12 வயதான சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 75 வயதுடைய வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடவெஹெர பொலிஸார் தெரிவித்தனர்.
கொடவெஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீயெல்லாவ – கருவலஅகார பிரசேத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரும் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சிறுமி கடந்த 12ஆம் திகதி மாலை சந்தேகநபருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்துக்குச் சென்றுள்ளார்.
இதன்போது வர்த்தக நிலையத்தில் மறைத்து வைத்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
இவ்வேளை அங்கு வந்த பெண் ஒருவர் இந்த சம்பவத்தை பார்த்துள்ளார்.
இதன் பின்னதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியாவில் மின்னல் தாக்கி தேரர் உள்ளிட்ட இருவர் பலி
16-08-2014
வவுனியா – நாமல்கம ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி காலி ஸ்ரீநந்தரத்தன தேரர் (65) மற்றும் அவருடைய உதவியாளர் (49) ஆகியோர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை 6.20 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் ஏழு மாதங்களின் பின்னர் வவுனியாவில் நேற்று பெய்த அடை மழையை அடுத்து ஏற்பட்ட மின்னல் தாக்கத்தின் போதே இவ்விருவரும் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.