கிருஷ்ண ஜெயந்தி என்பது கிருஷ்ணா பரமாத்மாவின் பிறப்பை கொண்டாடும் பண்டிகையாகும். மதுராவில் பிறந்த கிருஷ்ணர் யமுனை நதியில் இழுத்துச் செல்லப்பட்டு கோகுலம் என்ற சிறிய கிராமத்தை வந்தடைந்தார்.
கோகுலத்திலும் பிருந்தாவனம் போன்ற அதனை சுற்றியுள்ள இடங்களிலும் தான் தன் ராசலீலைகளை கிருஷ்ணர் புரிந்திருக்கிறார். கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக விளங்கியது பிருந்தாவனம். அங்கே தான் ராதையுடனும் கோகுலத்தை சேர்ந்த பிற கொபியர்களுடனும் அவர் ராசலீலை புரிந்துள்ளார்.
பிருந்தாவனத்தில் கிருஷ்ணா பரமாத்மாவை ஸ்ரீ பங்கே பிஹாரி என்ற பெயரில் அழைத்துள்ளனர். இந்த இடத்திற்கு வரும் ஸ்ரீ பங்கே பிஹாரி கோபியர்களுடன் ராசலீலை புரிவார் என இது நாள் வரை நம்பப்பட்டு வருகிறது.
பிருந்தாவனத்தில் உள்ள ஒரு சிறிய சோலையை நிதிவன் என அழைத்தனர். இந்த இடத்திற்கு ஒவ்வொரு இரவும் கிருஷ்ணர் வந்து தன் தெய்வீக புல்லாங்குழலை வாசிப்பார் என உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.
அந்த இசையில் அந்த சோலையில் உள்ள மரங்கள் மனிதர்களாக மாறி நடனம் ஆட தொடங்கி விடுமாம். காலையில் மீண்டும் மரங்களின் தோற்றத்தை பெற்று விடுவார்கள்.
அந்த இடத்தில் கிருஷ்ண பரமாத்மா இருப்பதை மிக நன்றாக உணர முடியும் என்பது மிகவும் சுவாரசியமான தகவல்ககும். சொல்லப்போனால் பிருந்தாவனம் முழுவதும் இதனை உணர முடியுமாம். மேலும் நிதிவன் சோலைக்கு வந்து வணங்குபவர்களுக்கு வேண்டியது எல்லாம் நடைபெறும் எனவும் நம்பப்படுகிறது.
ஆனால் கிருஷ்ண பரமாத்மா உண்மையிலேயே நிதிவனுக்கு தினமும் இரவு வருகிறாரா? அதற்கு என்ன சாட்சி? நிதிவன் பற்றியும் கிருஷ்ணரின் ராசலீலை பற்றியும் அதிர்ச்சியூட்டும் மர்மங்களை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். படித்த பிறகு அப்படியே ஆடி போவீர்கள்.
நிதிவன்: மர்மங்கள் நிறைந்த வனம்
நிதிவன் என்ற சிறிய சோலை முழுவதும் சிறிய பச்சை மரங்கள் நிறைந்திருக்கிறது. அதன் வடிவங்களை பார்ப்பதற்கு விந்தையாக இருக்கும். இந்த மரங்களின் கிளைகள் ஒன்றுக்கொன்று பிணைந்திருக்கும்.
அதனை சற்று உற்றுப் பார்க்கையில், பார்ப்பதற்கு மனித வடிவில் தெரியும். சாயங்காலாம் 8 மணிக்கு மேல் இந்த வனத்திற்குள் மனிதர்கள் நுழைய அனுமதியில்லை. சொல்லப்போனால், விலங்குகள் கூட இந்த வனம் பக்கம் இரவு நேரத்தில் போகாதாம். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இந்த வனத்திற்குள் செல்ல முற்பட்டவர்கள், குருடாகவோ அல்லது செவிடாகவோ அல்லது ஊமையாகவோ அல்லது இறந்தும் கூட போய் விட்டார்கள்.
மரங்களின் மர்மங்கள்
நிதிவனில் உள்ள மரங்களிடம் விசித்திரமான அம்சம் இருக்கும். அங்கே இருக்கும் மரங்களின் கிளைகள் ஒன்றுக்கொன்று பிணைந்திருக்கும். இதனை பார்ப்பதற்கு அவைகள் கட்டிப்பிடிப்பதை போலவே இருக்கும்.
இந்த மரங்கள் தான் கிருஷ்ணரின் பெண் தோழிகளான கோபியர்கள் எனவும் சாயங்கால நேரத்தில் அவர்கள் உயிரை பெறுவார்கள் எனவும் நம்பப்படுகிறது.
கிருஷ்ண பரமாத்மாவிடம் இரவு முழுவதும் ஆடி பாடி அவர்கள் விளையாடுவார்கள். மறுநாள் காலையில் அவர்கள் மீண்டும் மரங்களாக மாறி விடுவார்கள். அதனால் தான் பார்ப்பதற்கு நடனம் ஆடும் அமைப்பில் உள்ள அந்த மரங்கள் தினமும் அதன் வடிவத்தை மாற்றிக் கொண்டே இருக்குமாம்.
கிருஷ்ணரின் புல்லாங்குழல்
புகழ் பெற்ற இதிகாசங்களின் படி, தினசரி இரவு பிருந்தாவனத்திற்கு வருகை தரும் கிருஷ்ணர் தன் புல்லாங்குழலை வாசிப்பார். இந்த வனத்தில் இருந்து தினமும் புல்லாங்குழலின் தெய்வீக இசை கேட்பதாக பலரும் கூறுகின்றனர்.
கிருஷ்ண லீலா
ஒவ்வொரு நாள் இரவும் நிதிவனில் உள்ள ஒரு குடிசையில் இரண்டு பல் துலக்கும் தூரிகைகள், ஒரு ஜாடியில் புனித நீர் மற்றும் இனிப்புகளை பூசாரிகள் வைத்து விடுவார்கள். சாயங்கால ஆரத்திக்கு பின் படுக்கையையும் போட்டு வைப்பார்கள். காலையில், அந்த படுக்கை படுத்த நிலையில் காணப்படும். மற்ற பொருட்களையும் யாரோ பயன்படுத்திய நிலையில் இருக்கும்.
ராதா கிருஷ்ணாவின் ஓய்வெடுக்கும் இடம் நிதிவன் தான் கிருஷ்ண பரமாத்மா மற்றும் ராதையின் ஓய்வெடுக்கும் இடம்.தங்களின் ராசலீலைக்காக தினமும் இரவு இங்கே அவர்கள் வருவார்கள்.
Post Views: 54