மாகாண சபை பிரதம செயலாளருக்கு உத்தரவிட பொதுச் சேவைகள் ஆணைக் குழுவுக்கே அதிகாரம் உள்ளது.

அந்த அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என்று இலங்கை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தனது அடிப்படை உரிமையில் தலையிடுகிறார் என்று தெரிவித்து வடக்கு மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் தாக்கல் செய்த மனு தீர்ப்புக்காக இன்று உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், கே.ஸ்ரீபவன் மற்றும் ரோஹினி மாரசிங்க ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் வழக்கை விசாரித்தனர்.

இதன்போதே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply