யாழ்ப்பாணத்தில் தற்போது குழுக்களாகப் பிரிந்து நடக்கும் மோதல்கள் களை கட்டியுள்ளன. இம் மோதல்களில் ஈடுபடுபவா்களில் ஒரு சாரார் யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு செல்வாக்கானவா்களாகவும் அதாவது வில்லன் அணியாகவும் இன்னொருசாரார் பிரச்சனைகளுக்குள் வலிந்து நுளைபவா்களுமாக அதாவது கிறோத்தனம் காட்டுபவா்களாகவும் உருவாகியுள்ளனார்.
கடந்த வாரம் அளவெட்டிப் பகுதியில் உள்ள இடம் ஒன்றில் நடந்த குழு மோதலில் நான்கு போ் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனா். வீடு ஒன்றை விட்டு வாடகைக்கு தங்கியிருந்த குடும்பம் ஒன்றை எழுப்பும் நோக்குடனேயே இந்தச் சண்டை இடம் பெற்றுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்த குடும்பம் ஒன்று தமது வீட்டில் வாடகைக்கு இருந்து வீட்டு வாடகை கட்டாது இருந்த காரணத்தில் அவா்களை எழுப்ப முற்பட்ட போதே இச் சண்டை உருவாகியுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்தவா்கள் தமக்குத் தெரிந்த, பொலிசாருடன் நெருக்கமான சிலரைக் கொண்டு வாடகைக்கு குடியிருந்தவா்களை அச்சுறுத்தி எழுப்ப முற்பட்ட போது அந்த வீட்டில் இருந்த பல்கலைக்கழக மாணவனின் நண்பா்களும் அங்கு வந்து சோ்ந்து சண்டையில் ஈடுபட்டுள்ளனா்.
இச் சண்டையில் வாடகைக்கு குடியிருந்தவரின் மகன் உட்பட 4 போ் காயமடைந்துள்ளனா். இதன் பின்னா் பொலிசார் அங்கு வந்து காயமடைந்தவா்களை பொலிஸ் நிலையம் கொ்ணடு சென்றும் கவனித்துள்ளதாகத் தெரியவருகின்றது.
தற்போது இந்த விடயம் வெளிநாட்டுப் பணத்தின் மூலம் மூடிமறைக்கப்பட்டுள்ளதாம். குறித்த வாடகைக் குடியிருப்பாளா் செலுத்த வேண்டிய 7 மாத வாடகையிலும் பார்க்க பல மடங்கு பணத்தை வெளிநாட்டில் இருந்து வந்தவா்கள் இச் சண்டைக்காக வாரியிறைத்து வள்ளலாகியுள்ளனா்.
இந்த விடயம் நீதிமன்றத்திற்கு செல்ல ஆயத்தமாகிய போது அதனைத் தடுத்து நிறுத்தய வெளிநாட்டு வாசிகள் தற்போது வாடகைக்குக் குடியிருந்தவா்களுக்கு ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்து வீடு மாறச் சொல்லி வெளிநாட்டில் இருந்துவந்தவா்கள் சமாதானம் செய்துள்ளதாகவும் அவா்களும் வரும் புதன் கிழமை வேறு வீடு மாறவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதே போல் குடாநாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் நாட்டாமை வேலை செய்வதற்கு ஆட்கள் இருப்பதாகத் தெரியவருகின்றது. ஊருக்கு ஊா் பொலிஸ் நிலையம் இருந்தும் இவ்வாறான நாட்டாமைகளிடமே மக்கள் சென்று தமது பிரச்சனைகளைத் தீா்க்கத் தொடங்கியுள்ளனா்.
குடாநாடு வரும் காலம் என்ன நிலைக்கு மாறப் போகின்றது என்பதற்கான முன்னாயத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதை இவ்வாறான செயற்பாடுகள் காட்டுகின்றன.
பொலிசாரிடம் பிரச்சனைகளைத் தீா்க்கச் செல்லும் பொதுமக்களிடம் பொலிசார் உதவிகளைப் எதிர்பார்ப்பதாகவும் முறையிடச் செல்பவருக்கு பிரச்சனை செய்பவா் பணவசதி படைத்தவா் எனின் பொலிசாரின் ஆதரவு முறையிட்டவரின் எதிராளிக்கே கிடைப்பதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனா்.
சாதாரனமாக அடையாள அட்டை தொலைந்த ஒரு நபா் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு பிரதி ஒன்றை எடுக்கச் சென்றாலேயே அவரைப் பொலிசார் ரீ, வடை வாங்கித் தரச் சொல்லிக் கேட்பதாகவும் அவ்வாறு வாங்கக் காசு இல்லை என்று சொன்னால் பொலிஸ் நிலையத்தில் இல்லாத சில அலுவலகப் பொருட்கள், கொப்பிகள், செலோ ரேப், ஒட்டுப்பசை, ஸ்ரெப்லா் கிளிப் போன்ற பொருட்களின் பட்டியலைக் கொடுத்து அதை வாங்கி வரும் படி வற்புறுத்துவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனா்.
இதே வேளை கொக்குவில் சந்தியில் ஒரு ரவுடிக் கூட்டமும் ஆனைக்கோட்டையில் ஒரு ரவுடிக்கூட்டமும் தரமான முறையில் வளா்ந்து வருகின்றன. இவை இரண்டும் தமக்குள்ளே மோதுப்பட்டும் பொதுமக்களைத் துன்பப்படுத்தியும் வருவதாகத் தெரியவருகின்றது.
அதே போல் வடமராட்சிப் பகுதி, தென்மராட்சிப் பகுதி ஆகியவற்றிலும் ரவுடிக் கூட்டங்களின் அட்டகாசம் தாங்க முடியாது உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். இவா்களைப் பற்றிப் பொலிசாருக்கு முறையிட்டாலும் பொலிசார் அக்கறை கொள்வதில்லை என்றும் சில வேளை இவ்வாறானவா்களுக்கு ஆதரவாகக் கதைப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
நாட்டமை வேலை பார்க்கும் கூட்டத்திற்கும் பொலிசாருக்கும் இடையிலும் நெருங்கிய தொடா்பு இருப்பதாகவும் தெரியவருகின்றது. சில வேளை இந்த நாட்டாமைகள் காதலுக்கு உதவி செய்வதாகக் கூறி காதலிப்பவா்களுக்கு சார்பாகவோ அல்லது காதலிக்கும் இளைஞனுக்குச் சார்பாகவோ நின்று அவா்களின் பெற்றோர்களை அச்சுறுத்தி வருகின்றனா்.