ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய ஒருவரும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய ஒருவருக்கும் திருமணம் செய்து இரு பிள்ளைகள் சகிதம் அமைதியாக குடும்ப வாழ்வு வாழும் விநோதம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய நிக்கும் (27 வயது) ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய பியன்காவும் (32 வயது) கடந்த 7 வருடங்களாக இணைந்து வாழ்கின்றனர்.
அவர்களுக்கு கே (3 வயது) மற்றும் பக்ஸ் (ஒருவயது) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். நிகொலி என்ற இயற்பெயரைக் கொண்ட நிக் 7 வருடங்களாக ஆணாக வாழ்ந்து வருகின்றார். அதேசமயம் ஜேஸன் என்ற இயற்பெயரைக் கொண்ட மியன்கா கடந்த 11 வருடங்களாக பெண்ணாக வாழ்ந்து வருகின்றார்.
மேற்படி குழந்தைகள் தாயான பியன்காவின் விந்தணுக்கள் மற்றும் தந்தையான நிக்கின் கருமுட்டை என்பவற்றின் மூலம் கருத்தரித்து பிறந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த குழந்தைகளை தந்தையான நிக்கே தனது கருப்பையில் சுமந்து பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் பிரித்தானிய ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
நிர்வாணமாக ஓடிய முதியவர் பொலிஸாரின் வாகனத்தில் மோதுண்டு பலி!
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பரபரப்பான சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த நபர் ஒருவர் பொலிஸாரின் வாகனத்தின் மீது மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தென்கிழக்கு பகுதியிலுள்ள பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை நபர் ஒருவர் நிர்வாணமாக சாலை நடுவே படுத்து கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து பொலிசார் அப்பகுதி முழுவதும், அந்த நபரை தேடி அலைந்துள்ளனர்.
இரவு 10.20 மணியளவில் மீண்டும் அதே நபர் நிர்வாணமாக வீதியில் நடமாடுவதாக பொலிஸாருக்கு தகவல் வந்ததுள்ளது. தகவலறிந்த பொலிசார், நான்கு வாகனங்களில் பகுதிக்கு விரைந்துள்ளனர்.
பொலிஸ் வாகனங்களின் சத்தத்தை வைத்து, சுதாரித்துக்கொண்டு வீதிகளில் ஓட ஆரம்பித்துள்ளார் அந்த நபர்.
இந்நிலையில் அவரை வேகமாக துரத்தி வந்த பொலிஸ் வாகனம் ஒன்றின் மீதே எதிர்பாராத விதமாக ஓடிச் சென்று மோதியுள்ளார். சம்பவ இடத்திலேயே குறித்த நபர் அதிக ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.
இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொலிஸார், “விபத்தில் இறந்த நபர் யார் என்று இதுவரை அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நபருக்கு சுமாராக 50 முதல் 60 வயது வரை இருக்கலாம். மேலும் அவர் எதற்காக நிர்வாணமாக தெருக்களில் சுற்றித்திரிந்தார் என விசாரணை செய்யப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.