சிம்பு – ஆர்யா போன்ற நடிகர்கள் என்னுடன் நடித்த சக நடிகர்கள் அவ்வளவுதான். அவர்களுடன் இணைத்து என்னைப் பேசுவது வருத்தமாக உள்ளது, என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.
நயன்தாரா மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து ஐயா, சந்திரமுகியில் நடித்து புகழ்பெற்றார். அடுத்து அவர் சிம்பு படத்தில் நடித்த போது, இருவரும் காதலர்களாகினர். இருவரது நெருக்கமான படங்களும் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பு கிளம்பியது. ஆனால் சிறிது காலத்தில் இருவருக்குள்ளும் சண்டை வந்து, பிரிந்து போய்விட்டார்கள்.
அடுத்து பிரபுதேவா விவகாரம். அதிலிருந்து வெளியில் வந்த நயன்தாரா, ராஜா ராணி படத்தின் போது ஆர்யாவைக் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வந்தன.
இப்போது மீண்டும் அவர் சிம்புவுடன் நடிக்க ஆரம்பித்ததும், இருவரும் நெருக்கமாக உள்ளதாக செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.
இதுகுறித்து நயன்தாரா கூறுகையில், “என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன. சிம்புவுடன் இணைத்து எழுதுகிறார்கள். ஆர்யாவை காதலிக்கிறேன் என்றும் பேசுகிறார்கள்.
தில் துளியும் உண்மை இல்லை. நாங்கள் நடிகர்கள். தொழில் மீது ஈடுபாடு காட்டுகிறோம். ஒருவருக்கொருவர் நட்பாக பழகுகிறோம். இதை தவிர எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை. இது போன்ற கிசுகிசுக்களை சில நடிகர்கள் விரும்புகிறார்கள். சிலர் விரும்புவதில்லை.
இந்தி நடிகர்கள் இப்படி வதந்திகள் பரவ வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். இதன் மூலம் தங்களுக்கு விளம்பரம் கிடைப்பதாக கருதுகின்றனர். தங்களை பற்றி கிசு கிசுக்கள் வரும் போது அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். அதற்கு பதில் சொல்வதே இல்லை.
தமிழ் திரையுலகிலும் இது போன்ற நிலைமை இருக்கிறது. ஆனால் தெலுங்கு நடிகர்கள் அப்படி இல்லை. கிசுகிசுக்கள் வரும் போது உடனடியாக அதற்கு மறுப்போ விளக்கமோ சொல்லி விடுகின்றனர். என்னைப் பொருத்தவரை என்னை இணைத்து வரும் கிசுகிசுக்கள் அனைத்துமே பொய்யானவை,” என்றார்.