நோயாளர்கள் இறைச்சி உணவை தன்னுடன் பகிர தவறியதையடுத்து சினமடைந்து நடவடிக்கை
பராமரிப்பு இல்லத்தில் தமக்கு வழங்கப்பட்ட இறைச்சி உணவை தன்னுடன் பகிர்ந்து கொள்ளத் தவறிய 4 நோயாளர்களின் பிறப்புறுப்புக்களை அந்த இல்லத்தின் பணியாளர் வெட்டிய விபரீத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
மன ரீதியான குறைபாடுள்ள வாங் பான் (46 வயது) என்ற மேற்படி நபர், ஹெயிலோங்ஜியாங் மாகாணத்திலுள்ள பராமரிப்பு இல்லத்தில் நோயாளர்களுக்கு உணவளித்தல், சுத்திகரித்தல் போன்ற பணிகளுக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு இதற்காக ஊதியம் எதுவும் வழங்கப்படாத போதும், அவருக்கு அங்கு உறங்கவும் நோயாளர்களுக்கு உணவளித்த பின்னர் மிஞ்சிய உணவுகளை உண்ணவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சம்பவ தினம் பராமரிப்பு இல்லத்திலிருந்த நோயாளர்கள் தமக்கு வழங்கப்பட்ட இறைச்சி உணவை தனக்கு மிச்சம் வைக்காமல் முழுமையாக உண்டதை கண்டு சினமடைந்த வாங் பான் அவர்களது செயலுக்கு பழிவாங்கும் முகமாக அவர்களது பிறப்புறுப்புக்களை வெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
அவர் 4 நோயாளர்களின் பிறப்புறுப்புகளை துண்டித்த நிலையில், அந்த பராமரிப்பு நிலையத்தின் ஊழியர்கள் தலையிட்டு ஏனைய நோயாளர்களது பிறப்புறுப்புக்களை வெட்ட விடாது அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் சி லியாங் (62 வயது) என்பவரும் 53 வயது, 70 வயது மற்றும் 81 வயதுடைய ஏனைய மூவரும் பிறப்புறுப்பு துண்டிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சி லியாங் விபரிக்கையில், வாங் பான் சவரக் கத்தியுடன் தன்னை நெருங்கிய போது அவர் ஏதோ மருத்துவ செயற்பாட்டை மேற்கொள்ளவே வருவதாக ஆரம்பத்தில் நினைத்ததாக கூறினார்.
இந்த சம்பவத்தையடுத்து வாங் பான் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.