செல்போனின் செல்ஃபி எடுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில், போலந்து நாட்டு தம்பதி, மலை உச்சியில் இருந்து கால்தவறி கடலில் விழுந்து இறந்த சம்பவம் பிரபல சுற்றுலா தலமான போலந்து நாட்டின் லிஸ்பன் அருகே நடந்துள்ளது.

செல்ஃபி போட்டோ எடுத்துக்கொள்வது இப்போது பேஷனாகிவிட்டது. எங்கு நோக்கினும் செல்ஃபி மயம்தான். இதே மயக்கத்தில்தான் போலந்து நாட்டு தம்பதி மலை உச்சியில் இருந்து கடலில் விழுந்து இறந்துள்ளனர்.

உயிரை பறித்த செல்ஃபி மோகம்! மலை உச்சியில் இருந்து கால் தவறி கடலில் விழுந்து இறந்த தம்பதி போலந்து நாட்டிலுள்ள பிரபல சுற்றுலா தலமான லிஸ்பன் அருகேயுள்ளது கபோ டே ரோகா.

இங்கு மலை குன்றை ஒட்டி, அட்லான்டிக் கடல் அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு தங்களது ஐந்து மற்றும் ஆறு வயது குழந்தைகளுடன் போலந்து தம்பதி ஒன்று வந்துள்ளது.

குழந்தைகளை ஓரமாக நிற்க செய்துவிட்டு மலை குன்றின் உச்சியில் நின்றபடி செல்ஃபி எடுத்துள்ளது அந்த தம்பதி. பின்பக்கம் இருந்த கடலும் சேர்ந்து படத்தில் விழ வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக மலையின் உச்சிபகுதிக்கே வந்த அந்த கணவனும், மனைவியும், குழந்தைகள் கண் எதிரிலேயே கடலில் விழுந்தனர்.

தகவல் அறிந்ததும் வந்த மீட்பு படையினர் கடலுக்குள் இருந்து சடலங்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Share.
Leave A Reply