சீனாவில் உள்ள ஒருவர் தனது மொபைல் போனில் பொழுது போக்கிற்காக ஆபாச படங்களை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அதில் ஒரு ஆபாச படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஆபாச படம் அவரும் அவருடைய மனைவியும் செக்ஸ் புரிந்துகொண்டிருப்பதுபோல இருந்ததால்தான். உடனே தன்னுடைய மனைவியிடம் தொடர்புகொண்டு இதுகுறித்து விவாதித்தார்.

அப்போது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருவரும் சுற்றுலா சென்றிருந்தபோது ஒரு ஓட்டல் அறையில் தங்கியதும் அந்த ஓட்டல் அறையில் இருவரும் செக்ஸ் உறவு கொண்டதும் நினைவுக்கு வந்தது.

அந்த ஓட்டலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமிரா மூலம் தங்கள் செக்ஸ் உறவை படம்பிடித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்த தம்பதிகள் இதுகுறித்து போலீஸாரிடம் புகார் கொடுத்தனர்.

போலீசார் சம்மந்தப்பட்ட ஓட்டல் அறைகளை சோதனை செய்தபோது அங்கு கேமிரா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த ஓட்டல் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

இங்கு தங்குவதற்காக வரும் சுற்றுலா பயணிகள் செக்ஸ் உறவு கொள்ளும்போது மறைத்து வைத்திருக்கும் கேமிராவில் பதிவு செய்து அதை அமெரிக்காவை  சேர்ந்த ஒரு இணையதளத்திற்கு  விற்பனை செய்து பணம் சம்பாதித்து வருவதை விசாரணை மூலம் போலீஸார் கண்டுபிடித்தனர்.

ஆனால் அமெரிக்காவில் எந்த இணையதள நிறுவனம் என்பதை கண்டுபிடிக்க முடியாததால் அந்த ஆபாச படத்தை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால் அந்த தம்பதிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்

செயற்கை மார்பகங்களின் உள்ளே $120,000 மதிப்புள்ள கோகைன் கடத்திய பெண் அதிரடி கைது
16-08-2014
bra

செயற்கை மார்பகங்களின் மூலம் $120,000 மதிப்புள்ள கோகைன் என்ற போதைப்பொருளை கடத்திய 43 வயது பெண் ஒருவர் Madrid விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

ஸ்பெயின் தலைநகர் Madrid நகரில் உள்ள விமான நிலையத்தில் 45 வயது வெனிசுலா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்ததை பார்த்த கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் அவரிடம் விசாரணை நடத்தினர்.

bra-2

பின்னர் அவரை சோதனை செய்தபோது அவருடைய மார்பகங்கள் வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தனர். பின்னர் பெண் காவல்துறை அதிகாரிகளின் மூலம் சோதனை செய்ததில் அவருடைய இரண்டு மார்பகங்களும் செயற்கையாக ஒட்ட வைத்திருப்பதை கண்டு பிடித்தனர்.

பின்னர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று செயற்கை மார்பகங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி பார்த்தபோது, இரண்டு மார்பகங்களின் உள்ளே 1.7 கிலோ கோகைன் இருந்ததை கண்டுபிடித்தனர். இவற்றின் மதிப்பு $120,000 ஆகும்.

பின்னர் அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் கொலம்பியா நாட்டின் Bogota என்ற நகரில் இருந்து வருவதாகவும், தன்னை அனுப்பிய போதைப்பொருள் கும்பல் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், தன்னை கட்டாயப்படுத்தி இந்த வேலையை செய்ய சொன்னதாகவும் கூறினார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ஸ்பெயின் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Share.
Leave A Reply