பெண்களின் படுக்கையறை என்பது அவர்கள் தலைசாய்ப்பதற்கான இடம் மட்டுமல்ல, அவர்கள் படிக்கவும், கனவு காணவும், வேலை செய்யவும், விளையாடவும், காதலுறவு கொள்ளவுமான இடங்கள் அவை. ஹைதியின் தலைநகர் போர்ட் ஓ பிரென்ஸில் உள்ள 19 வயது டஃப்னியின் படுக்கையறை இது.
எப்படி காட்சியளிக்கின்றன என்பதை வைத்து மட்டுமல்லாமல், எந்த அளவுக்கு அவை வித்தியாசமாக அமைந்துள்ளன என்பதை வைத்தும் அவை தேர்ந்தெடுக்கப்பட்டன. படுக்கையறைக்கு பின்னாலுள்ள கதைக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. கம்போடியாவின் புனோம் பென் நகரில் மீகொங் ஆற்றின் அருகே டொன்லே சாப் ஏரிக்கரையில் வாழும் 19 வயது லெங்கின் படுக்கையறை இது.
ஒருவருடைய பின்னணி, கலாச்சாரம், குணாதிசையம், விருப்பங்கள், சமூக அந்தஸ்து ஆகியவற்றையும் அவருடைய படுக்கையறை பிரதிபலிக்கிறது. கெமரூன் நாட்டில் எடீயா என்ற கிராமத்தில் வாழும் 23 வயது போகோல் அந்தோணியுடைய படுக்கையறை இது.
பிரசிலின் ரியோ டி ஜெனீரோவில் வாழும் இரட்டையர்களான ஜெஸ்ஸியான் மற்றும் ஜெஸ்ஸிகா ஆகியோரின் படுக்கையறை இது
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் வாழும் 19 வயது பெர்னீஸ் ஹெர்னாண்டஸின் படுக்கையறை இது. மெக்ஸிகோவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய குடும்பம் இவருடையது. சிறுவயதில் ஒரு பெண்ணிடம் அடிவாங்கியதன் பின்னர் குத்துச்சண்டை கற்க ஆரம்பித்து தற்போது இளம் பெண்கள் பிரிவில் இவர் முன்னணி குத்துச்சண்டை விராங்கனையாக உள்ளார்.
இந்தியத் தந்தைக்கும் பிரஞ்சு தாய்க்கும் பிறந்தவரான 30 வயது சொரயா மொலெதீனா என்பவரின் பாரிஸ் வீட்டு படுக்கையறை இது.
எகிப்தின் கெய்ரோவில் வாழும் 22 வயது இனாஸ் ஷெரீஃபின் படுக்கை அறையிது. இதிலுள்ள இயற்கைக் காட்சிப் படம், தூர தேசங்களுக்கு தான் செல்வதாக கனவு காண உதவுகிறது என்கிறார் அவர்.
நடனக் கலைஞர், இசைத் தொகுப்பாளர் மற்றும் யோகா பயிற்சியாளராக இருக்கின்ற 26 வயது கண்டாஸ் பாஸின் படுக்கையறை இது. இஸ்தான்புல் துருக்கியில் இவர் வசிக்கிறார்.
பிலிப்பைன்ஸில் பிறந்து அபுதாபியில் வாழும் 29 வயது ஜாக்குலினின் படுக்கையறை இது. அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் 36ஆவது மாடியில் இவர் வாழ்கிறார்.
கைவினைப் பொருட்கள் உற்பத்தியிலும் விற்பனையிலும் ஈடுபட்டுள்ள 25 வயது ஆயிஷா முகமதுவுடைய படுக்கையறை இது. இவரும் அபுதாபியில் வாழ்கிறார். வெயில் காலத்தில் வெளியே 55 டிகிரி உஷ்ணம் இருக்கும்போது பெரும்பாலான பொழுதை தனது படுக்கை அறையிலேயே கழிப்பதாக இவர் கூறுகிறார்.