அரசியலமைப்புச் சட்டவிதிகளின்படி, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவை அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியலமைப்பு விதிகளின்படி, மகிந்த ராஜபக்ச, மூன்றாவது முறை அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகைமையற்றவர்.

2010 நவம்பர் 19ம் நாள், அரசியலமைப்பின் 31/2 வது பிரிவுக்கமையவே இரண்டாவது பதவிக்காலத்துக்காக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர் என்பதால், மூன்றாவது தடவை அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகுதி அவருக்கு இல்லை.

பின்னர், இரண்டாவது பதவிக்காலத்தில் உள்ள ஒருவர், மூன்றாவது தடவையும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும் என்று, அரசியலமைப்பில் 18வது திருத்தம் கொண்டு வரப்பட்டது .

எவ்வாறாயினும், மகிநத ராஜபக்ச பதவியேற்ற போது அரசியலமைப்பின் 31/2வது பிரிவில், 18வது திருத்தம் இருக்கவில்லை.

எனவே, ஏற்கனவே இரண்டு முறை அதிபராகப் பதவி வகித்து விட்ட அவர், மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது” என்றும் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply