தென்னாப்பிரிக்காவில் டிரக் ஒன்றில் ஏற்றிச்செல்லப்பட்ட இரண்டு ஒட்டகச்சிவிங்கிகள் எதிர்பாராதவிதமாக பாலத்தில் மோதி அடிபட்டு பரிதாபமாக பலியாகின. அந்த டிரக்கை ஓட்டிச்சென்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தென்னாப்பிரிக்க தலைநகர் ஜோகன்ஸ்பெர்க் அருகே உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையில் டிரக் ஒன்றின் மூலம் இரண்டு ஒட்டகச்சிவிங்கிகள் ஏற்றிச்செல்லப்பட்டன. டிரக்கின் உயரத்தை விட ஒட்டகச்சிவிங்கி உயரமாக இருந்ததால் அதன் கழுத்து டிரக்கிற்கு வெளியே சுமார் ஐந்தடிக்கு நீட்டிக்க்கொண்டிருந்தது.
டிரக்கை ஓட்டிச்சென்ற டிரைவர் பாலம் ஒன்றின் கீழ் செல்லும்போது பாலத்தின் சுவர் ஒட்டகச்சிவிங்கியை தாக்கும் என்ற பொது அறிவு இல்லாமல் ஓட்டிச்சென்றுள்ளார். அந்த பக்கமாக சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் டிரக் டிரைவரை எச்சரிக்கை செய்தும் அதை கவனிக்காமல் டிரக்கை அவர் ஓட்டிச்சென்றார்.
பாலத்தின் கீழ்ப்பகுதி ஒட்டகச்சிவிங்கிகளின் கழுத்தில் பலமாக மோதி துடிதுடித்து இறந்த காட்சி மிகவும் கொடூரமாக இருந்தது. அதன்பின்னர்தான் டிரக் டிரைவர் தனது தவறை உணர்ந்துள்ளார். பின்னர் நடந்த விசாரணையில் கவனக்குறைவாக டிரைவிங் செய்து வனவிலங்குகளை கொலை செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
ஒட்டகச்சிவிங்கி பாலத்தில் மோதுவதற்கு சிலநொடிகள் முன்பு அந்த பகுதி வழியாக சென்ற ஒருவர் எடுத்த புகைப்படம்தான் இது.