ஆட்சி நிர்­வா­கத்­திலும், ஆட்சி மாற்­றங்­க­ளிலும், எப்­போ­துமே, சிவில் சமூகம், ஊட­கங்கள், வெளி­நா­டு­களின் உதவி என்­பன முக்­கி­ய­மா­ன­வை­யாக கரு­தப்­ப­டு­கின்­றன.

போருக்­கா­யினும், அமை­திக்­கா­யினும், தேர்­த­லுக்­கா­யினும் இவை அத்­தி­யா­வ­சி­ய­மா­னவை. இந்த மூன்­றையும் வசப்­ப­டுத்திக் கொண்டால், தேர்­தலை எதிர்­கொள்­ப­வ­ரா­யினும், ஆட்­சியில் இருப்­ப­வ­ரா­யினும் எப்­போ­துமே அச்சம் கொள்ள வேண்­டி­ய­தில்லை.

ஆனால், இந்த மூன்­றையும் பகைத்துக் கொள்­ப­வரால் தேர்­தலை எதிர்­கொள்­வதும் சரி, ஆட்­சியைத் தக்­க­வைத்துக் கொள்­வதும் சரி கடி­ன­மான காரி­யமே. இந்­த­நி­லை­மைக்குத் தான், இலங்கை அர­சாங்கம் சென்­றி­ருக்­கி­றது.

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரை அர­சாங்கம் நடத்திக் கொண்­டி­ருந்த போது, வெளி­நா­டு­களின் ஆத­ரவு அர­சாங்­கத்­துக்குத் தாரா­ள­மாகக் கிடைத்துக் கொண்­டி­ருந்­தது.

அது­போ­லவே, கொழும்பை மைய­மாகக் கொண்ட சிவில் சமூ­கமும், அர­சாங்­கத்தின் கரங்­களை வலுப்­ப­டுத்தத் தவ­ற­வில்லை.

தமிழ் ஊட­கங்கள் தவிர்ந்த, சிங்­கள, ஆங்­கில ஊட­கங்­களும் கூட போரின் போது அர­சாங்­கத்­து­ட­னேயே நின்­றன. இதனால், போரில் வெற்­றி­யீட்­டு­வது அர­சாங்­கத்­துக்கு சுல­ப­மாக இருந்­தது.

இவற்­றுக்கு முன்­பாக, தமிழ் சிவில் சமூ­கத்தின் குரலோ, தமிழ் ஊட­கங்­களின் கருத்­து­க்களோ எடு­ப­ட­வில்லை.

அவ்­வாறு எடு­பட்­டி­ருந்தால், பெரும் அவ­லங்கள், அழி­வுகள் தடுக்­கப்­பட்­டி­ருக்கும் என்று கூற­மு­டி­யா­வி­டினும், குறைக்­கப்­பட்­டி­ருக்கும் என்று நம்­பலாம்.

ஆனால், போர் முடி­வுக்கு வந்த பின்னர், மெல்ல மெல்ல அர­சாங்­கத்தின் போக்கு மாறத் தொடங்­கி­யது. அதன் விளை­வாக, ஊட­கங்­க­ளையும், சிவில் சமூ­கத்­தையும், வெளி­நா­டு­க­ளையும் பகைத்துக் கொண்­டது.

இப்­போது நிலவும் சூழல், இதன் உச்­சக்­கட்டம் எனலாம்.

இதன் கார­ண­மாக, ஊட­கங்கள், சிவில் சமூகம், வெளி­நா­டு­க­ளுடன், குறிப்­பாக மேற்­கு­லக நாடு­க­ளுடன் முரண்­பாட்டை வளர்த்துக் கொண்டு, கடு­மை­யாக மோதத் தொடங்­கி­யி­ருக்­கி­றது கொழும்பு.

இந்த நிலை­யா­னது, அர­சாங்­கத்தை, எதேச்­சா­தி­காரப் போக்கு கொண்­ட­தாக விமர்­சிக்கும் நிலையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

எதேச்­சா­தி­கா­ரத்தை நோக்கி இலங்கை அர­சாங்கம் நகர்­வ­தாக, சரி­யாக ஒரு ஆண்­டுக்கு முன்னர், 2013 ஆகஸ்ட் மாதம் கொழும்பில் வைத்துக் கூறி­யி­ருந்தார், ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை.

அதன் பின்னர், இந்த ஆண்டு ஆரம்­பத்தில், கொழும்பு வந்­தி­ருந்த, அமெ­ரிக்­காவின் தெற்கு, மத்­திய ஆசி­யா­வுக்­கான உதவி இரா­ஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்­வாலும், அதே சாரப்­படக் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். இப்­போது எதிர்க்­கட்­சிகள் எல்­லாமே, அர­சாங்கம் எதேச்­சா­தி­காரப் பாதையில் செல்­வ­தாக கடு­மை­யாக விமர்­சிக்­கின்­றன.

இந்த நிலை­மைக்கு முக்­கிய காரணம், ஊட­கங்கள், சிவில் சமூகம் மற்றும் மேற்­கு­ல­கிற்கு எதி­ராக அர­சாங்கம் நடத்­து­கின்ற பனிப்போர் தான்.

இதனை பனிப்போர் அல்­லது நிழல் போர் என்று கூறு­வதை விட, வெளிப்­ப­டை­யான போர் என்று கூடத் தயக்­க­மின்றிக் குறிப்­பி­டலாம். ஏனென்றால், இந்த மூன்று தரப்­பு­க­ளுக்கும் எதி­ராக நடத்­தப்­ப­டு­கின்ற போரில் எந்த ரக­சி­யமும் பேணப்­ப­ட­வில்லை.

ஆனால், இதில் கையா­ளப்­படும் அர­சாங்­கத்தின் உத்­திகள் தான் மாறி­யுள்­ளன.

முன்னர், அர­சாங்­கத்தை எதிர்த்து நின்ற ஊட­கங்­க­ளுக்கும், ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக் கும் நேர்ந்த கதி தெரிந்­ததே.

அவ்­வா­றான சம்­ப­வங்கள் எப்­படி நிகழ்ந்­தன, யாரால் நிகழ்த்­தப்­பட்­டன என்ற எந்த விப­ரங்­களும் இன்று வரை கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. இப்­போது, அந்த உத்­தியில் சிறிய மாற்றம் நிகழ்ந்­தி­ருக்­கி­றது, அவ்­வ­ளவு தான்.

அர­சாங்­கத்தை எதிர்த்து நிற்கும், அதற்­கெ­தி­ராக குரல் கொடுக்கும், ஊட­கங்­களைச் சார்ந்­த­வர்­களும், சிவில் சமூகப் பிர­தி­நி­தி­களும், நேர­டி­யாக தாக்­கப்­படும் நிலை ஓர­ள­வுக்கு மாறி­யி­ருக்­கி­றது. ஆனால், அவர்கள் மீதான தாக்­கு­தல்­களும், கொலை மிரட்­டல்­களும் தாரா­ள­மா­கவே இடம்­பெ­று­கின்­றன.

அதை­விடப் புதி­தாக, ஏதேனும் ஒரு குழுவை வைத்து, பின்­பு­லத்தில் இருந்து கொண்டு நிகழ்­வு­களைக் குழப்பும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும் உத்­தியும் கையா­ளப்­ப­டு­கி­றது.

சிறு­பான்மை மதத்­தி­ன­ருக்கு எதி­ரான போராட்­டங்கள், வன்­மு­றை­க­ளுக்கு காவி உடை­ய­ணிந்த பிக்­கு­களும், பௌத்த அடிப்­ப­டை­வா­தி­களும் எவ்­வாறு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­னரோ, அது­போ­லவே, சிவில் சமூ­கத்­தையும், ஊட­கங்­க­ளையும், மேற்கு நாடு­க­ளையும் முடக்­கு­வ­தற்கும் அது­போன்ற குழுக்கள் பயன்­ப­டுத்­தப்­படு­கின்­றன.

இதற்கு மிகச் சிறந்த உதா­ரணம், யாழ்ப்­பாண ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­காக, நடத்­தப்­ப­ட­வி­ருந்த பயிற்சிச் செய­ல­மர்வு, ஒன்­றுக்கு மூன்று தட­வைகள் தடைப்­ப­டுத்­தப்­பட்­ட­மை­யாகும்.

முதலில் பொல­ன­று­வையில் கருத்­த­ரங்கு ஏற்­பாடு செய்த போது, பௌத்த பிக்­குகள் அடங்­கிய ஒரு குழு­வினர் அதற்கு எதிர்ப்புத் தெரி­வித்து, நிறுத்தச் செய்­தனர்.

பின்னர், அந்தக் கருத்­த­ரங்கு நீர்­கொ­ழும்பில் நடத்­தப்­பட்டுக் கொண்­டி­ருந்த போதும், அதே­போன்று, குழப்­பப்­பட்­டது.

மீண்டும், அந்தக் கருத்­த­ரங்கை கொழும் பில் நடத்த முயன்ற போது தான், ஊட­க­வி­ய­லா­ளர்­களின் வாகனம் ஓமந்­தையில் மறிக்­கப்­பட்டு, கஞ்சா வழக்கில் சிக்க வைக்­கப்­பட்­டது. அது­மட்­டு­மன்றி, அதையும் தாண்டி கொழும்பு வந்து சேர்ந்த ஊட­க­வி­ய­லா­ளர்­களைப் பயங்­க­ர­வா­திகள் என்று கூறி போராட்டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

இதன் விளை­வாக, அந்தப் பயிற்சிச் செய­ல­மர்வு நிறுத்­தப்­பட்­ட­தாக, அதற்­கான நிதி­யு­த­வியை வழங்­கிய அமெ­ரிக்கா அறி­வித்­தது.

ஒன்­றுக்கு மூன்று சந்­தர்ப்­பங்­களில், வடக்கு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான பயிற்சி மட்டும், வெவ்­வேறு குழுக்­க­ளினால், குழப்­பப்­பட்ட நிகழ்வை சாதா­ர­ண­மாக கருத முடி­யாது.

இதி­லி­ருந்து, அந்தப் பயிற்­சியைக் குழப்ப வேண்டும் என்­பதில் குறி­யாக இருந்து, மேற்­கொள்­ளப்­பட்ட திட்­ட­மிட்ட நட­வ­டிக்­கையே அது என்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது.

இதனை அர­சாங்க ஆத­ரவு சக்­திகள் தவிர வேறெ­வ­ராலும் செய்ய முடி­யாது.

இது ஊட­க­வி­ய­லா­ளர்­களின் அடிப்­படை உரி­மை­களை மீறு­கின்ற செயல் என்று கொழும்­பி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ரகம் வெளி­யிட்ட அறிக்கை, அர­சாங்­கத்தை விசனம் கொள்ள வைத்­தி­ருக்­கி­றது.

அமெ­ரிக்கத் தூத­ர­கத்தின் கருத்­துக்கு உட­ன­டி­யா­கவே பாது­காப்பு அமைச்சு பதி­லடி கொடுத்­தது மிகப் பெரிய இரா­ஜ­தந்­திரத் தவ­றாக கரு­தப்­ப­டு­கி­றது.

இது­கு­றித்துக் கருத்து வெளி­யிட்ட பாது­காப்பு அமைச்சின் பேச்­சாளர் பிரி­கே­டியர் ருவான் வணி­க­சூ­ரிய, இது­போன்ற குற்­றச்­சாட்­டுகள், இரு­நா­டு­க­ளுக்கும் இடை­யி­லான உற­வு­களில் விரி­சலை ஏற்­ப­டுத்தும் என்று விடுத்த எச்­ச­ரிக்கை, அசா­தா­ர­ண­மா­னது.

ஏனென்றால், பொது­வாக இரா­ணுவ அதி­காரி ஒருவர், வெளி­நாட்டு விவ­கா­ரங்கள் குறித்து இவ்­வாறு கருத்து வெளி­யிட முடி­யாது. அவ்­வாறு அர­சாங்­கத்­துக்கு பிடிக்­காத ஒரு விட­யத்தை, மறுக்கும் அல்­லது விமர்­சிக்கும் நட­வ­டிக்­கையை, வெளி­வி­வ­கார அமைச்சே மேற்­கொள்ள வேண்டும்.

ஆனால், பாது­காப்பு அமைச்சு நேர­டி­யா­கவே அமெ­ரிக்­கா­வுடன் முண்­டி­யது.

இது இன்­னொரு வகையில், இந்தச் செய­ல­மர்வு குழப்­பப்­பட்­டதன் பின்­னணி குறித்த சந்­தே­கங்­களை மேலும் வலுப்­ப­டுத்­தி­யது.

இதற்குப் பின்னர், வெளி­வி­வ­கார அமைச்சு வெளி­யிட்ட அறிக்­கை­யொன்றில், அமெ­ரிக்கா எதற்­காக, குறிப்­பிட்ட இனத்­த­வர்­க­ளுக்­காக, குறிப்­பிட்ட பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்­க­ளுக்­காக இந்தப் பயிற்­சியை நடத்­து­கி­றது, நிதியை ஒதுக்­கு­கி­றது என்று கேள்வி எழுப்­பப்­பட்­டி­ருந்­தது.

இவற்றின் மூலம், அர­சாங்கம், தொப்­பியைத் தனது தலைக்குத் தானே மாட்டிக் கொண்­டது.

வெளி­நா­டுகள், குறிப்­பாக அமெ­ரிக்கா உள்­ளிட்ட மேற்­கு­லக நாடுகள், மேற்­கொள்ளும் எல்லா நிதி உத­விகள், திட்­டங்­களும் இப்­போது அர­சாங்­கத்தின் சந்­தே­கத்­துக்கு உள்­ளா­கி­யி­ருக்­கின்­றன.

காரணம், அடுத்து வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக இந்த நிதி திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றதா என்ற சந்­தேகம் தான்.

இந்த சந்­தேகம் தான், அர­சாங்­கத்தை மெல்ல மெல்ல அரித்து தின்னத் தொடங்­கி­யுள்­ளது. தவ­றுக்கு மேல் தவ­று­களைச் செய்யத் தூண்­டு­கி­றது.

ஊட­கங்கள் மீது மட்­டு­மல்ல, சிவில் சமூ­கமும், இதே நெருக்­க­டியை எதிர்­கொள்ளத் தொடங்­கி­யுள்­ளது.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில் முன்னிற்கும், மாதுளுவாவே சோபித தேரர், சுதந்திர ஊடக இயக்கத்தின் அமைப்பாளர் சுனில் ஜயசேகர, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜெய­சூ­ரிய என்று கொலை மிரட்­டல்­க­ளுக்கும் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் உள்­ளா­கி­யி­ருக்கும் சிவில் சமூகப் பிர­தி­நி­தி­களின் பட்­டி­யலும் நீளத் தொடங்­கி­யுள்­ளது.

இவை­யெல்லாம், நாட்டில் அதி­க­ரித்து வரும் எதேச்­சா­திகாரப் போக்கின் அறி­கு­றி­களே. இதன் விளைவு, ஆட்­சியைத் தக்­க­வைத்துக் கொள்­வ­திலும், தேர்­தல்­க­ளிலும், விளை­வு­களை ஏற்­ப­டுத்தக் கூடும்.

ஊட­கங்கள், சிவில் சமூகம், வெளி­நாடுகள்- இந்த மூன்­றி­னதும் பகையைச் சமா­ளித்துக் கொண்டு, ஒரு அர­சாங்­கத்­தினால் நெடு­நா­ளைக்குத் தாக்குப் பிடிக்க முடி­யாது.

அந்த உண்மை, விரை­வி­லேயே தற் போதைய அரசாங்கத்துக்கு உணர்த்தப்படக் கூடும்.

Share.
Leave A Reply