இலங்­கைப்­  பி­ரச்­சி­னையை தவ­றான முறையில் இந்­திய முன் னாள் பிர­தமர் ராஜீவ் காந்தி கையாண்­டதே அவரின் கொலைக்கு வழி­வ­குத்­தது. தீர்க்க தரிசனத்­துடன், நுட்­ப­மான முறையில் இலங்கைப் பிரச்­சி­னையை அவர் கையாண்­டி­ருப்­பா­ராயின்  ஈழத்­த­மி­ழரின் இன்­றைய அவ­லத்­துக்கு வழிவகுத்திருக்­காது என்ற உண்­மையை அண்­மையில் தெரி­வித்­தி­ருந்தார் இந்­தி­யாவின் முன்னாள் மத்­திய அமைச்சர் நட்­வர்சிங்.

முன்னாள் மத்­திய வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­ச­ரான நட்­வர்சிங் தனது அர­சியல் அனு­ப­வங்­களே ‘ஒன் லைப் இஸ் நாட் எனாப்’ என்ற தலைப்பில் சுயசரிதை­யாக எழு­திய நூலி­லேயே மேற்­கண்ட தக­வலைத் தெரி­வித்­தி­ருந்தார்.

showImageInStoryஅவர் தனது நூலில் இலங்கை விவ­காரம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை தமிழர் பிரச்­சி­னையை ராஜீவ்­காந்தி தவ­றாக எடை­போட்டு தவ­றான கொள்­கை­களை கடைப்­பி­டித்­த­மையே அவரின் கொலைக்கு வழி­வ­குத்து விட்­டது.

இலங்கை இனப்­பி­ரச்­சி­னையில் ராஜீ­வுக்கு ஆலோ­சனை வழங்­கி­ய­வர்கள் தவ­றான ஆலோ­ச­னையை வழங்­கி­யதன் கார­ண­மா­கவே தவ­றான முடிவுகளையும் தீர்க்­க­மற்ற செயல்­க­ளிலும் அவர் ஈடு­பட வேண்டி வந்­தது என தனது விமர்­சன ரீதி­யான கருத்­துக்­களை கூறி­யி­ருப்­ப­துடன், இன்னும் பல உண்­மை­களை பூட­க­மாக அந்­நூலில் வெளி­யிட்­டுள்ளார்.

ராஜீவ் காந்­தியின் கொலை நடந்து சுமார் 23 வரு­டங்­க­ளுக்­குப்­பி­றகு, அதிலும் இந்­தி­யப் ­பா­ரா­ளு­மன்­றத்தின் ஆட்சி பீடங்கள் பல்­வேறு மாற்றங்களைக்கண்டு இந்­திய காங்­கி­ரஸின் படு­தோல்­விக்குப் பின் பார­தீய ஜன­தாவின் முக்­கிய தலைவர் நரேந்­திர மோடி பிர­த­ம­ரான பின்னர் இந்த உண் ­மைகள் தற்­பொ­ழுது வெளி­வந்து கொண்­டி­ருக்­கின்­றன.

இதில் ஆச்­ச­ரி­யப்­ப­டக்­கூ­டிய விட­ய­மென்­ன­வென்றால்,

Prabhakaran2விடு­தலைப் புலி­களின் தலைவர் வே. பிர­பா­க­ரனை தன்­னிடம் கைய­ளிக்­கு­மாறு முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­தன 1986ஆம் ஆண்டு இந்­தி­யப் ­பிரதமர் ராஜீவ் காந்­தி­யிடம் கோரிக்கை விடுத்­த­தா­கவும், அவ்­வாறு ஒப்­ப­டைத்தால் யாழ்ப்­பா­ணத்தில் வைத்து அவரைத் தூக்­கி­லி­டப்­போ­வ­தாகத் தெரிவித்­தி­ருந்­த­தா­கவும்  இந்­திய முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்­ச­ரான நட் ­வர்சிங் தனது நூலில் குறிப்­பிட்­டுள்ளார்.

நட்வர் சிங்கின் இந்த சுய­ச­ரிதை நூல் இலங்கை பற்­றிய பல அதிர்ச்­சி­யான தக­வல்­க­ளையும் அதே­வேளை, முன்னாள் ஆட்­சி­யா­ளர்­க­ளான காங்­கிரஸ் கட்சியின் தீர்க்க தரி­ச­ன­மற்ற கொள்­கை­க­ளையும்  தலை­மை ப்­பீ­டங்­களின் சாணக்­கி­ய­மற்ற போக்­கு­க­ளையும் புட்­டுக்­காட்­டு­வ­தாக அமைந்­துள்­ளது.

இந்­திய காங்­கிரஸ் இந்­தி­யப் ­பா­ரா­ளு­மன்ற வர­லாற்றில் தனக்­கெனத் தனி­யான ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட கட்சி. பண்­டிதர் ஜவ­ஹர்லால் நேரு, திரு­மதி இந்­திரா காந்தி அம்­மையார், அதன் பின்னே அவரின் புதல்வர் ராஜீவ் காந்தி….,

டாக்டர் மன்­மோ­கன்சிங் போன்ற சாணக்­கிய வல்­லா­ளர்­க­ளாலும் உலக அரங்கில் கொடி கட்­டிப்­ப­றந்த தலை­வர்­க­ளாலும் ஆளு­மை ப்­ப­டுத்­தப்­பட்ட காங்­கிரஸ் கட்­சியின் முன்னாள் தலை­வ­ரா­கவும் வெளி­வி­வ­கார அமைச்­ச­ரு­மாக இருந்த மூத்த தலைவர் ஒரு­வரால் இன்று காங்­கிரஸ் விமர்­சிக்­கப்­ப­டு­வதும், அதில் தவறு காண விளை­வதும் உலக அர­சியல்வாதி­களை திரும்பிப்பார் க்க வைக்கும் ஒரு விமர்­ச­ன­மா­கவே நினை க்­கப்­ப­டு­கி­றது.

23 வருட கால கடப்­பு­க­ளுக்­குப்பின் இந்த நூலை வெளி­யிட வேண்­டிய தேவை ஏன் ஏற்­பட்­டுள்­ளது?

natwar-singh1_CInatwar-singh
நட்­வர்­சிங்கின்
இந்த திடீர் தக­வல்கள் இவ்­வாறு வெளி­வந்து கொண்­டி­ருக்கும் அதே­வே­ளையில், இன்­னு­மொரு அதிர்ச்சி ஊட்டும் தகவல் வெளி­வந்திருந்தது.

அதில் ராஜீவ் காந்­தியின் படு­கொலை நடப்­ப­தற்கு முன்பே (21.5.1991) அவரின் வீட்டில் விடு­த­லைப்­புலி இயக்­கத்தைச் சேர்ந்த ஒருவர் இர­க­சி­ய­மாக ஊடுருவித் தஞ்சம் அடைந்­தி­ருந்தார் என்­பதில் தனக்கு எள்­ளவும் சந்­தே­க­மில்லை எனவும் இந்த உள­வா­ளிக்கு விடு­த­லைப்­புலி இயக்­கத்தைச் சேர்ந்த யாரோ முக்­கிய தக­வலை அளித்­துள்­ளனர் என்றும்,

தமிழ் நாட்டு நிர்­வா­கத்­துக்கு மட்­டுமே   விடு­த­லைப்­பு­லி­க ளின் சதி­பற்றி தெரிந்­தி­ருக்க வாய்ப்­புள்­ளது  எனவும்  ராஜீவ் காந்­தியின் முன்னாள் உதவியாளரான ஆர்.டி.பிரதான் என்­பவர் தான் எழு­திய ‘மை இயர்ஸ் வித் ராஜீவ் அன்ட் சோனியா’ என்ற புத்­த­கத்தில் தெரி­வித்­துள்ளார்.

ஏறத்­தாழ நட்­வார்சிங் வெளி­யிட்ட நூலைப் ­போ­லவே இந்த நூலும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. பிரதான் தனது நூலில் மேலும் ராஜீவ் காந்தி கொலை­யு டன் உடன்­பட்­ட­வர்கள் என்ற பேரில் பலர் கைது செய்­யப்­பட்ட போதிலும் இந்த கொலை தொடர்­பான முழு உண்­மை­யை யும் அறிய முடி­யாதெனவே நான் நினைக்­கின்றேன் என தனது சந்­தே­கத்­தையும் வெளிக்­கொண்டு வந்­தி­ருந்தார்.

இவ்­வி­டத்தில் ராஜீவ் காந்­தியின் படு­கொலை சம்­பந்­த­மான சுருக்­கக்­கு­றிப்பை அறிந்து கொள்­வது இக்­கட்­டு­ரைக்கு வலுச்­சேர்ப்­ப­தாக அமையும். இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தின் பிதா­ம­க­ரான பார­தப்­ பி­ர­தமர் ராஜீவ் காந்­தி­ தேர்தல் பிர­சாரம் ஒன்­று க்­காக தமிழ் நாட்­டி­லுள்ள ஸ்ரீ பெரும்புத் தூர் என்­னு­மி­டத்­திற்கு சென்ற சமயம் அங்கு குண்டு வெடிப்பில் பலி­யானார்.

இந்­தி­யப்­ பி­ர­த­ம­ராக இருந்த சந்­தி­ர­சேகர் தனது பிர­தமர் பத­வியை (07.03.1991) ராஜி­னாமா செய்­த­தைத் ­தொ­டர்ந்து இந்­தி­யப் ­பா­ரா­ளு­மன்­றத்­துக்­கான தேர்தல் அறி­விக்­கப்­பட்­டது.

ஜூன் மாதத்தில் தேர்தல் நடை­பெற அறி­வித்தல் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இப்­பா­ரா­ளு­மன்றத் தேர்­த­லுடன் தமி­ழக சட்ட சபை தேர்­தலும் நடை­பெ­று­வ­தாக இருந்­தது. தேர்தல் பிர­சார நிகழ்ச்சி நிர­லின்­படி மே மாதம் 21ஆம் திகதி (21.5. 1991) தமி­ழக பிர­சா­ரத்­துக்குத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.

மே 21ஆம் திகதி பகல் ஆந்­தி­ராவில் தேர் தல் பிர­சா­ரத்தை செய்துவிட்டு மாலை 6.30 மணிக்கு விமான மூலம் சென்னை செல்­வ­தாக ஏற்­பா­டுகள் செய்யப்பட்­டி­ருந்­தன.

ஆனால் விமா­னத்தில் ஏற்­பட்ட கோளாறு கார­ண­மாக சென்­னைப்­ பி­ர­சா­ர த்தை ஒத்தி வைக்க முனைந்தபோது விமானம் திருத்­தப்­பட்ட நிலையில் மாலை 7 மணிக்கு சென்னை நோக்கி அவர் புறப்­பட் டார். சுமார் 8.30 மணிக்கு சென்னை வந்­த­டைந்த ராஜீவ் காந்தி, சென்­னை­யி­லி­ருந்து ஸ்ரீ பெரும்­பு­தூ­ருக்கு காரில் செல்ல ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

பொதுக்­கூட்டம் நடக்கும் மைதா­னத்­து க்கு அரு­கே­யுள்ள தனது தாயார் இந்­திரா காந்தி அம்­மை­யாரின் சிலைக்கு மாலை சூட்டி விட்டு ஆயி­ரக்­க­ணக்­கான மக்­களின் வர­வேற்பை ஏற்­றுக்­கொண்டார்.

பின்னர் பிர­சார மேடையில் கோகிலா என்னும் சிறு­மியால் பாடப்­பட்ட கவி­தையை கேட்டு இரசித்தார். அந்­தக்­ கூட்­டத் தில் தனு என பின்னர் அடை­யாளம் காண ப்­பட்ட மனித வெடிகுண்டால் அவர் படு­கொலை செய்­யப்­பட்டார். இதில் 18 பேர் உயி­ரி­ழந்­தனர். 21 பேர் படு­கா­ய­ம­டைந்­த னர்.

ராஜீவ் காந்­தியின் படு­கொலை உல­க த்தை அதிர்ச்­சிக்குள்ளாக்­கி­யது மாத்­தி­ர­மின்றி, இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான போக்கை மாற்­றி­ய­மைத்­தது.

இதே­வேளை, முன்னாள் மத்­திய அமை ச்சர் நட்­வர்சிங்கின் நூலில் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்கும் இரு தக­வல்கள் இந்­தி­யாவின் கொள்கை வகுப்பில் ஏற்­பட்ட தவற்றைக் காட்­டு­கி­றதா அல்­லது பார­தப்­பி­ர­தமர் ராஜீவ் காந்­தியின் தன்­னிச்­சை­யான போக்கை காலம் தாழ்த்தி வெளிக்­கொண்டு, வரும் ஒரு முயற்­சியா என்­பது அவ­தா­னிக்­கப்­பட வேண்­டிய விட­ய­மாகும்.

ராஜீவ் காந்தி விடு­த­லைப்­ பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ரனை இர­க­சி­ய­மாக சந்­தித்தார். அவர் ஓர் அனு­பவம் வாய்ந்த அர­சியல்வாதி­யல்ல. பிர­பா­க­ரனை நம்­பி னார். ஆனால் பிர­பா­கரன் அவரை ஏமாற்­றி­விட்டார் என்ற குறிப்­புடன் இன்­னொன்­றை யும் நட்­வர்சிங் தெரி­வித்­தி­ருந்தார்.

மத்­திய அமைச்­ச­ர­வை­யுடன் கலந்­தா­லோ­சிக்­கா­ம­லேயே இலங்­கைக்கு இந்­திய அமைதிப் படையை அனுப்பி வைத்தார் என்ற குற்­றச்­சாட்­டையும் நட்­வர்சிங் முன்­வைத்­துள்ளார்.

இதில் மேலே குறிப்­பிட்ட ராஜீவ் காந்தி பிர­பா­க­ரனை இர­க­சி­ய­மாக சந்­தித்தார் என்ற செய்தி குறித்த காலத்தில் இந்­திய ஊட­கங்­களில் பெரி­தாக பிரஸ்­தா­பிக்­கப்­பட்ட விஷ­ய­மாகும்.

இலங்கை ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­தன இந்­தியா அனுப்பி வைத்­தி­ருந்த நிவா­ரணப் பொருட்­களை ஏற்­காமல் நிரா­க­ரித்துக் கொண்­டமை கார­ண­மாக கோபம் கொண்ட இந்­திய அரசு, இலங்­கையின் பிடி­வா­தத்தை அடக்கும் முறை யில் 1987ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் திகதி ஐந்து விமா­னங்கள் மூலம் நிவா­ரணப் பொருட்­களை யாழ். குடா நாட்­டுக்குள் வீசி­யதை தொடர்ந்து ஏற்­பட்ட நிர்ப்­பந்தம் கார­ண­மாக இலங்கை – இந்­திய ஒப்­பந்தம் கைச்­சாத்­தா­னது.

இந்த ஒப்­பந்தம் நிறை­வே­று­வ­தற்கு இரு வாரங்­க­ளுக்கு முன் ஒரு சம்­ப­வ­மொன்று நடந்­தே­றி­யது.

இந்­திய பிர­தமர் ராஜீவ் காந்­தி­ விடு­த­லைப்­புலி இயக்கத் தலைவர் பிர­பா­க­ர­னையும் அவ­ரு­டைய ஆலோ­சகர் அன்டன் பால­சிங்­கத்­தையும் இர­க­சி­ய­மாக தனது இல்­லத்­துக்கு அழைத்து இலங்கை – இந்­திய ஒப்­பந்தம் பற்­றிய உரு­வாக்­கத்­தையும் அதன் இன்­னு­மொரு வடி­வ­மான மாகாண சபை முறை­யையும் எடுத்­துக்­கூறி அதை ஏற்­றுக்­கொள்­ளும்­படி வற்­பு­றுத்­தி­யி­ருந்தார்.

இலங்கை -– இந்­திய ஒப்­பந்­தத்தின் சூட்­சு­மத்தையும் மாகாண சபை முறையின் அதி­கார வெற்­றுத்­தன்­மை­யையும் வாசித்துத் தெரிந்து கொண்ட பிர­பா­கரனும் பால­சிங்­க மும் மறு­த­லித்த நிலையில் ராஜீவ் காந்தி இவ்­வொப்­பந்­தத்தை எதிர்க்­கக்­கூ­டாது என்று வற்­பு­றுத்­தி­ய­துடன், வட­கி­ழக்கில் இடைக்­கால நிர்­வாக அர­சொன்றை குறைந்த அதி­கா­ரங்­க­ளோடு விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு வழங்­கு­வ­தா­கவும் உறு­தி­ய­ளித் தார்.

ராஜீவ் காந்­தியின் வாக்­கு­று­தி­யிலோ யோச­னை­யிலோ தமக்கு நம்­பிக்கை இல்­லாதிருந்த போதிலும், இந்­திய அர­சுடன் ஏற்­ப­டக்­கூ­டிய மோத­லையும் முரண்­பாட்­டையும் தவிர்த்துக் கொள்ளுமுக­மாக ராஜீவ் காந்­தியின் யோச­னையை தாம் ஏற்­றுக்­கொண்­ட­தாக அவர்கள் இரு­வரும் தெரி­வித்­தி­ருந்­தனர்.

ராஜீவ்­காந்தி இலங்­கைக்கு இந்­திய படை யை அவ­சரம் அவ­ச­ர­மாக அனுப்­பி­ய­தற்­கு­ரிய கார­ணங்கள் என்ன என்­பது பற்­றிய பிந்­திய தேடல் தற்­பொ­ழுது தமிழ­கத்­திலும் டில்லி மத்­தி­யிலும் சர்ச்­சைக்­கு­ரிய விட­ய­மாகப் பார்க்­கப்­ப­டு­கின்­றது.

ராஜீவ்­காந்தி மத்­திய அர­சுடன் ஆலோ­சனை நடத்­தாமல் இலங்­கைக்கு அமை­திப்­ப­டையை அனுப்ப வேண்­டிய தேவை­பற்றி எதிர்க்­கட்­சிகள் குறிப்­பி­டு­கையில்,

‘இலங்­கையில் இந்­திய படை­’யென்னும் தலைப்பில் தான் எழு­திய நூலில் குறிப்­பிட்ட விட­யங்­க­ளுடன் ஒப்­பிட்டு பார்க்­கை யில், ராஜீவ் காந்­திக்கு போஃபர்ஸ் என்னும் விடயம் பூதா­க­ர­மாக உரு­வெ­டுத்த நிலையில் தனக்கு போர்பஸ் ஊழலால் சரிந்து கொண்­டி­ருந்த செல்­வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்தவே இலங்கை – இந்­திய ஒப்­பந்தம் என்னும் உடன்­ப­டிக்­கையை மேற்­கொண்டு உலகை ஈர்க்க முயன்றார் என்று குற்றம் சுமத்­தி­யுள்­ளன.

எனவே இந்­திய பிர­தமர் ராஜீவ் காந்தி இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தின் ஊடா­கவோ அல்­லது மாகாண சபை முறை­யொன்றின் மூல­மா­கவோ இல ங்கை தமிழ் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை காண முய­ல­வில்­லை­யென்ற கடும்­போக்கு விமர்­ச­னங்கள் தற்­பொ­ழுது வெளி­வந்து கொண்­டி­ருக்­கின்­றன.

ராஜீவ்­காந்தி படு­கொலை செய்­யப்­பட்டு இலங்கை – இந்­திய ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்டும் சுமார் கால் நூற்­றாண்­டுகள் கழிந்த நிலையில் இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்தில் இது­வரை இந்­தியா மௌனமே சாதித்து வந்­துள்­ளது என்­பது வெளிப்­ப­டை­யான உண்மை. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

மேலும், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இலங்கை இனப்பிரச்சினை விவகா ரத்தில் அது கைக்கொண்டிருந்த உள்ளார் த்தமான கொள்கைகளை முள்ளிவாய்க்கால் யுத்த நிலையிலும் அதன்பின் அமெரிக் காவால் இலங்கைக்கெதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நீர்த்துப்போக வைத்தமையும் அதன் பின்னே எதிராக வாக்களித்தமையும் இறுதியில் நடு நிலை மை வகித்தமையும் தெளிவுபடுத்துகின் றன.

ஆனால், இந்தியாவின் புதிய அரசாங்கத் தின் வரவு, இலங்கை இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் புதிய பாலாபலன்களை கொண்டு வரலாமென்ற ஆழமான நம்பிக் கைகள் இருந்து வந்த போதிலும், புதிய அரசாங்கத்தின் கடுமையான மௌனம் யாருக்கும் நம்பிக்கை தருவதாகயில்லை.

இலங்கை தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் இந்திய பிரதமர் புதிதான சாணக்கியம் எதையும் கையாளலாம் என்ற எதிர்பார்ப்பின் மத்தியில் தமிழர் தரப்பினர் அழைப்பினை எதிர்பார்த்துக் கொண்டி ருக்கின்ற போது, காலம் தாழ்த்தப்படும் சூழ் நிலையே இன்றைவரை காணப்படுகிறது.

இதன் நடுவே சர்வதேச விசாரணைக் குழுவை இந்தியாவுக்குள் அனுமதிக்கப் போவதில்லையென்ற டில்லியின் நிலை ப்பாடு, சுப்பிரமணிய சுவாமியின் திடீர் விஜ யம், இதன் மத்தியில் சர்ச்சையை கிளப்பி யிருக்கும் இலங்கை பாதுகாப்பு அமை ச்சின் இணையத்தள கட்டுரை என்பன போன்ற அடுக்கடுக்கான பிரச்சினைகள் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை அமுங்கச் செய்து விட்ட னவே தவிர தெளிவான நிலையை உருவாக் கவில்லையென்பதே உண்மை.

திரு­மலை நவம்

Share.
Leave A Reply