யாழ். மணிக்கூட்டு கோபுர சுற்று வட்டத்தில் தமிழ் மன்னர்கள் மூவரினது சிலைகள் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மன்னர்களான எல்லாளன், பண்டாரவன்னியன், பரராஜசேகரன் ஆகிய மூன்று மன்னர்களினது சிலைகளுமே திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இச் சிலைகளினை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் மதபெரியோர்கள், வரலாற்று துறை சார்ந்தோர், கலை காலாசாரம் சார்ந்த அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.