25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக சட்ட சபையில் வரலாறு காணாத ஒரு அமளி ஏற்பட்ட போது கலைந்த தலைமுடி கிழிந்த முந்தானை வழியும் கண்ணீருடன் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா சட்ட சபைக்கு வெளியே ஓடி வருகிறார்.

அன்று தான் ஜெயலலிதாவின் வாழ்க்கையிலும் தமிழ்நாட்டு அரசியலிலும் மிகப் பெரிய திருப்புமுனை ஒன்று ஏற்பட்டது.

சென்­னையில் 11 மாடிக் கட்­டடம் இடிந்து விழுந்து 60 பேருக்கு மேல் பலி­யாகி உள்­ளனர். அடுத்த நாள் ஒரு குடோன் சுவர் சரிந்து விழுந்­ததில் 11 பேர் இறந்­துள்­ளனர். இரண்டும் கவ­லைக்­கு­ரிய சம்­ப­வங்கள்.

ஆகவே இது பற்றித் தமி­ழக சட்ட சபையில் எதிர்க்­கட்­சிகள் ஒத்­தி­வைப்புத் தீர்­மானம் கொண்டு வரு­கின்­றன. சம்­ப­வங்கள் குறித்து விவா­திக்க வேண்டும் எனக்­கேட்­கின்­றன. சபா­நா­யகர் அனு­மதி தர­வில்லை.

விசா­ரணைக் கமிஷன் அமைக்­கப்­பட்­டுள்­ளது. எனவே சபையில் விவா­திக்க விதி­களில் இட­மில்லை என்­கிறார். கோஷம் போட்டுக் கொண்டு தே.மு.தி.க.வும் தி.மு.க.வும் வெளி­யே­று­கின்­றன. ஓடு­கா­லிகள் வெளியே போய்­விட்­டார்கள் என்று அமைச்சர் வைத்­தி­ய­லிங்கம் அறி­விக்­கிறார்.

மறுநாள் சபைக்கு வந்த தே.மு.தி.க உறுப்­பி­னர்­களும் தி.மு.க உறுப்­பி­னர்­களும் அமைச்சர் சொன்ன ‘ஓடு­கா­லிகள்’ என்ற வார்த்­தையை சபைக்­கு­றிப்பில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோரு­கின்­றனர்.

அந்த வார்த்தை அப்­ப­டி­யொன்றும் சபையில் பேசக்­கூ­டாத வார்த்தை அல்ல என்­கிறார் சபா­நா­யகர். தி.மு.க.வினர் கேட்­ப­தாக இல்லை. கோஷம் போடுகின்றனர்.

சபா­நா­யகர் ஆணைப்­படி அவர்­களைக் காவ­லர்கள் வெளி­யேற்­று­கின்­றனர். தே.மு.தி.க. வினரும் பின்­தொ­டர்ந்து செல்­கி­றார்கள். வெளியே செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசும்­போது துரை­மு­ருகன் கண் கலங்­கி­ய­படி…

வெளி­ந­டப்புச் செய்­வது ஜன­நா­யக மரபு அதைப் பின்­பற்­றிய எங்­களை ஓடு­காலி என்­கிறார் அமைச்சர். இது அமைச்­ச­ருக்கு அழ­கல்ல. இந்தச் சபையின் மர­புக்கு உகந்­தது அல்ல.

உறுப்­பி­னர்­க­ளுக்கு மாண்பு, மரி­யாதை இருக்­கி­றது. அதைப்­பா­து­காக்கும் பொறுப்பு சபா­நா­ய­க­ருக்கு உண்டு. ஆனால், அதைச்­சுட்டிக் காட்­டி­ய­தற்­காக எங்­களை வெளி­யேற்றி விட்டார் என்­கிறார்.

துரை­மு­ருகன் நீண்ட கால உறுப்­பினர். அனு­பவம் மிகுந்த முன்னாள் அமைச்சர் அவர் கூறு­வது உண்மை. ‘ஓடு­காலி’ என்ற சொல்லை அமைச்சர் பயன்படுத்தி இருக்க வேண்டாம்.

சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் முறை­யிட்­டதும் சபா­நா­ய­கரும் அதைக்­கு­றிப்பில் இருந்து நீக்கி இருக்­கலாம். இதனால் ஆளும் கட்­சிக்குத் தோல்வி என்றோ தி.மு.க.வுக்கு வெற்றி என்றோ எவரும் கரு­தப்­போ­வ­தில்லை.

ஆனால் துரை­மு­ருகன் இந்­தச்­ச­பையின் மரபு பற்­றியும் உறுப்­பி­னர்­களின் மாண்பு பற்­றியும் ஆதங்­கத்­துடன் பேசும்­போது வேறொரு சம்­ப­வமும் நினை­வுக்கு வந்து திரும்­பிப்­பார்க்க வைக்­கி­றது.

இன்­றைக்கு 25 ஆண்­டு­க­ளுக்கு முன்னால் இதே சபையில் நடந்த சம்­பவம் அது. வர­லாறு காணாத அமளி ஏற்­பட்டுக் கலைந்த தலை­முடி, கிழிந்த முந்­தானை  வழியும் கண்­ணீ­ருடன் ஒரு பெண்­மணி சபைக்கு வெளியே ஓடி வரு­கிறார்.

ஜெய­ல­லி­தாவின் வாழ்க்­கை­யிலும் தமிழ்­நாட்டு அர­சி­ய­லிலும் மிகப்­பெ­ரிய திருப்­பு­மு­னையை ஏற்­ப­டுத்­திய சம்­ப­வம்தான் அது.

முத­ல­மைச்சர் கரு­ணா­நிதி தமி­ழக பட்­ஜெட்டை தாக்கல் செய்து உரை­யாற்­று­கிறார். பத­வியில் நீடிப்­ப­தற்­கான தார்­மீக உரி­மையை இழந்­து­விட்ட கருணாநி­திக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் அரு­கதை கிடை­யாது என்று   எதிர்க்­குரல் எழுப்­பு­கிறார் ஜெய­ல­லிதா.

சபையின் அன்­றைய எதிர்க்­கட்­சித்­த­லைவர் அவர். அவ­ருக்குப் பின்னால் 26 அ.தி.மு.க எம். எல். ஏக்கள் இருந்­தார்கள். ஆளும் தி.மு.க. வரி­சையில் 150 பேர் அமர்ந்­தி­ருந்­தார்கள். பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் கரு­ணா­நி­தியைத் தடுத்து நிறுத்த அ.தி.மு.க எம்.எல். ஏக்கள் தொடர்ந்து முயன்­றனர்.

கைநீட்டும் தூரத்தில் கரு­ணா­நி­தியும் ஜெய­ல­லி­தாவும் ஆக்­ரோ­ஷ­மாக வாக்­கு­வா­தத்தில் மூழ்­கி­ய­போது இரு தரப்­பிலும் கோஷங்­களின் தரம் குறையத் தொடங்­கி­யது.

தி.மு.க. உறுப்­பி­னர்கள் மேஜையை   தாண்டிக் குதித்து முன் வரி­சைக்குப்   பாய்ந்­தனர். கரு­ணா­நி­தியின் மூக்குக் கண்­ணாடி கீழே விழுந்து உடைந்­தது. ஜெய­ல­லிதா இருக்­கையில் தள்­ளப்­பட்டார்.

அவரை நோக்கி பாய்ந்­த­வர்­களில் ஒருவர் புட­வை­யைப்­பி­டித்து இழுத்தார். மோச­மான சூழ்­நி­லையில் சாத்தூர் ராமச்­சந்­திரன், திரு­நா­வுக்­க­ரசு பாப்பா சுந்தரம் ஆகியோர் ஜெய­ல­லி­தாவைப் பாது­காப்­பாகச் சூழ்ந்து கொண்டு வெளியே அழைத்துச் சென்­றனர்.

இச்­சம்­பவம் நடந்து ஒன்­றரை ஆண்­டு­களின் பின் சட்ட சபைத் தேர்தல் வந்­தது. கரு­ணா­நி­தியைத் துரி­யோ­த­ன­னா­கவும், துரை­மு­ரு­கனைத் துச்­சா­த­ன­னா­கவும் சித்தி­ரித்து திரெ­ள­பதி பாணியில் மக்­க­ளிடம் ஜெய­ல­லிதா நீதி கேட்டார்.

தி.மு.க.வோ ஜெய­ல­லி­தாவை ஒரு பொருட்­டா­கவே கருத வேண்டாம் என்ற முடி­வுடன் அவர் பெய­ரைக்­கூட உச்­ச­ரிக்­காமல் பிர­சாரம் செய்­தது. ஆனால் அ.தி.மு.க.வோ அமோக வெற்றி பெற்­றது.

முதல் ஆட்­சியில் பல தவ­றுகள் நடந்­தன. ரத்த சொந்­தங்­க­ளுடன் தொடர்பைத் தவிர்த்த முதல்வர் இடையில் வந்த தோழ­மையின் ஆதிக்­கத்­துக்கு எப்­படி இடம் கொடுத்தார் என்ற ஆச்­ச­ரியம் அவ­ரது ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும் ஏற்­பட்­டது.

தேவை­யில்­லாத பிரச்­சி­னை­களில் சிக்கி மக்­களின் நல்­லெண்­ணத்­தையும் இழந்­ததால் அடுத்த தேர்­தலில் ஆட்­சியைத் தக்­க­வைத்துக் கொள்ள முடி­யாமல் போனது.

மோச­மான நெருக்­க­டி­களை முதல் முறை­யாக எதிர்­கொள்ள நேர்ந்­தது. அதில் பல பாடங்­களை அவர் கற்றுக்கொண்டார் என்­பது 2001இல் மீண்டும் ஆட்­சிக்கு வந்த பின்னர் புலப்­பட்­டது.

கட்­சி­யிலும் அரசு நிர்­வா­கத்­திலும் ஜெய­ல­லிதா கொண்­டி­ருக்கும் இரும்­புப்­பிடி அசா­தா­ர­ண­மா­னது. சுதேசா கிரு­ப­ளானி, நந்­தினி சத்­பதி தொடங்கி இன்­றைய மம்தா, மாயா­வதி, வசுந்­தரா ராஜேவரை இந்த நாடு சந்­தித்த எந்­தப்­பெண்­மு­தல்­வரும் கற்­பனை செய்­யாத ஆண் முதல்­வர்­களும் எட்ட முடி­யாத ஆதிக்க நிலை அது.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அணுகு முறை என்று எதிர்க்­கட்­சிகள் விமர்­சனம் செய்­கின்­ற­னவே தவிர கட்­சி­யிலும் ஆட்­சி­யிலும் முணு­மு­ணுப்­புக்­கூட இல்லை. பழைய தவ­று­களின் விளை­வாக அவர் சந்­திக்கும் வழக்­கு­களும் அவர் விரும்பும் முடிவை நோக்கி விரை­வ­தா­கவே தோன்­று­கி­றது.

இந்­தச்­ சூ­ழலில் தமி­ழக அர­சி­யலை அடுத்த நிலைக்கு உயர்த்த வேண்­டிய பொறுப்பை ஏற்க வேண்டும். எதிர்க்­கட்­சி­க­ளுக்கு தாரா­ள­மாக இடம் கொடுங்கள் எவ்­வ­ளவு வேண்­டு­மா­னாலும் பேசட்டும் நல்ல விஷ­யங்கள் தென்­பட்டால் எடுத்­துக்­கொள்­ளுங்கள் அல்­லவை என்றால் மறந்து விடுங்கள்.

வீணான சிந்­த­னைகள் தாமா­கவே விரைவில் காலா­வதி ஆகும். எடுத்­துப்­போட்டு புரட்டி அடிக்­கத்­தே­வையே இல்லை. ஒவ்­வொரு வினைக்கும் ஓர் எதிர்­வினை உண்டு என்­பது அறி­வியல் மேதையின் மூன்­றா­வது விதி. அர­சி­யலும் அவ்­வாறு இருக்க வேண்டும் என்­பது தமி­ழ­கத்தின் தலை­விதி அல்ல.

‘லெஸ் லக்கேஜ் மோர் கம்போர்ட்’ என்று பல ஆண்டுகளுக்கு முன்பு ரயில் பெட்டிகளில் சிறு எழுத்துக்களில் ஒரு வாசகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கும் சுமைகளைக்குறைத்துக் கொண்டே போனால் எத்தனை நெடிய பயணமும் சுகமாக அமையும் என்பது அதன் அர்த்தம்.

ரயில் பயணத்துக்கு மட்டுமல்ல. வாழ்க்கைப் பயணத்துக்கும் இது சாலப்பொருந்தும். பழைய நினைவுகள் பழைய எதிரிகள் பழைய கணக்குகள் என்றும் சுமைதான். அழித்துவிட்டு புது சிலேட்டில் எழுத ஆரம்பிக்க வேண்டும்.

நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக் கட்டும் இனி நடப்பவைகள் நல்லவையாகவே இருக்கட்டும். மன்னிக்கும் மனப்பான்மையுடை யவனே மனிதன்!

Share.
Leave A Reply