யாழ்ப்­பா­ணத்தி;ல் நடை­பெற்ற ஈழ மக்கள் புரட்­சி­கர முன்­ன­ணியின் (ஈபி­ஆர்­எல்எவ்) 34 ஆவது மாநாட்டுப் பொதுக்­கூட்டம், தமிழ் மக்­களின் இன்­றைய அர­சியல் போக்கு, அதன் எதிர்­காலம் என்­பன குறித்து பல்­வேறு வினாக்­க­ளையும் எழுப்­பி­யி­ருக்­கின்­றது. அத்­துடன் பரந்­து­

பட்ட சிந்­த­னை­யையும் தூண்­டி­யி­ருக்­கின்­றது. அந்த மாநாட்டின் மகுட வாச­கமே தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் தேவையின் அடிப்­ப­டையை வலி­யு­றுத்­தி­யி­ருப்­பதைக் காண முடி­கின்­றது.

‘வலு­வான ஐக்­கி­யத்தை நோக்கி’ என்ற மகுட வாச­கத்தைக் கொண்ட இந்த மாநாட்டின் பொதுக்­கூட்­டத்தில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அங்­கத்­துவக் கட்சி­களும், ஜன­நா­யக மக்கள் முன்­னணி, சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், நவ­ச­ம­ச­மாஜ கட்சி, ஐக்­கிய சோச­லிச கட்சி போன்ற கட்­சி­களின் தலை­வர்கள், முக்­கி­யஸ்­தர்கள் கலந்து கொண்டு தங்­க­ளு­டைய கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்­தார்கள்.

10559918_661324160622624_5933551066186243267_nஇந்த மாநாட்டில் முக்­கிய பேச்­சா­ள­ராக, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தனை அழைத்­தி­ருந்­தார்கள். ஈ.பி.­ஆர்.­எல்.எவ். கட்­சியின் நிலைப்பாடு குறித்து, அதன் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் மிகவும் விளக்க­மாக எடுத்­து­ரைத்­தி­ருந்தார்.

இதற்­காக, அவர் மிக நீண்­ட­தொரு உரையை ஆற்­றி­யி­ருந்தார். கட்­சியின் தலைவர் உரை­யாற்­றி­யதன் பின்பே கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தனின் உரை முக்­கி­யப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் இடம்­பெற்­றி­ருந்­தது.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பை  மேலும் அர­சியல் பல­முள்­ள­தாக – இறுக்­க­மாக்க வேண்டும். முக்­கி­ய­மாக அதனைப் பதிவு செய்ய வேண்டும் என்­பது, ஈ.பி­ஆர்.­எல்.எவ். கட்­சியின் மாநாட்டுத் தீர்­மா­னங்­களில் மிகவும் முக்­கிய தீர்­மா­ன­மாகும்.

மாநாட்டின் முதலாம் நாள் நடை­பெற்ற பேரா­ளர்கள் கூட்­டத்தில் இந்தத் தீர்­மானம் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் இரண்டாம் நாள் யாழ்ப்­பாணம் வீர­சிங்கம் மண்­டபத்தில் நடை­பெற்ற பொதுக்­கூட்­டத்தில் மாநாட்டு தீர்­மா­னங்கள் வாசிக்­கப்­பட்­ட­போது,

இந்தத் தீர்­மா­னத்­திற்கு மண்­டபம் நிறைந்த மக்கள், அந்த அரங்கு அதிரும் வகையில் கைதட்டி, ஆர­வா­ரித்து வர­வேற்­றி­ருந்­தனர்.

கட்­சியின் தலைவர் என்ற ரீதியில் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தனது உரையில் பல்­வேறு விட­யங்­களைத் தொட்டு, கட்­சியின் நிலைப்­பாட்­டையும், கருத்­தையும் எதிர்­பார்ப்­பையும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

குறிப்­பாக இந்­தியா இலங்கைத் தமிழ் மக்­க­ளு­டைய இனப்­பி­ரச்­சி­னையில் என்ன வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்­பார்ப்­பையும், அந்த எதிர்பார்ப்பு  நிறை­வேற்­றப்­ப­டா­விட்டால் எழக்­கூ­டிய நிலை­மைகள் பற்­றியும் அவர் எச்­ச­ரித்­தி­ருந்தார்.

இந்த நிலை­மையை இந்­தியா சரி­யான முறையில் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்­பார்ப்பும் அவரால் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பைப் பதிவ செய்யும் விட­யத்தில் இது­வ­ரையில் இடம்­பெற்­றி­ருந்த நட­வ­டிக்­கைகள் பற்றி, ஆதங்­கத்­துடன் குறிப்­பிட்­டி­ருந்த சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், அந்தப் பதிவு நட­வ­டிக்கை இனியும் தாம­திக்­கப்­படக் கூடாது என்­பதை வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

இந்த மாநாடு ஈ.பி­.ஆர்­.எல்.எப். மாநாடு என்­ப­தி­லும்­பார்க்க தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் மாநா­டாக அமைந்­தி­ருக்க வேண்டும் என்ற ஆவலும் இங்கு வெளிப்­பட்­டி­ருந்­தது. தமிழ் மக்­களின் அர­சியல் சக்­தி­யா­னது வலு­வான ஐக்­கி­யமுள்­ள­தாக அமைந்­தி­ருக்க வேண்டும் என்ற காலத்தின் தேவையை மிகவும் ஆழ­மாக இந்த மாநாடு பதிவு செய்­தி­ருக்­கின்­றது.

உட­ன­டி­யா­கவும், பய­னுள்­ள­தா­கவும் செயற்­படும் வகையில் இந்தத் தேவையை தமிழ் அர­சியல் தலை­வர்கள் எந்த அள­வுக்குப் புரிந்து கொண்­டார்கள் என்­பது சரி­யாகத் தெரி­ய­வில்லை.

சம்­பந்­தனின் கருத்து

இந்த கூட்­டத்தில் உரை­யாற்­றிய கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தனும், கூட்­ட­மைப்பு பதிவு செய்­யப்­பட வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலியுறுத்தியிருந்தார். அதற்­காக முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டி­ருந்­ததை அவர் நினை­வு­ப­டுத்­தினார். அதே­நே­ரத்தில் அவர் மற்­று­மொரு விட­யத்­தயும் சுட்டிக்காட்­டி­யி­ருந்தார்.

‘தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு வெவ்வேறு கட்­சி­களை உள்­ள­டக்­கிய ஓர் அமைப்­பாக இருந்த போதிலும், எங்கள் மத்­தியில் கருத்து வேறு­பா­டுகள் இருக்­க­வில்லை என்று நான் கூற மாட்டேன். கருத்து வேறு­பா­டுகள் இருப்­பது சகஜம். அந்­த­வி­த­மான கருத்து வேறு­பா­டு­களைப் பேச்­சு­வார்த்­தை­களின் மூல­மாக, எங்­க­ளுக்­குள்­ளேயே தீர்த்து, ஒற்­று­மை­யாக நாங்கள் செயற்­பட்டு வந்­தி­ருக்­கின்றோம்.

அந்த ஒற்­றுமை இன்னும் பல­ம­டைய வேண்டும். முன்­னேற்­ற­ம­டைய வேண்டும். அது இன்னும் வலுப்­பெற வேண்டும் என்­பதில் சந்­தே­க­மி­ருப்­ப­தற்கு இடமில்லை.’ என்­பது சம்­பந்­தனின் கூற்று.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்குள் கருத்து வேற்­றுமை இருக்­கின்­றது என்­பதை அவர் இதன் மூலம் வெளிப்­ப­டை­யா­கவே ஒப்­புக்­கொண்­டி­ருக்­கின்றார். அந்த வேற்­றுமை நீக்­கப்­பட வேண்டும். கூட்­ட­மைப்பு  இன்னும் பல­ம­டைய வேண்டும் என்­பதை அவரும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார்.

கூட்­ட­மைப்பு இன்னும் சரி­யான ஒற்­று­மை­யுடன் செயற்­ப­ட­வில்லை என்ற யதார்த்தம் இதன் மூலம் சந்­தே­கத்­திற்கு இட­மின்றி உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. கூட்­டமைப்பின் செயற்­பாட்டு  நிலை­மை­களும் இதனைப் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் ஏற்­க­னவே வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.

இருந்­த­போ­திலும், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் மீதே தமிழ் மக்கள் அசை­யாத நம்பிக்கையை வைத்தி­ருக்­கின்­றார்கள். இதன் கார­ண­மா­கத்தான் அவர்கள் தேர்­தல்­களில் கூட்­ட­மைப்­புக்கே பெரும்பான்­மை­யாக வாக்­க­ளித்­தி­ருக்­கின்­றார்கள்.

இந்த ஜன­நா­யகப் பலம்தான், யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான தமிழர் அர­சியல் நிலை­மை­களை சர்­வ­தேச மட்­டத்­திற்கு கொண்டு சென்­றி­ருக்­கின்­றது. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புடன் அர­சாங்கம் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்டும்.

அத்த­கைய பேச்­சு­வார்த்­தை­களின் மூல­மாக, பிரச்­சி­னை­க­ளு­ககு ஓர் அர­சியல் தீர்வு காண வேண்டும் என்று  சர்­வ­தேச மட்­டத்தில்  இலங்கை அர­சுக்கு அழுத்தம் கொடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. எனவே, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு என்ற

அமைப்பின் மீதே தாங்கள் விசு­வாசம் வைத்­தி­ருப்­ப­தாக மக்கள் தமது ஜன­நா­யக ரீதி­யான தேர்தல் தீர்ப்­புக்­களில் வெளிப்படுத்தியிருப்பதன்காரணமாகத்தான் கூட்­ட­மைப்­புக்கு இந்த அந்­தஸ்து கிடைத்­தி­ருக்­கின்­றது.

இதனைத் தெளி­வாகச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள சம்­பந்தன் அதனை உணர்ந்து அந்தப்  பலத்தை வளர்க்க வேண்­டி­யதும், பலப்­ப­டுத்த வேண்­டி­யதும் கூட்டமைப்பில் உள்ள எல்­லோ­ரு­டைய கட­மை­யாகும். இதில் இருந்து தாங்கள் தவற முடி­யாது என்று யாழ். வீர­சிங்கம் மண்­டப மேடையில் முழங்கியிருக்­கின்றார்.

இது ஒன்றும் புதிய விட­ய­மல்ல. கூட்­ட­மைப்­புக்கு வாக்­க­ளித்து வரு­கின்ற மக்கள் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு என்­பது ஒரு கூட்டு அமைப்­பாகத் தொடர்ந்தும் இருக்­க­லா­காது. அது ஒரே­யொரு அமைப்­பாக – கட்­சி­யாகப் பரி­ண­மிக்க வேண்டும் என்று விருப்பம் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

தேர்தல் காலங்­களில் சென்ற இடங்­களில் எல்லாம் தமிழ் மக்கள் தமிழ் அர­சியல் தலை­வர்­க­ளிடம் இதனை வலி­யு­றுத்தி கூறி­யி­ருக்­கின்­றார்கள். தேர்தல் சீசன் முடிந்­த­பின்னர்,   அவ­சியம் கருதி செல்­கின்ற   இடங்­களில் எல்லாம், கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்­கின்ற ஒரு கட்­சி­யை நாங்கள் எதிர்­பார்க்­க­வில்லை. கூட்­ட­மைப்­பைத்தான் எதிர்­பார்க்­கின்றோம்.

அதன் மீதுதான் நாங்கள் நம்­பிக்கை வைத்­தி­ருக்­கின்றோம் என்­பதை தமிழ் மக்கள் தமிழ் தலை­வர்­க­ளிடம் அழுத்தி உரைத்­தி­ருக்­கின்­றார்கள். ஆகவே, கூட்ட­மைப்பைப் பலப்­ப­டுத்­து­வ­தற்கு என்ன செய்ய வேண்டும், எப்­படி செய்ய வேண்டும் என்­பதைத் தெளி­வு­ப­டுத்­து­வ­தற்கும் சம்­பந்தன் அங்கு முயன்றிருக்­கின்றார்.

‘அதை நாங்கள் செய்­கின்ற போது, எல்­லோ­ரையும் ஒன்­றாகச் சேர்த்து, எல்­லோரும் ஒரே பாதையில் செல்­லக்­கூ­டிய ஒரு நிலைமையை நாங்கள் ஏற்­ப­டுத்த வேண்டும். ஏற்க­னவே நான் கூறிய பிர­காரம், எங்கள் மத்­தியில் பல்­வேறுகட்­சிகள் இருக்­கின்­றன. அவர்கள் எல்லோரும் தங்­க­ளு­டைய தனித்­து­வத்தைப்பேணி பாது­காக்க விரும்­பு­கின்­றார்கள்.

ஆகையால் நாங்கள் எல்­லோ­ரையும் சேர்த்தே, இந்தப் பாதையில் செல்ல வேண்­டிய தேவை,கட­மைப்­பாடு எங்­க­ளுக்கு இருக்­கின்றது. அதே சமயத்தில் தமிழ்த்தேசிய கூட்­டமைப்பைப்பலப்­ ப­டுத்­து­வ­தற்­காக, தமிழ்த்தேசிய கூட்­ட­மைப்பு இன்னும் கூடிய அங்­கீ­கா­ரத்தைப் பெறு­வ­தற்காக, நாங்கள் எதை­யா­வது செய்ய வேண்­டி­யதாக இருந்தால், அதைச் செய்­யா­மலும் நாங்கள் இருக்க முடி­யாது.

ஆன­ப­டியால், இந்த இரண்டு பாதை­க­ளுக்கும் இடையில், நாங்கள் மிகவும் நுணுக்­க­மாக, மிகவும் நிதா­ன­மாக, மிகவும் பக்­கு­வ­மாக எங்­க­ளு­டைய பய­ணத்தை முன்­னெ­டுக்க வேண்­டிய ஒரு தேவை இருக்­கின்­றது.

அந்தக் கட­மையில் நாங்கள் தவ­ற­மாட்டோம். அந்தக் கட­மையில் நாங்கள் பாரிய விட்டுக் கொடுப்­புடன் செயற்­ப­டு­வ­தற்கு தயா­ராக இருக்­கின்றோம். எங்கள் மக்கள் எங்கள் மீது நம்­பிக்கை வைக்­கலாம் என்று, நான் இந்த சந்­தர்ப்­பத்தில் கூறிக்கொள்வது எங்­க­ளு­டைய கடமை என்று நாங்கள் கரு­து­கின்றோம்’ என்று தமிழ் மக்­க­ளுக்கு கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கின்றார்.

10556421_661324690622571_5700937303805555300_nஇரண்டு பாதை­க­ளுக்கு இடையில் பய­ணத்தைத் தொடர முடி­யுமா?

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை புதிய கோரிக்­கை­யல்ல. யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர், விடுதலைப்புலிகளின் பொறுப்பில் இருந்து தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தோள்­களில் தமிழ் அர­சி­யலைக் கொண்டு நடத்த வேண்­டிய பொறுப்பு வந்து இறங்­கிய சிறிது காலத்­தி­லேயே இந்த கோரிக்கை முளை­விட்­டி­ருந்­தது.

அன்று முதல் இது­பற்றி கூட்­ட­மைப்பின் கட்சித் தலை­வர்கள் மற்றும் முக்­கி­யஸ்­தர்கள் கலந்து கொள்­கின்ற கூட்­டங்­களில் பேசப்­பட்­டுள்­ளது. பல கூட்­டங்­களில் இது குறி;த்து கார­சா­ர­மாக விவா­திக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. வேற்­று­மைகள் வெளிப்­படும் வகையில் உச்­சஸ்­தா­யியில் கருத்­துக்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஆனால், கூட்­ட­மைப்பைப் பதிவு செய்­வ­தற்­கு­ரிய ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை. கூட்­ட­மைப்பைப் பதிவு செய்யும் விட­யங்கள் தொடர்­பாக ஆராய்ந்து நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­கென ஐந்­துபேர் கொண்ட குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆயினும் அந்தக் குழுவின் செயற்­பா­டுகள் திருப்­தி­ய­ளிப்­ப­தாக இல்­லை­யென்று இந்த மாநாட்டு உரையில் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

தனித்­து­வத்தைப் பேணிக்­கொண்டு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் கட்­சிகள் இணைந்­தி­ருப்­ப­தென்­பது தேர்­தல்­களை இலக்­காகக் கொண்டகூட்­டாகக் கருத வேண்­டி­யி­ருக்­கின்­றதே தவிர,  தமிழ் மக்­களின்  பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் நோக்­கத்தில் ஒன்­றி­ணைந்த இணைப்­பாகக் கருத முடி­யாது.

தனித்­துவம் பேணப்­ப­டு­வ­தென்­பது தமது கட்சி உறுப்­பி­னர்­களை தேர்­தல்­களில் வெற்­றி­பெற வைக்­கின்ற நோக்­கத்தை இலக்­காகக் கொண்­ட­தா­கவே இருக்கும்.

மக்­களின் நலன்­களை  முதன்­மைப்­ப­டுத்­து­வ­தாக இருந்தால் கூட்டு அமைப்பு ஒன்­றிற்குள் இருந்து கொண்டு கட்­சி­களின் தனித்­து­வத்தைப் பேண முடி­யாது.

கூட்­ட­மைப்­புக்குள் இருந்து கொண்டு கட்­சி­க­ளையும், அவற்றின் நலன்­க­ளையும் பேண முயன்றால் மக்­களின் தேவை­களைப் பூர்த்தி செய்ய முடி­யாது. அந்த முயற்சி வெறும் கண்­து­டைப்­பான முயற்­சி­யா­கவே இருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

தமிழ் மக்­களைப் பொறுத்­த­மட்டில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பே அவர்­க­ளு­டைய அர­சியல் தலை­மை­யாகும். ஆனால், தேர்­தல்­களில் பிர­தி­நி­தி­க­ளாகத் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்கு வீட்டுச் சின்­னத்­தைக்­கொண்ட தமி­ழ­ரசுக் கட்­சியின் தயவும் கரு­ணையும் வேண்டும். ஏனெனில் தேர்­தலில் போட்டியிடுவதற்கான சின்­னத்­தையும் கட்­ட­மைப்­பையும் கொண்ட கட்­சி­யாக அது திகழ்­கின்­றது.

எனவே, தமி­ழ­ரசுக் கட்­சியின் வேட்­பாளர் பட்­டி­யலில் கூட்­ட­மைப்பில் உள்ள அங்­கத்­துவ கட்­சிகள் தமது வேட்­பா­ளர்­களைப் போட்­டி­யிடச் செய்­கின்ற நடை­மு­றையே இருந்து வரு­கின்­றது.

இந்த நடை­முறை கார­ண­மாக யுத்­தத்தின் பின்­ன­ரான கடந்த ஐந்து ஆண்­டு­களில் மக்கள் சந்­தித்த தேர்­தல்­களில் வேட்­பா­ளர்­களைப் பங்­கி­டு­வதில் கூட்­ட­மைப்­புக்குள் பல்­வேறு பிரச்­சி­னைகள் எழுந்­தி­ருந்­தன.

கருத்து வேற்­று­மைகள் ஏற்­பட்­டி­ருந்­தன. அவைகள் களை­யப்­பட்டு ஒற்­று­மை­யாகத் தாங்கள் செயற்ப­டு­வ­தாகக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் யாழ்ப்பா­ணத்தில் கூறி­யுள்ள போதிலும், அந்த முரண்பா­டு­களும், அதி­ருப்­தியும் தொட­ரவே செய்­கின்­றன. இந்த நிலையில் மக்கள் எதிர்­பார்க்­கின்ற ஒரே அர­சியல் தலை­மை­யா­கிய கூட்­ட­மைப்பின் உறு­தி­யான தலை­மைத்­து­வத்தைப் பல­முள்ள தலை­மை­யாகக் கொண்­டி­ருக்க முடி­யுமா என்­பது சந்­தே­கமே.

அதே­நேரம் சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யுள்ள – தமிழ் மக்கள் கூட்­ட­மைப்பின் மீது வெளிப்­ப­டுத்­தி­யுள்ள அர­சியல் தலை­மைத்­து­வத்­திற்­கான விசு­வா­சத்தை வளர்க்க வேண்டும், அதன் ஐக்­கி­யத்தை மேலும் வலுப்­ப­டுத்த வேண்டும் என்­ப­தற்­கான முயற்­சி­களும் எவ்­வ­ளவு காலத்­திற்குள் சாத்­தி­ய­மாகும் என்­பதைச் சொல்ல முடி­யாது.

இன்று சர்­வ­தேச மட்­டத்தில் இலங்கை அரசு பல்­வேறு நெருக்­க­டி­களை எதிர்­நோக்­கி­யி­ருப்­ப­தாகக் கூறப்­பட்­டாலும், அந்த நெருக்­க­டி­களை அதனால் சமாளித்து முன்­னேறிச் செல்ல முடி­யாது என்று திருப்­தி­ய­டையக் கூடிய சூழல் சர்­வ­தேச அரங்கில் உண்­மை­யா­கவே இருக்­கின்­றதா என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது.

10556540_661324983955875_2507671752768428592_nஇறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் தொடர்­பி­லான சர்­வ­தேச விசா­ர­ணையை ஐ.நா. சிறப்­பான முறையில் கொண்டு நடத்­து­வதில் பல்­வேறு முட்­டுக்­கட்­டைகள் எழுந்­தி­ருக்­கின்­றன. இலங்­கைக்குள் அந்த விசா­ர­ணைக்­குழு வந்து விசா­ரணை செய்யக் கூடிய சூழல் இது­வ­ரை­யிலும் காணப்­ப­ட­வில்லை.

அத்­த­கைய விசா­ர­ணைக்கு அரசு ஒரு­போதும் ஒத்­து­ழைக்க மாட்­டாது என்­பது தெளி­வா­கி­யி­ருக்­கின்­றது. இலங்­கையைச் சூழ­வுள்ள நாடு­களில் சென்று அந்தக் குழு விசா­ரணை செய்­வ­தற்­கான சந்­தர்ப்பம் கிடைக்­குமா என்­பதும் கேள்­விக்­கு­றி­யா­கி­யி­ருக்­கின்­றது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் என்று இலங்கை அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கின்ற அமெ­ரிக்­காவின் பிரே­ர­ணை­க­ளுக்கு ஆத­ர­வாகச் செயற்­பட்ட இந்­தியா இன்று அதற்­கான சர்­வ­தேச விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைக்க மறுத்து நிற்­கின்­றது. இதே­போன்று ஏனைய சார்க் நாடு­க­ளும்­கூட ஒத்­து­ழைக்கத் தயா­ரில்லை என தெரி­வித்­தி­ருக்­கின்­றன.

மறு­பக்­கத்தில் சர்­வ­தேச மட்­டத்தில் இலங்கை அரசு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புடன் பேச்­சுக்கள் நடத்தி ஓர் அர­சியல் தீர்வு காண வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகச் சொல்­லப்­ப­டு­கின்­றது. எனினும், தட்­டிக்­க­ழிக்க முடி­யாத நிலையில் அந்தப் பேச்­சு­வார்த்­தை­களை அரசு முன்­னெ­டுக்கக் கூடிய நிர்ப்­பந்­தத்தைத் தரும் அள­வுக்கு அந்த அழுத்­தங்கள் வலு­வா­ன­தாக இல்லை.

அதே நேரம் உள்­ளூரில் இருக்­கின்ற நிலை­மைகள் நாளுக்­குநாள் மோச­ம­டைந்து செல்­கின்­ற­னவே தவிர, பிரச்­சி­னைகள் குறை­வ­டை­வ­தற்கோ அல்­லது நிலை­மைகள் சீர­டை­வ­தற்கோ உரிய அறி­கு­றி­களைக் காண முடிய­வில்லை.

யுத்தச் சூழல் கார­ண­மாகப் பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் இடம்­பெ­யர்ந்த குடும்­பங்­களின் காணி­களை அப­க­ரிப்­ப­தற்­கான அள­வீட்டு நட­வ­டிக்­கைகள் இந்த நாட்டின் சாதா­ரண சட்­ட­திட்­டங்­களை அப்­பட்­ட­மாக மீறிய வகையில் நாளாந்தம் இடம்­பெற்று வரு­கின்­றன.

காணி அப­க­ரிப்­புக்கு எதி­ராக மக்­களும் தமிழ் அர­சியல் தலை­வர்­களும் ஒவ்­வொரு நாளும்பல இடங்­களில் வீதியில் இறங்கி போராடவேண்டி­ய­தாக இருக்கின்றது.

10527590_661325850622455_2852661013645469497_nதங்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அல்­லது இழைக்­கப்­ப­டு­கின்ற அநீ­தி­களைத் தட்டிக் கேட்டு நீதிக்­காகப் போராட முற்­ப­டு­ப­வர்கள் இரா­ணுவ புல­னாய்­வா­ளர்கள் என்று சொல்­லப்­ப­டு­ப­வர்­க­ளினால் பகி­ரங்­க­மாக அச்­சு­றுத்­தப்­ப­டு­கின்­றார்கள்.

பெண்கள், சிறு­மி­க­ளுக்கு இன்று பாது­காப்பு இல்லை. புனர்­வாழ்வு பெற்று சமூ­கத்தில் இணைக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்­களும், இரா­ணு­வத்தின் பொறுப்பில் பண்ணைத்தொழிலில் தொழில்­வாய்ப்பு பெற்­றி­ருப்ப­வர்­களும், அர­சுக்கு விரோ­த­மாகச் செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக ஆர்ப்­பாட்டம் செய்­வதில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­கின்றார்கள்.

அன்­றாட வாழ்க்­கை­யையே கொண்டு நடத்த முடி­யாமல் குடி­நீர்ப்­பற்­றாக்­குறை, வரட்சி கார­ண­மாக விவ­சா­யத்தின் ஊடான வாழ்­வா­தா­ரத்தைக் கொண்டு நடத்த முடி­யாமை, தொழி­லின்மை என்று அன்­றாடம் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு மக்கள் இன்று முகம் கொடுத்­தி­ருக்­கின்­றார்கள். அரசும், அரச ஆத­ரவு அரச அதி­கா­ரிகள், இரா­ணு­வத்­தினர் என பல­தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்தும் மக்கள் இன்று பல்­வேறு நெருக்­க­டி­களை எதிர்­கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இந்த நிலையில் அவர்­களைச் சரி­யான அர­சியல் வழியில் நடத்திச் செல்­வ­தற்கு, அவர்­களின் நம்­பிக்­கைக்­கு­ரிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு இறுக்­க­மான முறையில் ஒரு நேர்­வ­ழியில் உறு­தி­யாகச் செயற்­பட வேண்­டி­யி­ருக்­கின்­றது.

10501667_661324397289267_2406476610546256984_nஆனால் கட்­சி­களின் தனித்­து­வத்தைப் பேணிக்­கொண்டு கூட்­ட­மைப்பை வலுப்­ப­டுத்­து­கின்ற இரண்டு பாதை­க­ளுக்கு நடுவில் பயணம் செய்­வ­தென்­பது சரி­யான தெரி­வாகத் தெரி­ய­வில்லை.

ரயில் பாதையின் தண்­ட­வா­ளங்­க­ளாகத் தெரி­கின்ற கட்­சி­களின் தனித்­துவம் பேணு­தலும், கூட்­ட­மைப்பைப் பலப்­படுத்­து­தலும் சமாந்­த­ர­மாக இருக்கும் வரை­யி­லேயே நடுவில் பயணம் செய்யக் கூடி­ய­தாக இருக்கும்.

அவ்­வாறு அவைகள் நீண்­ட­கா­லத்­திற்கு சமாந்­த­ர­மா­கவே இருக்­குமா என்­பது சந்­தே­கமே. எந்த நேரத்­திலும் ஏதா­வது ஒரு தண்­ட­வாளம் சமாந்­த­ரத்தைப் பிய்த்துக் கொண்டு பக்­க­வாட்டில் செல்­லலாம். அப்­போது நிலைமை என்­ன­வாகும் என்று சொல்லித் தெரிய வேண்­டி­ய­தில்லை.

வலு­வான ஐக்­கி­யத்தைப் பேணு­வ­தற்­காகத் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு உரிய சரி­யான பாதையில் பய­ணத்தைத் திருப்ப வேண்­டிய காலச் சூழல் இப்­போது ஏற்பட்டிருப்பதா.கவே தெரிகின்றது. எனவே பொறுப்புணர்ந்து சரியான வழிமுறையைத் தேர்வு செய்து அந்த வழியில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மக்களை வழிநடத்த முன்வர வேண்டும்.

கூட்டமைப்பு இதனைச் செய்யுமா?

10553377_661326113955762_6597693251584592864_n10542815_661326267289080_620562502296118879_n10533710_661327233955650_7820435022869720537_n10487284_661324077289299_1383723321963643418_n10372743_661324287289278_8396133018869537935_n10155228_661326823955691_7564059783700346962_n10520091_661323397289367_1106238602490726417_n

Share.
Leave A Reply