அமெரிக்க மின்னேஸோரா மாநிலத்திலுள்ள சிறிய நகரொன்றின் மேயராக 7 வயதான டியூக் என்ற நாய் இந்த வாரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி கொர்மொரான்ட் நகரைச் சேர்ந்த 12 பேர் தமது வாக்குகளை செலுத்துவதற்கு தலா ஒரு டொலரை கட்டணமாக செலுத்தியுள்ளனர்.
மேயர் பதவிக்காக டியூக்குடன் போட்டியிட்ட மனித வேட்பாளரான ரிச்சர்ட் ஷெர்புறூக் இந்தத் தேர்தலில் படுதோல்வியை தழுவியுள்ளார்.
இந்நிலையில் இந்த நாய் நாளை சனிக்கிழமை கொர் மொரான்ட் நகர மேயராக உத்தியோகபூர்வமாக பதவி ஏற்கவுள்ளது.
மேற்படி நாய்க்கு மேயர் பதவிக்கான ஊதியமாக உள்ளூர் மிருக உணவு விற்பனை நிலையமொன்று ஒரு வருடத்துக்கான நாய்களுக்கான உணவை வழங்கியுள்ளது.
மேயராக செல்லப்பிராணியொன்று பதவி வகிப்பது இது முதல் தடவையல்ல. கடந்த 17 வருட காலமாக அமெரிக்க அலாஸ்கா மாநிலத்தில் டோக்கீட்னா நகரின் கௌரவ மேயராக ஸ்டப்ஸ் என்ற
பூனை பதவி வகித்து வருகிறது. மேற்படி பூனை பிறந்து சொற்ப காலத்துக்குள் அந்தப் பதவியை ஏற்றிருந்தது.
அந்த பூனை கடந்த வருடம் உள்ளூர் நாயொன்றால் மேற்கொள்ளப்பட்ட படுகொலை தாக்குதலில் (!) உயிர் தப்பியமை குறிப்பிடத்தக்கது.