ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் விசா­ரணை செயற்­பா­டு­க­ளுடன் இலங்கை அர­சாங்கம் ஒத்­து­ழைக்கும் என்று நாங்கள் தொடர்ச்­சி­யாக நம்­பு­கின்றோம்.

எனினும் அவர்கள் ஒத்­து­ழைக்­கா­வி­டினும் ஐக்­கிய நாடு­களின் விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­படும், இந்த விசா­ரணைக் குழு­வா­னது அனு­ப­வ­ம் கொண்ட அதி­கா­ரி­க­ளுடன் ஆலோ­சனைக் குழு­வொன்­றையும் கொண்­டுள்­ளது.

அவர்கள் சிறப்பான செயற்­பாட்டை முன்­னெ­டுப்­பார்கள் என்­பதில் ஐய­மில்லை என்று இலங்­கைக்­கான பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் ஜோன் ரன்கின் தெரி­வித்தார்.

காணாமல் போனோர் தொடர்­பாக விசா­ரிக்கும் ஆணைக்­கு­ழுவின் ஆணை விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை தொடர்­பாக அவ­தா­னித்­துள்ளோம். அத்­துடன் மூன்று நிபு­ணர்­களைக் கொண்ட ஆலோ­சனைக் குழுவும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

இவற்றை நாம் பொறுத்­தி­ருந்து பார்ப்போம். அந்த செயற்­பாடு நம்­ப­க­ர­மா­கவும் சுயா­தீ­ன­மா­கவும் வெளிப்­ப­டை­யா­கவும் இருந்தால் அதனை நாங்கள் வர­வேற்போம். இலங்­கையில் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்டும் என்­பது எமது நோக்­க­மல்ல, ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ ஜன­நா­யக ரீதியில் தெரிவு செய்­யப்­பட்­டவர்.

இலங்கை அர­சாங்­கமும் ஜன­நா­யக ரீதியில் தெரிவு செய்­யப்­பட்­டது. நாம் நீண்ட கால ஸ்தி­ரத்­தன்­மைக்­கான அர்ப்­ப­ணிப்பை வெளிப்­ப­டுத்­து­மாறே கூறு­கின்­றோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

Share.
Leave A Reply