இலங்­கைக்கு விஜயம் செய்­யா­ம­லேயே போர்க்­ குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பான ஆக்­க­பூர்­வ­மான விசா­ர­ணை­களை மேற்­கொள்ள முடியும். விசா­ரணை அறிக்­கை­யா­னது முறை­யான தரங்­க­ளுக்கு அமைய நம்­ப­க­மா­ன­தாக இருக்கும் என ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை தெரி­வித்­துள்ளார்.

நிரந்­தர சமா­தானம் மற்றும் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த ஒரு வழியை உரு­வாக்கிக் கொடுக்க இந்த விசா­ர­ணை­யா­னது உதவும் என்­ப­துடன் இது சகல இலங்­கை­யர்­க­ளுக்கு நன்­மை­யாக அமையும் என்­பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் நவ­நீதம் பிள்ளை குறிப்­பிட்­டுள்ளார்.

இந்­தியா மற்றும் தாய்­லாந்து ஆகிய நாடு­க­ளு­ககு வீசா விண்­ணப்­பங்கள் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தாக ஊட­கங்­களில் வெளி­யான செய்­தி­களில் உண்­மை­யில்லை. இலங்­கை­யி­டமோ அல்­லது வேறு நாடு­க­ளி­டமோ வீசா கோரி எவரும் விண்­ணப்­பிக்­க­வில்லை என்றும் அவர் கூறினார்.

தொம்சன் ராய்ட்டர் சேவைக்கு வழங்­கி­யுள்ள விசேட செவ்­வி­யி­லேயே ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை மேற்­கண்ட விட­யங்­களை குறிப்­பிட்­டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணை செயற்­பா­டுகள் தொடர்பில் இலங்­கை­யி­டமோ அல்­லது வேறு நாடு­க­ளி­டமோ வீசா கோரி எவரும் விண்­ணப்­பிக்­க­வில்லை. . இந்­தி­யா­விடம் வீசா­வுக்கு விண்­ணப்­பித்து நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­வதை மறுக்­கின்றோம்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணைக் குழு­வினர் நாட்­டுக்கு அனு­ம­திக்­கப்­பட்­டாலும் அனு­ம­திக்­கப்­ப­டா­விட்­டாலும் ஆதா­ரங்­களை உறு­திப்­ப­டுத்­து­வது சரி­யான தரத்தை பிர­தி­ப­லிக்கும் வகையில் அமைந்­தி­ருக்கும்.

இலங்­கைக்கு விஜயம் செய்­யா­ம­லேயே போர்க்­குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பான ஆக்­க­பூர்­வ­மான விசா­ர­ணை­களை மேற்­கொள்ள முடியும். இலங்­கைக்கு வெளியில் தக­வல்­களை பெறக் கூடிய சிறந்த வாய்ப்­புகள் உள்­ளன.

வட­கொ­ரிய மற்றும் சிரியா ஆகிய நாடுகள் தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணைகள் இதற்கு சிறந்த உதா­ர­ண­மாகும். இந்த இரண்டு நாடு­க­ளிலும் அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை. எனினும் விசா­ரணை செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

இந்த இரு நாடுகள் தொடர்­பான விசா­ர­ணைக்கும் இலங்கை சம்­பந்­த­மான விசா­ர­ணைக்கும் வித்­தி­யா­சங்கள் இருப்­ப­தாக நான் காண­வில்லை.

இந்­தியா மற்றும் தாய்­லாந்து ஆகிய நாடு­க­ளுக்­கான வீசா விண்­ணப்­பங்கள் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தாக ஊட­கங்­களில் வெளி­யாக செய்­தி­களில் உண்­மை­யில்லை. இலங்­கை­யி­டமோ அல்­லது வேறு நாடு­க­ளி­டமோ வீசா கோரி எவரும் விண்­ணப்­பிக்­க­வில்லை. ஆனால் கவ­லைக்­கி­ட­மான முறையில் தவ­றான தக­வல்­களும் திரி­பு­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­களும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

விசா­ர­ணைக்­கு­ழு­வினர் மற்றும் ஆலோ­சனை குழு உறுப்­பி­னர்கள் தொடர்­பாக சில இலங்கை ஊட­கங்­களில் திரி­வு­ப­டுத்­தப்­பட்ட தவ­றான தனிப்­பட்ட தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

12 பேர் கொண்ட விசா­ர­ணைக்­குழு ஜெனி­வாவை தள­மாக கொண்டு இயங்கும். தேவை ஏற்­பட்டால் வேறு நாடு­க­ளுக்கு விஜயம் செய்யும். விசா­ர­ணைக்­கு­ழு­வினர் சாட்­சி­யங்கள் பெறு­வ­துடன் தக­வல்­களை சேக­ரிக்­கின்­றனர்.

மேலும் அட்­டூ­ழிய குற்­றச்­சாட்­டுக்­களை சரி­பார்க்கும் பணியில் அவர்கள் ஈடு­பட்­டுள்­ளனர். விசா­ர­ணை­களில் அவர்கள் கண்­ட­றியும் விட­யங்­களை எதிர்­வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்பிப்பார்கள்.

குற்றச் செயல்களுக்கு யார் பொறுப்புக் கூறவேண்டும் என்பதை கண்டறியவே விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்த விடயமே இதன் தேவையாக இருந்தது.

இந்த விசாரணையானது சகல இலங்கையர்களுக்கு நன்மையாக அமையும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன் நிரந்தரமான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒரு வழியை உருவாக்கி கொடுக்க இது உதவும்.

Share.
Leave A Reply