ஆமிக்குக் காணி ஏன் தேவைப்படுகுது எண்டு ஒருக்கால் நிண்டு, TNPF protest slarmyநிதானமாகச் சிந்திச்சால், நாங்கள் விடுகிற கன பிழைகளைத் திருத்திக் கொள்ளலாம்.
போர் முடிஞ்சாப்பிறகு ஆமி காணி கேட்குது எண்டால், அவை இஞ்ச நிரந்தரமாக இருக்க யோசிக்கினம் எண்டுதான் அர்த்தம்.
அப்பிடி நிரந்தரமாக இஞ்ச தாங்கள் இருக்கோணும் எண்ட எண்ணத்தை ஆமிக்கோ அரசாங்கத்துக்கோ ஏற்படுத்தியது ஆர்?
நாங்கள்தானே!
இதை ஆராவது மறுக்கேலுமோ?
போர் முடிஞ்சதுக்குப் பிறகு மெல்ல மெல்ல வெளியேறிக் கொண்டிருந்த ஆமியை – மறிச்சு ‘இங்கயே இருங்கோ’ எண்ட மாதிரி வில்லங்கமான வேலைகளைப்பார்த்தது, புலிச்சாயம் பூசிய அரசியல்வாதிகள்தான்.
இதில தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்ரை அரைகுறைகளுக்கும் தமிழ்த்தேசிய விடுதலை முன்னணிக்காரருக்கும் உதயன் பேப்பருக்கும் உதிரிப்புலிகளுக்கும் நிறையப்பங்குண்டு.
இது சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த மாதிரித்தான்.
போருக்குப் பிறகு அரசாங்கம் – மகிந்த ராஜபக்ஷ – ஒரு அரசியற் தீர்வைக் கண்டு இந்த நாட்டில ஒரு நிலையான சமாதானத்தை ஏற்படுத்திறதுக்கு முயற்சித்தார்.
அப்ப பார்த்து, சரத்பொன்சேகாவை ஆதரிச்சது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.
சரத்பொன்சேகா ஒரு ராணுவத்தளபதி மட்டுமில்ல, நடந்த போரில அவர்தான் முன்னணியாக நிண்டு போரை வெண்டவர். போர்க்குற்றங்கள் எண்டு சொல்லப்படுகிற அத்தினை சங்கதிகளுக்கும்; பொறுப்பானவர்.
ஏனெண்டால் அவர்தான் களத்தளபதி.
அவரைப்போய் ஆதரிச்சால்…?
அவரை ஆதரிச்சால் ராணுவத்தை ஆதரிச்சதுக்குச் சமம்.
அவரை இவை (கூட்டமைப்புக்காரர்) ஆதரிச்சதால, இராணுவத்தைத் தான் அணைச்சு நெருக்கமாக வைச்சுக்கொள்ள வேணும் எண்டு மகிந்தர் நினைச்சார்.
அப்பதான் சரத்தை விடத் தன்னை அதிகமாக ராணுவம் நம்பும் எண்டு எண்ணினார்.
அதால ராணுவத்துக்கு இனிப்பான காரியங்களை மகிந்தர் பாக்கத்தொடங்கினார்.
இப்பிடியே தொடங்கின பிழையான விசயங்கள், வளர்ந்து வளர்ந்து சும்மா நிண்ட ஆமியோட சொறியிறது வரையில வந்தது.
இதின்ரை உச்சக்கட்டமாக புலிகளை மீளவும் கொண்டு வாறமாதிரிக் கொஞ்சப்பேர், தங்கட அரசியல் லாபத்துக்காக மாவீரர்நாளைக் கொண்டாடிறதும், கரும்புலிகள் நிகழ்வை அனுஷ்டிக்கிறதும் எண்டு வெளிக்கிட்டினம்.
போராட்டம் நடக்கேக்க, அதில ஒரு துரும்பைக்கூடப்போடாதவன்கள்தான் இந்த மாய்மாலங்களைச் செய்ய வெளிக்கிட்டவன்கள்.
மாவீரர்நாளுக்கு மரக்கன்றுகளை நட வெளிக்கிட்ட ஐங்கரநேசனுக்கும் இந்தப் போராட்டத்துக்கும் என்ன சம்மந்தம் எண்டு ஆரெண்டாலும் சொல்லுங்கோ பாப்பம்.
அதைப்போலத்தான் இன்னொரு ஆள், சிறிதரன் எம்பி.
இவர் உச்சக்கட்டப்போர் நடந்தபோது வன்னிக்கு வெளியே நிண்ட ஆள்.
அந்த நாளையில வன்னிக்கு வெளியால – கொழும்பு, இந்தியா, வெளிநாடுகள் எண்டு சுத்தித்திரியக் கூடியமாதிரி இருந்தால்…. எப்பிடித் தேசியவாதியாக இருக்க முடியும்?
உண்மையான தமிழ்த்தேசியவாதிகளாக இவையெல்லாம் இருந்திருந்தால் புலிகளோட இருந்திருக்க வேணும். அப்பிடியே புலிகளோட உடன்கட்டை ஏறியிருக்க வேணும்.
ஆனால், இவையெல்லாம் அப்பிடி இருக்கேல்ல.
ஒரு கிறனைட்டைக் கூட எப்பிடி அடிக்கிறது எண்டு தெரியாத போராளிகள்.
ஒரு நாளாவது பங்கர் வெட்டின அனுபவமே இல்லாத தேசியப்புலிகள்.
இவைதான் இப்ப ஆமியை வழிமறிச்சுப் போராடுகிறவையும். ஆமியைக் கலைக்கப்போராடுகிறவையும்.
இதில கஜேந்திரன், பத்மினி கோஸ்டி இன்னும் ஒரு நாடகத்தைப் போடுகினம்.
இந்த நாடகமும் சுத்தப்பழசுதான்.
நீங்கள் உங்கட வீட்ட போங்கோ. நான் எங்கட வீட்டுக்குப்போறதுக்கு… எண்ட மாதிரி…
ஆமிக்காரரை அவையின்ரை வீட்டுக்குப் போகும்படியும்… அப்பதான் தாங்களும் வீட்டுக்குப்போகலாம் எண்ட மாதிரியும் ஒரு அறிவிப்பு.
இல்லாட்டில், நாங்கள் இப்பிடியே றோட்டில நிண்டு உங்களுக்கு எதிராகப் போராடுவம் எண்ட மாதிரியும் ஒரு எச்சரிக்கை.
போராட்டம் நடந்தபோதும் போர் தீவிரமாக நடந்தபோதும் வாலைச் சுருட்டிக்கொண்டு பம்மிக்கொண்டு திரிஞ்சவனெல்லாம், இப்ப வீரவேங்கையாகவும் லெப்ரினன்ற் கேணலாகவும் பிரிகேடியராகவும் தங்களை உயர்த்தப்பாக்கிறாங்கள்.
என்ன செய்யிறது, ஆமியை மறிச்சு வைச்சிருந்தால்தானே… அதை வைச்சுப் பிழைக்கலாம்…
– வடபுலத்தான்
| Edit