சீனாவில் உள்ள கார் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்து ஒன்றில் இதுவரை 48 பேர் பலியானதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் படுகாயம் அடைந்ததாகவும் தெரிகிறது. கடந்த ஒரு வருடத்தில் சீனாவில் நடந்த மிகப்பெரிய விபத்தாக இது கருதப்படுகிறது.

சீனாவில் உள்ள Kunshan, Jiansu province என்ற பகுதியில் இயங்கிவரும் பிரமாண்டமான கார் தொழிற்சாலையில் உற்பத்தி ஆகும் கார்கள் General Motors என்ற நிறுவனத்திற்காக சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

china 1இந்த தொழிற்சாலையில் சுமார் 200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று மாலை இந்த தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட குண்டுவெடிப்பு காரணமாக தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு நூற்றுக்கணக்கான ஊழியர்களின் உடல்களில் தீப்பற்றி எரிந்தது.

china 2இதில் 68 ஊழியர்கள் பரிதாபமாக பலியாகினர். 100க்கும் மேற்பட்ட காயமடைந்தவர்கள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் ஒருசிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

china 3இந்த விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டபோது அவர்கள் அணிந்திருந்த உடைகள் கருகி உடலோடு ஒட்டிக்கொண்டிருந்த பயங்கர காட்சியை பார்ப்பதற்கே அச்சமாக இருந்ததாக மீட்புப்படையினர் கூறுகின்றனர்.

china 4குண்டுவெடிப்பு நடந்த இந்த தொழிற்சாலை கடந்த 1998ஆம் ஆண்டு £5.2million முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இந்த தொழிற்சாலை தைவான் நாட்டின் Zhongrong Metal Products Company என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply