக்­கின்­றது.

இறுக்­க­மான இரா­ணுவச் சூழல் ஒன்றை வைத்துக் கொண்டே, வெளி­நா­டு­களில் உள்ள விடு­த­லைப்­பு­லி­களும், விடு­த­லைப்­பு­லி­களின் ஆத­ர­வா­ளர்­களும் இங்கு விடு­த­லைப்­பு­லி­களை மீண்டும் ஒன்­றி­ணைக்­கப்­பார்க்­கின்­றார்கள்.

அதற்­காக பெரு­ம­ளவு பணத்தை சில­ருக்கு அனுப்பி வைத்­தி­ருக்­கின்­றார்கள். இதன் மூலம் மீண்டும் நாட்டில் பயங்­க­ர­வா­தத்தை உரு­வாக்­கவும், யுத்தம் முடி­வ­டைந்­த­பின்னர், நாட்டில் ஏற்­பட்­டுள்ள இன ஐக்­கி­யத்தைக் குலைத்து பிரச்­சி­னை­களைத் தூண்­டி­விட முயற்­சிக்­கின்­றார்கள் எனக் கூறி பலரை பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் சந்­தே­கத்­தின்­பேரில் கைது செய்­தி­ருக்­கின்­றது. கைது செய்து வரு­கின்­றது.

இந்த நட­வ­டிக்­கையின் ஒரு அங்­க­மா­கவே கோபி, தேவியன், அப்பன் என்ற மூவரும் தேடப்­ப­டு­கின்­றார்கள் என்ற பிர­சாரம் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.

download1514.jpg.pagespeed.ce.O5BoqMHowYவிடு­த­லைப்­பு­லி­களின் தலை­வர்­க­ளாக வெளி­நா­டு­களில்  இருந்து செயற்­பட்டு வரு­வ­தாகக் கூறப்­ப­டு­கின்ற நெடி­யவன் மற்றும் விநா­யகம் ஆகிய இரு­வரின் உத்­த­ர­வுக்­க­மை­வாக இந்த மூவரும் விடு­த­லைப்­பு­லி­களை மீண்டும் அணி­சேர்ப்­ப­தற்குச் செயற்­பட்டு வந்­தார்கள் என்று அர­சாங்கம் குற்றம் சுமத்­தியிருந்­தது.

ஆனாலும், தேடப்­ப­டு­கின்­றார்கள், தேடப்­ப­டு­கின்ற இவர்கள் தொடர்­பான தக­வல்­களை வழங்­கு­வோ­ருக்குப் பத்து இலட்சம் ரூபா வெகு­ம­தி­யாக வழங்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்த சுவ­ரொட்­டி­களில் இவர்கள் பயங்­க­ர­வாதம் மீண்டும் தலை­யெ­டுப்­பது தொடர்­பாகத் தேடப்­ப­டு­வ­தாகக் கூறப்­ப­ட­வில்லை.

மாறாக இவர்கள் பல்­வேறு குற்­றச்­செ­யல்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் என்றே குறி­ப்­பி­டப்­பட்­டி­ருந்தது. இரா­ணுவ பேச்­சா­ளரும், பொலிஸ் பேச்சா­ளரும், மூச்­சுக்கு மூச்சு இவர்கள் பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­பட்­டி­ருப்­ப­தற்­கா­கவே தேடப்­பட்­டார்கள் என கூறு­கின்­றனர்.

ஆனால் சுவ­ரொட்­டிகள் மூல­மான பொது அறி­வித்­தலில் அவ்­வாறு தெரி­விக்­கப்­ப­டா­தது ஏன் என்று பலரும் வினா எழுப்­பி­யி­ருக்­கின்­றார்கள். குற்­றச்­செ­யல்­க­ளுக்­காகத் தேடப்­ப­டு­ப­வர்­க­ளுக்கும், நாட்டில் மீண்டும் பயங்­க­ர­வா­தத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடுபட்டிருப்பதாகத் தெரி­வித்து தேடப்­ப­டு­ப­வர்­க­ளுக்கும்   இடையே மலைக்கும் மடு­வுக்கும் இடை­யி­லான வித்­தி­யாசம் இருக்­கின்­றது.

எனவே, உண்­மை­யா­கவே நாட்டில் மீண்டும் பயங்­க­ர­வா­தத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றதா என்ற கேள்வி வலு­வோடு எழுந்­தி­ருப்­பதைக் காணவும் உண­ரவும் முடி­கின்­றது.

அதே­நேரம் விடு­த­லைப்­பு­லி­களை மீண்டும் அணி சேர்க்கும் முயற்­சிக்கு, முக்­கிய உள்ளூர் தலை­வர்­க­ளாகச் செயற்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கின்ற கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூவரும் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் முன்னாள் உறுப்­பி­னர்­க­ளாக இருந்­தார்­களா என்­ப­து­பற்றி சரி­யான தக­வல்கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

தேவியன் என்று அழைக்­கப்­ப­டு­ப­வரின் புகைப்­ப­ட­மா­னது, முன்னர் ஊட­கங்­களில்  வெளி­வந்­தி­ருந்த விடு­த­லைப்­பு­லி­களின் வான்­படை உறுப்­பினர் ஒரு­வ­ரு­டைய உரு­வப்­ப­டத்தை ஒத்­த­தாக இருக்­கின்­றது. உண்­மை­யி­லேயே அவர்தான் இவரா என்­பதும் தெரி­ய­வில்லை.

கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூவர் தொடர்­பா­கவும் அர­சாங்கம் கூறி­யுள்ள, கூறி வரு­கின்ற தக­வல்கள் தமிழ் மக்கள் மத்­தியில் பெரும் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றன.

இறுதி யுத்­தத்­தின்­போது அனு­ப­வித்த ஊழிக்­கா­லத்­தை­யொட்­டிய பயங்­க­ர­மான யுத்த அனு­ப­வங்­க­ளினால் ஏற்­பட்ட மனப் பாதிப்­பு­களில் இருந்து யுத்த மோதல்கள் இடம்­பெற்ற பிர­தே­சத்தைச் சேர்ந்த மக்கள் இன்னும் மீள­­வில்லை.

அவர்­க­ளுக்கு ஏற்­பட்டுள்ள உளப்­பா­திப்­பு­களைப் போக்­கு­வ­தற்­கு­ரிய சரி­யான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் எடுக்­க­வில்லை. அதற்­கான சூழ­லையும் அரச தரப்­பினர் உரு­வா­க்­க­வில்லை.

நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என கூறிக்­கொண்டு, எதிர்­ம­றை­யான காரி­யங்­க­ளையும், யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­களின் மனங்­களை நோக­டிக்கும் செயல்­க­ளை­யுமே அவர்கள் மேற்­கொண்டு வரு­கின்­றார்கள்.

யுத்த காலத்­தி­லும் ­பார்க்க, நைந்து நலிந்து, சோர்ந்து, எதிர்­காலம் பற்­றிய நம்­பிக்­கை­யு­மில்­லாமல் நொந்து போயி­ருப்­ப­வர்­களைப் பார்த்து, உங்கள் மத்­தியில் விடு­த­லைப்­பு­லி­களை மீண்டும் அணி சேர்ப்­ப­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன, அதற்கு உங்­களில் பலர் உதவி வரு­கின்­றார்கள் என்று அர­சாங்கம் கர்ண கடூ­ர­மாகக் கூறு­கின்­றது.

நாட்டில் பயங்­க­ர­வா­தத்தை மீண்டும் உரு­வாக்­கு­வ­தற்கு உங்­களில் பலர் உத­வு­கின்­றார்கள் என்று தெரி­வித்து, பலரைக் கைது செய்து வருகின்றது.

இந்த முயற்­சி­களில்   ஈடு­பட்­டுள்­ள­வர்கள் இன்னும் இருக்­கின்­றார்கள் என கூறி, இரவும் பகலும் பொது­மக்­களைக் கண்­கா­ணிப்­ப­திலும், கால நேர­மின்றி ஊர்­களைச் சுற்றி வளைத்துத் தேடு­வ­திலும், அரச படைகள் ஈடு­பட்டு வரு­கின்­றன.

ஏற்­க­னவே பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்­குள்ளே சிக்­குப்­பட்டு, இரா­ணுவ மயப்­ப­டுத்­தப்­பட்ட இறுக்­க­மான ஒரு சூழலில் எப்­ப­டித்தான் வாழப் போகின்றோமோ என்று தெரி­யாமல், அன்­றாட வாழ்க்­கையை நடத்­து­வ­தற்கே அல்­லா­டிக்­கொண்­டி­ருக்­கின்ற மக்கள் மத்­தியில், இராணுவத்தின் முழுமை­யான கட்­டுப்­பாட்டில் உள்ள காட்டுப் பகு­தியில் மறைந்­தி­ருந்­தார்கள் எனக் கூறி (ஊட­கங்­களில் வெளி­வந்த தக­வல்­க­ளின்­படி,)

140411144208_sri_lanka_army_military__624x351_bbc_nocreditஇரண்டா­யிரம் இரா­ணு­வத்­தி­னரைக் கொண்டு ஒரு இரா­ணுவ முற்­று­கையை ஆள­ர­வ­மில்­லாத நெடுங்­கேணி வெடி­வைத்­தகல் பகு­தியில் மேற்­கொண்டு, தேடப்­பட்டு வந்­த­வர்­க­ளாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்த கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூவ­ரையும் அரசு சுட்­டுத்­தள்ளியிருக்கின்றது.

இந்தச் சம்­ப­வத்­தினால் வன்­னிப்­பி­ர­தேச மக்கள் ஆடிப்­போ­யி­ருக்­கின்­றார்கள். அதிர்ச்­சியில் இருந்து மீள முடி­யா­த­வர்­க­ளாக, யுத்த காலத்­தி­லும் ­பார்க்க மோச­மான அச்­சத்தில் மூழ்­கி­யி­ருக்­கின்­றார்கள். அடுத்­த­டுத்து என்ன நடக்­குமோ ஏது நடக்­குமோ என்று அறி­யா­த­வர்­க­ளாக திகைத்துப் போயி­ருக்­கின்­றார்கள்.

மக்­களின் இந்த உணர்­வு­களை தணிப்­ப­தற்குப் பதி­லாக அதி­க­மாக்கும் வகையில் கோபி உட்­பட மூவரும் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட இடத்­திற்கும், அனு­ரா­த­­புரம் விஜ­ய­புர பொது மயா­னத்தில் இடம்­பெற்ற அவர்­க­ளு­டைய இறு­திக்­கி­ரி­யைகள் இடம்­பெற்ற இடத்திற்கும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எவ­ரையும் இரா­ணு­வமும் பொலி­சாரும் அனு­ம­திக்­க­வில்லை.

சுட்­டுக்­கொல்­லப்­பட்ட இந்த மூவ­ரு­டனும் தொடர்­பு­களைப் பேணி வந்­த­வர்கள் பற்­றிய தக­வல்கள் கிடைத்­தி­ருப்­ப­தா­கவும், விடு­தலைப்புலி­களை மீண்டும் அணி சேர்ப்­ப­தற்கு இவர்­க­ளுக்கு உத­வி­னார்கள் என்று கரு­தப்­ப­டு­கின்ற அர­சி­யல்­வா­திகள் பற்றி விசா­ர­ணைகள் ஆரம்பிக்கப்பட்டி­ருப்­ப­தா­கவும் வெளி­யா­கி­யுள்ள தக­வல்­களும் நிலைமையை மோசமாக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

நாட்டில் பயங்­க­ர­வா­தத்தை மீண்டும் உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­களில்  கோபி உட்­பட மூவரும், ஈடு­பட்­டி­ருந்­த­தா­கவும், இதற்­காக பெரும் தொகையான பணம் பல­ருக்கு நேர­டி­யாக அவர்­க­ளு­டைய வங்கிக் கணக்­கு­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்டுள்ள­து­ பற்­றிய தக­வல்கள் கிடைத்திருப்­ப­தாகப் படை­யினர் தெரி­வித்­துள்­ளனர்.

பத்து இலட்சம், இரு­பது இலட்சம் என்று ஐம்­பது அறு­பது இலட்சம் வரை­யி­லான பணம் இதற்­காக அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் தெரிவிக் கப்பட்டிருக்கின்றது.

யுத்தம் நடை­பெற்­ற­போது, விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு புலம்­பெயர் தமி­ழர்கள் தாரா­ள­மாக உத­வி­செய்த காலத்­தில்­கூட, இந்த அள­வி­லான பணம் வழங்­கப்­ப­ட­வில்லை என்று கூறப்­ப­டு­கின்­றது.

இப்­போது ஐரோப்­பிய நாடு­களில் வேலை­வாய்ப்­புக்கள் குன்றி, அங்கு தனி மனித வரு­வாயும் பொரு­ளா­தா­ரமும் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­தாகக் கூறப்­ப­டு­கின்ற நேரத்தில் அங்­குள்­ள­வர்கள் இந்த அள­வி­லான பணத்தை எவ­ராலும் அனுப்ப முடியுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது.

மொத்­தத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில், மூன்­றா­வது தட­வை­யாக, மனித உரிமைச் செயற்­பா­டுகள் மற்றும் மானுட நேய நடவடிக்கைகள்  தொடர்பில் தனக்கு எதி­ரான பிரே­ர­ணைக்கு முகம்­கொ­டுத்து   ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் விசா­ர­ணையை எதிர்­நோக்கி, நெருக்­க­டிக்குள் சிக்­கி­யுள்ள அர­சாங்கம்….,

‘இலங்­கையில் மீண்டும் பயங்­க­ர­வாதம் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது’ என்­பதைக் காட்­டு­வ­தற்­கான நாடகம் ஒன்­றையே கோபி உட்­பட மூன்று பேரை வைத்து நெடுங்­கே­ணியில் ஆடி­யி­ருக்­கின்­றது என்ற தமிழ் அர­சி­யல்­வா­திகள் உட்­பட பல­ரு­டைய கூற்றை ஊர்­ஜி­தப்­ப­டுத்தும் வகை­யி­லேயே அரச காரி­யங்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.

ஐ.நா.வின் விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைக்க முடி­யாது என அடம்­பி­டித்துக் கொண்டு, மறு­பக்­கத்தில் நாட்டில் பயங்­க­ர­வாதம் உரு­வா­கி­யி­ருக்­கின்­றது என்­பதைப் பெரிய அளவில் வெளிச்சம் போட்டுக் காட்­டு­வதன் மூலம், இறுதி யுத்­த­கா­லத்து மனித உரிமை மீறல்­க­ளுக்குப் பதி­ல­ளிக்கப் போவ­தில்லை என்­ப­தையும், தமிழர் பிரச்­சி­னைக்கு எந்த வகை­யிலும் அர­சியல் தீர்வு காணப்­போ­வ­தில்லை என்­ப­தை­யுமே இன்றைய இலங்கை அரசாங்கத்தின் இராணுவ மற்றும் அரசியல் செல்நெறிகள் கோடி காட்டுவதாக அமைந்திருக்கின்றன.

-செல்­வ­ரட்னம் சிறி­தரன்-

Share.
Leave A Reply