இலங்கைப் பிரச்சினையை தவறான முறையில் இந்திய முன் னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கையாண்டதே அவரின் கொலைக்கு வழிவகுத்தது. தீர்க்க தரிசனத்துடன், நுட்பமான முறையில் இலங்கைப் பிரச்சினையை அவர் கையாண்டிருப்பாராயின் ஈழத்தமிழரின் இன்றைய அவலத்துக்கு வழிவகுத்திருக்காது என்ற உண்மையை அண்மையில் தெரிவித்திருந்தார் இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங்.
முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரான நட்வர்சிங் தனது அரசியல் அனுபவங்களே ‘ஒன் லைப் இஸ் நாட் எனாப்’ என்ற தலைப்பில் சுயசரிதையாக எழுதிய நூலிலேயே மேற்கண்ட தகவலைத் தெரிவித்திருந்தார்.
அவர் தனது நூலில் இலங்கை விவகாரம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை தமிழர் பிரச்சினையை ராஜீவ்காந்தி தவறாக எடைபோட்டு தவறான கொள்கைகளை கடைப்பிடித்தமையே அவரின் கொலைக்கு வழிவகுத்து விட்டது.
இலங்கை இனப்பிரச்சினையில் ராஜீவுக்கு ஆலோசனை வழங்கியவர்கள் தவறான ஆலோசனையை வழங்கியதன் காரணமாகவே தவறான முடிவுகளையும் தீர்க்கமற்ற செயல்களிலும் அவர் ஈடுபட வேண்டி வந்தது என தனது விமர்சன ரீதியான கருத்துக்களை கூறியிருப்பதுடன், இன்னும் பல உண்மைகளை பூடகமாக அந்நூலில் வெளியிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தியின் கொலை நடந்து சுமார் 23 வருடங்களுக்குப்பிறகு, அதிலும் இந்தியப் பாராளுமன்றத்தின் ஆட்சி பீடங்கள் பல்வேறு மாற்றங்களைக்கண்டு இந்திய காங்கிரஸின் படுதோல்விக்குப் பின் பாரதீய ஜனதாவின் முக்கிய தலைவர் நரேந்திர மோடி பிரதமரான பின்னர் இந்த உண் மைகள் தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இதில் ஆச்சரியப்படக்கூடிய விடயமென்னவென்றால்,
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை தன்னிடம் கையளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன 1986ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் கோரிக்கை விடுத்ததாகவும், அவ்வாறு ஒப்படைத்தால் யாழ்ப்பாணத்தில் வைத்து அவரைத் தூக்கிலிடப்போவதாகத் தெரிவித்திருந்ததாகவும் இந்திய முன்னாள் வெளிவிவகார அமைச்சரான நட் வர்சிங் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
நட்வர் சிங்கின் இந்த சுயசரிதை நூல் இலங்கை பற்றிய பல அதிர்ச்சியான தகவல்களையும் அதேவேளை, முன்னாள் ஆட்சியாளர்களான காங்கிரஸ் கட்சியின் தீர்க்க தரிசனமற்ற கொள்கைகளையும் தலைமை ப்பீடங்களின் சாணக்கியமற்ற போக்குகளையும் புட்டுக்காட்டுவதாக அமைந்துள்ளது.
இந்திய காங்கிரஸ் இந்தியப் பாராளுமன்ற வரலாற்றில் தனக்கெனத் தனியான ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட கட்சி. பண்டிதர் ஜவஹர்லால் நேரு, திருமதி இந்திரா காந்தி அம்மையார், அதன் பின்னே அவரின் புதல்வர் ராஜீவ் காந்தி….,
டாக்டர் மன்மோகன்சிங் போன்ற சாணக்கிய வல்லாளர்களாலும் உலக அரங்கில் கொடி கட்டிப்பறந்த தலைவர்களாலும் ஆளுமை ப்படுத்தப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகவும் வெளிவிவகார அமைச்சருமாக இருந்த மூத்த தலைவர் ஒருவரால் இன்று காங்கிரஸ் விமர்சிக்கப்படுவதும், அதில் தவறு காண விளைவதும் உலக அரசியல்வாதிகளை திரும்பிப்பார் க்க வைக்கும் ஒரு விமர்சனமாகவே நினை க்கப்படுகிறது.
23 வருட கால கடப்புகளுக்குப்பின் இந்த நூலை வெளியிட வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டுள்ளது?
natwar-singh
நட்வர்சிங்கின் இந்த திடீர் தகவல்கள் இவ்வாறு வெளிவந்து கொண்டிருக்கும் அதேவேளையில், இன்னுமொரு அதிர்ச்சி ஊட்டும் தகவல் வெளிவந்திருந்தது.
அதில் ராஜீவ் காந்தியின் படுகொலை நடப்பதற்கு முன்பே (21.5.1991) அவரின் வீட்டில் விடுதலைப்புலி இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் இரகசியமாக ஊடுருவித் தஞ்சம் அடைந்திருந்தார் என்பதில் தனக்கு எள்ளவும் சந்தேகமில்லை எனவும் இந்த உளவாளிக்கு விடுதலைப்புலி இயக்கத்தைச் சேர்ந்த யாரோ முக்கிய தகவலை அளித்துள்ளனர் என்றும்,
தமிழ் நாட்டு நிர்வாகத்துக்கு மட்டுமே விடுதலைப்புலிக ளின் சதிபற்றி தெரிந்திருக்க வாய்ப்புள்ளது எனவும் ராஜீவ் காந்தியின் முன்னாள் உதவியாளரான ஆர்.டி.பிரதான் என்பவர் தான் எழுதிய ‘மை இயர்ஸ் வித் ராஜீவ் அன்ட் சோனியா’ என்ற புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
ஏறத்தாழ நட்வார்சிங் வெளியிட்ட நூலைப் போலவே இந்த நூலும் வெளியிடப்பட்டுள்ளது. பிரதான் தனது நூலில் மேலும் ராஜீவ் காந்தி கொலையு டன் உடன்பட்டவர்கள் என்ற பேரில் பலர் கைது செய்யப்பட்ட போதிலும் இந்த கொலை தொடர்பான முழு உண்மையை யும் அறிய முடியாதெனவே நான் நினைக்கின்றேன் என தனது சந்தேகத்தையும் வெளிக்கொண்டு வந்திருந்தார்.
இவ்விடத்தில் ராஜீவ் காந்தியின் படுகொலை சம்பந்தமான சுருக்கக்குறிப்பை அறிந்து கொள்வது இக்கட்டுரைக்கு வலுச்சேர்ப்பதாக அமையும். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிதாமகரான பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரம் ஒன்று க்காக தமிழ் நாட்டிலுள்ள ஸ்ரீ பெரும்புத் தூர் என்னுமிடத்திற்கு சென்ற சமயம் அங்கு குண்டு வெடிப்பில் பலியானார்.
இந்தியப் பிரதமராக இருந்த சந்திரசேகர் தனது பிரதமர் பதவியை (07.03.1991) ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்தியப் பாராளுமன்றத்துக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஜூன் மாதத்தில் தேர்தல் நடைபெற அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது. இப்பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்ட சபை தேர்தலும் நடைபெறுவதாக இருந்தது. தேர்தல் பிரசார நிகழ்ச்சி நிரலின்படி மே மாதம் 21ஆம் திகதி (21.5. 1991) தமிழக பிரசாரத்துக்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
மே 21ஆம் திகதி பகல் ஆந்திராவில் தேர் தல் பிரசாரத்தை செய்துவிட்டு மாலை 6.30 மணிக்கு விமான மூலம் சென்னை செல்வதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சென்னைப் பிரசார த்தை ஒத்தி வைக்க முனைந்தபோது விமானம் திருத்தப்பட்ட நிலையில் மாலை 7 மணிக்கு சென்னை நோக்கி அவர் புறப்பட் டார். சுமார் 8.30 மணிக்கு சென்னை வந்தடைந்த ராஜீவ் காந்தி, சென்னையிலிருந்து ஸ்ரீ பெரும்புதூருக்கு காரில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பொதுக்கூட்டம் நடக்கும் மைதானத்து க்கு அருகேயுள்ள தனது தாயார் இந்திரா காந்தி அம்மையாரின் சிலைக்கு மாலை சூட்டி விட்டு ஆயிரக்கணக்கான மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் பிரசார மேடையில் கோகிலா என்னும் சிறுமியால் பாடப்பட்ட கவிதையை கேட்டு இரசித்தார். அந்தக் கூட்டத் தில் தனு என பின்னர் அடையாளம் காண ப்பட்ட மனித வெடிகுண்டால் அவர் படுகொலை செய்யப்பட்டார். இதில் 18 பேர் உயிரிழந்தனர். 21 பேர் படுகாயமடைந்த னர்.
ராஜீவ் காந்தியின் படுகொலை உலக த்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மாத்திரமின்றி, இலங்கையின் இனப்பிரச்சினைக்கான போக்கை மாற்றியமைத்தது.
இதேவேளை, முன்னாள் மத்திய அமை ச்சர் நட்வர்சிங்கின் நூலில் தெரிவிக்கப்பட்டிருக்கும் இரு தகவல்கள் இந்தியாவின் கொள்கை வகுப்பில் ஏற்பட்ட தவற்றைக் காட்டுகிறதா அல்லது பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தியின் தன்னிச்சையான போக்கை காலம் தாழ்த்தி வெளிக்கொண்டு, வரும் ஒரு முயற்சியா என்பது அவதானிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இரகசியமாக சந்தித்தார். அவர் ஓர் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியல்ல. பிரபாகரனை நம்பி னார். ஆனால் பிரபாகரன் அவரை ஏமாற்றிவிட்டார் என்ற குறிப்புடன் இன்னொன்றை யும் நட்வர்சிங் தெரிவித்திருந்தார்.
மத்திய அமைச்சரவையுடன் கலந்தாலோசிக்காமலேயே இலங்கைக்கு இந்திய அமைதிப் படையை அனுப்பி வைத்தார் என்ற குற்றச்சாட்டையும் நட்வர்சிங் முன்வைத்துள்ளார்.
இதில் மேலே குறிப்பிட்ட ராஜீவ் காந்தி பிரபாகரனை இரகசியமாக சந்தித்தார் என்ற செய்தி குறித்த காலத்தில் இந்திய ஊடகங்களில் பெரிதாக பிரஸ்தாபிக்கப்பட்ட விஷயமாகும்.
இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன இந்தியா அனுப்பி வைத்திருந்த நிவாரணப் பொருட்களை ஏற்காமல் நிராகரித்துக் கொண்டமை காரணமாக கோபம் கொண்ட இந்திய அரசு, இலங்கையின் பிடிவாதத்தை அடக்கும் முறை யில் 1987ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் திகதி ஐந்து விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை யாழ். குடா நாட்டுக்குள் வீசியதை தொடர்ந்து ஏற்பட்ட நிர்ப்பந்தம் காரணமாக இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது.
இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதற்கு இரு வாரங்களுக்கு முன் ஒரு சம்பவமொன்று நடந்தேறியது.
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலைப்புலி இயக்கத் தலைவர் பிரபாகரனையும் அவருடைய ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தையும் இரகசியமாக தனது இல்லத்துக்கு அழைத்து இலங்கை – இந்திய ஒப்பந்தம் பற்றிய உருவாக்கத்தையும் அதன் இன்னுமொரு வடிவமான மாகாண சபை முறையையும் எடுத்துக்கூறி அதை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தியிருந்தார்.
இலங்கை -– இந்திய ஒப்பந்தத்தின் சூட்சுமத்தையும் மாகாண சபை முறையின் அதிகார வெற்றுத்தன்மையையும் வாசித்துத் தெரிந்து கொண்ட பிரபாகரனும் பாலசிங்க மும் மறுதலித்த நிலையில் ராஜீவ் காந்தி இவ்வொப்பந்தத்தை எதிர்க்கக்கூடாது என்று வற்புறுத்தியதுடன், வடகிழக்கில் இடைக்கால நிர்வாக அரசொன்றை குறைந்த அதிகாரங்களோடு விடுதலைப்புலிகளுக்கு வழங்குவதாகவும் உறுதியளித் தார்.
ராஜீவ் காந்தியின் வாக்குறுதியிலோ யோசனையிலோ தமக்கு நம்பிக்கை இல்லாதிருந்த போதிலும், இந்திய அரசுடன் ஏற்படக்கூடிய மோதலையும் முரண்பாட்டையும் தவிர்த்துக் கொள்ளுமுகமாக ராஜீவ் காந்தியின் யோசனையை தாம் ஏற்றுக்கொண்டதாக அவர்கள் இருவரும் தெரிவித்திருந்தனர்.
ராஜீவ்காந்தி இலங்கைக்கு இந்திய படை யை அவசரம் அவசரமாக அனுப்பியதற்குரிய காரணங்கள் என்ன என்பது பற்றிய பிந்திய தேடல் தற்பொழுது தமிழகத்திலும் டில்லி மத்தியிலும் சர்ச்சைக்குரிய விடயமாகப் பார்க்கப்படுகின்றது.
ராஜீவ்காந்தி மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தாமல் இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்ப வேண்டிய தேவைபற்றி எதிர்க்கட்சிகள் குறிப்பிடுகையில்,
‘இலங்கையில் இந்திய படை’யென்னும் தலைப்பில் தான் எழுதிய நூலில் குறிப்பிட்ட விடயங்களுடன் ஒப்பிட்டு பார்க்கை யில், ராஜீவ் காந்திக்கு போஃபர்ஸ் என்னும் விடயம் பூதாகரமாக உருவெடுத்த நிலையில் தனக்கு போர்பஸ் ஊழலால் சரிந்து கொண்டிருந்த செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்தவே இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்னும் உடன்படிக்கையை மேற்கொண்டு உலகை ஈர்க்க முயன்றார் என்று குற்றம் சுமத்தியுள்ளன.
எனவே இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாகவோ அல்லது மாகாண சபை முறையொன்றின் மூலமாகவோ இல ங்கை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை காண முயலவில்லையென்ற கடும்போக்கு விமர்சனங்கள் தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டும் சுமார் கால் நூற்றாண்டுகள் கழிந்த நிலையில் இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் இதுவரை இந்தியா மௌனமே சாதித்து வந்துள்ளது என்பது வெளிப்படையான உண்மை. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
மேலும், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இலங்கை இனப்பிரச்சினை விவகா ரத்தில் அது கைக்கொண்டிருந்த உள்ளார் த்தமான கொள்கைகளை முள்ளிவாய்க்கால் யுத்த நிலையிலும் அதன்பின் அமெரிக் காவால் இலங்கைக்கெதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நீர்த்துப்போக வைத்தமையும் அதன் பின்னே எதிராக வாக்களித்தமையும் இறுதியில் நடு நிலை மை வகித்தமையும் தெளிவுபடுத்துகின் றன.
ஆனால், இந்தியாவின் புதிய அரசாங்கத் தின் வரவு, இலங்கை இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் புதிய பாலாபலன்களை கொண்டு வரலாமென்ற ஆழமான நம்பிக் கைகள் இருந்து வந்த போதிலும், புதிய அரசாங்கத்தின் கடுமையான மௌனம் யாருக்கும் நம்பிக்கை தருவதாகயில்லை.
இலங்கை தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் இந்திய பிரதமர் புதிதான சாணக்கியம் எதையும் கையாளலாம் என்ற எதிர்பார்ப்பின் மத்தியில் தமிழர் தரப்பினர் அழைப்பினை எதிர்பார்த்துக் கொண்டி ருக்கின்ற போது, காலம் தாழ்த்தப்படும் சூழ் நிலையே இன்றைவரை காணப்படுகிறது.
இதன் நடுவே சர்வதேச விசாரணைக் குழுவை இந்தியாவுக்குள் அனுமதிக்கப் போவதில்லையென்ற டில்லியின் நிலை ப்பாடு, சுப்பிரமணிய சுவாமியின் திடீர் விஜ யம், இதன் மத்தியில் சர்ச்சையை கிளப்பி யிருக்கும் இலங்கை பாதுகாப்பு அமை ச்சின் இணையத்தள கட்டுரை என்பன போன்ற அடுக்கடுக்கான பிரச்சினைகள் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை அமுங்கச் செய்து விட்ட னவே தவிர தெளிவான நிலையை உருவாக் கவில்லையென்பதே உண்மை.
திருமலை நவம்