நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூருக்கு ஒரு காலத்தில் ராக்கி கட்டிவிட்டுள்ளார். பெண்கள் தங்களின் சகோதரர்கள் மற்றும் தாங்கள் சகோதரர்களாக நினைப்பவர்களுக்கு கையில் ராக்கி கட்டும் ரக்ஷா பந்தன் இன்று கொண்டாடப்படுகிறது.

sriபெண்கள் எங்கே தங்கள் கையில் ராக்கி கட்டிவிடுவார்களோ என்ற பயத்தில் தெறித்து ஓடும் ஆண்களும் உண்டு. இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூருக்கு ராக்கி கட்டிய விஷயம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

srideஸ்ரீதேவி ஏற்கனவே திருமணமான இந்தி நடிகர் மிதுன் சக்ரபர்த்தியை காதலித்தார். ஏன் அவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர் என்று அப்போது செய்திகள் வெளியாகின.

மிதுன் தனது முதல் மனைவியை பிரியவில்லை என்றும், அவரை பிரிய மனம் இல்லை என்றும் அறிந்த ஸ்ரீதேவி அவரை விட்டுவிலகி வந்துவிட்டாராம்.

sridevஸ்ரீதேவி மிதுனுடன் தொடர்பு வைத்திருந்தபோது போனி கபூருக்கு ராக்கி கட்டிவிட்டுள்ளார். அந்த போனி கபூர் தான் தற்போது ஸ்ரீதேவியின் கணவர்.

மிதுனை பிரிந்த ஸ்ரீதேவி போனி கபூர் மற்றும் அவரது மனைவி மோனாவுடன் நெருக்கமானார். காலப்போக்கில் ஸ்ரீதேவி போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் மோனா, போனி கபூர் விவாகரத்து பெற்றனர்.

 

Share.
Leave A Reply