1986 நவம்பரில் சார்க் உச்சி மாநாடு பெங்களுரில் நடைபெற இருந்தது. Natwarsingh Bookராஜீவ் காந்தி மற்றும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனா ஆகியோர் அந்த மாநாட்டில் பங்குபெறுபவர்களில் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களாக இருந்தார்கள்.
மாநாடுகளில் பின்பற்றப்படும் எழுதப்படாத விதியான இருதரப்பு விடயங்கள் இதில் பின்பற்றப் படவில்லை. ஆரம்ப நிகழ்ச்சியில் எல்லா நாடுகளின் தலைவர்களும் பேசியதினால் சர்ச்சைகள் தவிர்க்கப் பட்டிருந்தன.
ஜெயவர்தனாவின் பேச்சின் பிரதி ஒன்றை நாங்கள் ஒருவாறு பெற்றுக் கொண்டோம், அதில் ஸ்ரீலங்கா பற்றிய எங்கள் கொள்கைக்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்கப் பட்டிருந்தது.
நாங்கள் எங்கள் அதிருப்தியை அவரிடம் தெரிவித்தோம் மற்றும் நாங்கள் ஆட்சேபணை தெரிவித்த கருத்துக்களை நீக்கி விடுவதாக அவர் எங்களுக்கு உறுதியளித்தார்.
மேடையில் பேசும்போது, ஜனாதிபதி ஜெயவர்தனா, காந்தி மற்றும் நேரு அவாகளின் நாட்டில் தனக்கு கிடைத்த வரவேற்பையிட்டு தாம் மிகவும் கவரப்பட்டதாகவும் மற்றும் தான் தன்னுடைய இதயத்தின் ஆழத்தில் இருந்து பேசுவதாகவும் குறிப்பிட்டார்.
பின்னர் அவர் ஸ்ரீலங்காவிலுள்ள தமிழ் பயங்கரவாதிகளை இந்தியா ஆதரிப்பதை பற்றிய தனது தாக்குதலை ஆரம்பித்தார், மற்றும் அவர் நேரு மற்றும் சூ என்-லாய் ஆகியோரிடையே கையெழுத்தான பஞ்சசீல ஒப்பந்தத்தைக் குறிப்பிட்டு மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாமை பற்றி அது குறிப்பிடுவதாகவும் அங்கு தெரிவித்தார்.
அதற்குப் பதிலளிப்பதில்லை என ராஜீவ் புத்திசாலித்தனமாக முடிவு செய்தார். முதலாவது நாள் முடிவில் அவர், பி.சிதம்பரம் அவர்களையும் மற்றும் என்னையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிறுவனரும் மற்றும் அதன் தலைவருமான வேலுப்பிள்ளை பிரபாகரனை தன்னுடன் அழைத்து வந்திருந்த தமிழ் நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களைச் சநதிக்கும்படி அறிவுறுத்தினார்.
ஆங்கிலத்தில் நல்ல பரிச்சயமில்லாத எம்.ஜி.இராமச்சந்திரன் தன்னுடைய அமைச்சர்களில் ஒருவரான இராமச்சந்திரன் என்பவரை மொழிபெயர்ப்பாளராக பணியாற்றுவதற்காக தன்னுடன் அழைத்து வந்திருந்தார்.
பிரபாகரனாலும் கூட ஆங்கிலம் பேச முடியாது. அவர் தன்னடைய மொழி பெயர்ப்பாளராக அன்ரன் பாலசிங்கத்தை அழைத்து வந்திருந்தார். பாலசிங்கம் கம்யுனிச கொள்கைகளுடன் மறைமுக ஈடுபாடுள்ளவர், ஒருவரால், ஒன்றில் அலட்சியப் படுத்தவோ அல்லது நம்பவோ முடியாத ஒரு வகையான மனிதர் பாலசிங்கம்.
பிரபாகரனைப் பற்றிய எனது முதல் அபிப்ராயமே அவருக்கு சாதகமாக இருக்கவில்லை. அவர் குள்ளமாக மற்றும் வலிமையான உடற்கட்டு உள்ளவராக இருந்ததுடன் பிடிவாதம் மற்றும் ஒரு வழிப் போக்கு குணமும் உள்ளவராக காணப்பட்டார்.
அவர் தனது இலட்சியமான ஈழத்தில் உறுதியும், மற்றும் அதை விட்டுக் கொடுக்காதவராகவும் இருந்தார். ஸ்ரீலங்கா தமிழர்களின் கோரிக்கைகளைப் பற்றி இந்தியா முழமையாக அறிந்துள்ளது. பிரதம மந்திரி, ஜனாதிபதி ஜெயவர்தனாவுடன் தமிழர்களின் மனக்குறைகளைப் பற்றி இதமாக பேசியுள்ளார். இந்தியா ஈழத்தை எதிர்ப்பதுடன் ஸ்ரீலங்காவின் இறையாண்மையையும் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் ஆதரிக்கிறது எனத் தெரிவித்தேன்.
பிரபாகரனுடன் பேசுவது என்பதே ஒரு மூச்சு முட்டும் அனுபவமாக இருந்தது. அவர் இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா இராணுவங்களை ஒருமித்து எதிர்கொள்ள வேண்டிய நேரம் வரக்கூடும் என அவரிடம் நான் தெரிவித்தேன்.
அவர் நெஞ்சழுத்தத்துடன் பிடிவாதமாக இருந்தார். சற்று மறைமுகமான எனது அச்சுறுத்தலுக்கு அவர் அளித்த பதில், “ நான் அதற்காக சாகவேண்டி நேர்ந்தாலும் கூட நான் ஈழத்தை ஒருபொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்பதாக இருந்தது. உண்மையாகச் சொல்வதானால் அந்த நேரத்தில் அவரது வெறித்தனமான தீர்மானத்தின் ஆழத்தை நான் குறைவாக மதிப்பிட்டு விட்டேன்.
பெங்களுரில் பிரபாகரனின் பிரசன்னத்தை நாங்கள் ஒரு இரகசியமாகவே வைத்திருந்தோம், ஆனால் எப்படியோ ஜனாதிபதி ஜெயவர்தனா அதைத் தெரிந்து கொண்டார்.
“ராஜீவ் அவனை என்னிடம் ஒப்படையுங்கள், ஒரு தமிழனான யாழ்ப்பாண மேயரை சுட்டுக் கொன்றதுக்காக அவனை நான் யாழ்ப்பாணத்தில் தூக்கிலிட வேண்டும்” என அவர் அச்சுறத்தல் விடுத்தார்.
ஏதோ சில காரணங்களுக்காக ஸ்ரீலங்கா இனப்பிரச்சினைக்கு ஒரு தீவைக் காண்பதற்கு ராஜீவ் மிகவும் அவசரப்பட்டார். ஒருவேளை பஞ்சாப் மற்றும் அசாம் நெருக்கடிகளை அவர் வெற்றிகரமாக கையாண்டதால், அது அவருக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கலாம்.
எனது உறுதியான நம்பிக்கை என்னவென்றால் பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகள் நடைமுறை விபரங்கள் உள்ள பேச்சு வார்த்தைகளில் தலையிடக் கூடாது என்பதுதான்.
அவர்களுக்கு அதற்கான நேரமோ அல்லது நிபுணத்துவமோ கிடையாது. வாரங்கள் கடந்து போனபோது ஜெயவர்தனா, ராஜீவ் காந்தியை சமாளிக்க முடியாமல் திண்டாடுவதாக எனக்கு தோன்றியது.
சார்க் மாநாடு முடிந்த அடுத்த சில மாதங்கள் ராஜாங்க அமைச்சா பி.சிதம்பரமும் நானும் ஸ்ரீலங்காவுக்கு பல பயணங்களை மேற்கொண்டோம். போகும் வழியில் முன்னாள் திரைப்பட நடிகரான எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களை சந்திப்பதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தோம்.
அவர் ஒரு மாநில அரசாங்க தலைவராக இருப்பதை தவிர அந்த மாநில மக்களின் தனிப்பட்ட ஆதரவை பெற்ற ஒருவராகவும் இருந்தார். அவர் எல்.ரீ.ரீ.ஈக்கு மறைமுக ஆதரவும் நிதியுதவியும் வழங்குவதுடன், அவர்களின் அங்கத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் இராணுவ பயிற்சியும் வழங்குவதாக பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
யாழ்ப்பாணம் தமிழ்நாட்டின் ஒரு பகுதி எனவும் அவர் கருதினார். நாங்கள் எம்ஜிஆருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என பிரதமர் ராஜீவ் புரிந்து கொண்டார், மற்றும் அவர் அப்படிச் செய்வது சரியாகவே இருந்தது, ஏனெனில் வல்லமை மிக்க ஒரு முதலமைச்சரை கடந்து போவது எங்கள் பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
சிதம்பரமும் நானும் மேற்கொண்ட மிகவும் முக்கியமான பயணம் 19 டிசம்பர் 1986ல் நடந்தது….
நாங்கள் கொழும்பில் இருந்தபோது, பிரதம மந்திரி ரணசிங்க பிரேமதாஸ, தனது ஜனாதிபதி ஜெயவர்தனாவினால் கூட்டப்பட்ட கூட்டத்தில் பங்குபற்றவில்லை.
அது மட்டுமன்றி அவர் எங்களைச் சந்திப்பதற்கும் மறுத்து விட்டார். எங்கள் விஜயத்தின்போது, டிசம்பர் 19ம் திகதிய தீர்மானங்கள் யாவும் இரு பகுதியினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் எதிர்கால பேச்சு வார்த்தைகளுக்கான ஒரு குறிப்பாகவும் அது இருந்தது.
நாங்கள் தில்லிக்கு திரும்பியதும் இந்திய பிரதமரிடம், ஸ்ரீலங்கா அரசாங்கம் பிளவுபட்டதாக உள்ளது. பிரதம மந்திரி பிரேமதாஸ மற்றும் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி ஆகியோர் ஒரு பக்கமாகவும் மற்றும் காணி, காணி அபிவிருத்தி, மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமினி திஸாநாயக்க மற்றும் அமைச்சர் டீ சில்வா ஆகியோர் ஜனாதிபதி பக்கமுமாக உள்ளார்கள் எனத் தெரிவித்தோம்.
ஜனாதிபதி ஜெயவர்தனா முற்றிலும் சாதகமாக உள்ளார் என்பதாகவே எனது மதிப்பீடு இருந்தது. அவர் நன்றாகப் பேசியதுடன் ஒருபோதும் அவசரம் காட்டவில்லை. ஒரு பக்தியுள்ள பௌத்தரான அவர் தனது குரலை ஒருபோதும் உயர்த்தியதேயில்லை, மற்றும் எப்போதும் அமைதியாகவே இருந்தார். ஆனால் அவரிடம் எதிர்மறையான ஒரு மறுபக்கம் இருந்தது – அவர் புத்திசாலி மற்றும் நம்ப முடியாதவர் மற்றும் அவரை வீழ்த்துவது கடினம்.
டிசம்பர் 19 ந்திகதிய தீhமானங்கள் யாவும் எம்.ஜி.இராமச்சந்திரனிடம் தெரிவிக்கப் பட்டன. எங்கள் உளவுத்துறை பிரபாகரனையும் அவரது ஆட்களையும் கண்காணித்துக் கொண்டிருந்தது. 1986ம் ஆண்டு மோதலற்ற ஸ்ரீலங்காவை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் நிச்சயமற்ற மற்றும் மங்கலான நிலமையுடன் முடிவடைந்தது. அரசாங்கத்துக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ க்கும் இடையேயான மோதல் காரணாக ஸ்ரீலங்காவின் பெருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது.
சிதம்பரமும் நானும் மேலும் சில விஜயங்களை கொழும்பக்கு மேற்கொண்டோம். டிசம்பர் 19ம் திகதிய தீர்மானங்களைப் பற்றி எம்.ஜி.இராமச்சந்திரன் அவாகளிடம் சொல்வதற்கு சென்றபோது, சென்னையில் முதலமைச்சர் அலுவலகத்தில் வைத்து நாங்கள் பிரபாகரனையும் சந்தித்தோம். எங்களுக்கு அறிவிக்காமல் எம்ஜிஆர், எல்.ரீ.ரீ.ஈக்கு 40 மில்லியன் ரூபாக்களை பரிசாக கொடுத்தார்.
இது அனைத்து விதி முறைகளையும் மீறி நடந்தது, ஆனால் இதில் ராஜீவ் காந்தி எதுவும் செய்ய இயலாதவராக இருந்தார். எம்ஜிஆரின் கண்ணோட்டம் தமிழ்நாட்டை சுற்றியதாகவே இருந்தது. விடயங்களை இன்னமும் சிக்கலாக்கும் வகையில் எங்கள் உளவுத்துறை குழப்பம் அடைந்திருந்தது. ஸ்ரீலங்காவின் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பாகிஸ்தான், சவுதி அரேபியா, சீனா மற்றும் இஸ்ராயேல் என்பன முயற்சி செய்து கொண்டிருந்தன.
இஸ்ரயேலியர்கள் ஸ்ரீலங்கா கொமாண்டோக்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்த அதே சமயம் எங்கள் கொமாண்டோக்களுக்கும் பயிற்சியை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
இதை மட்டும் அவர்களால் அடைய முடிந்தது. பொதுநலவாய செயலாளர் நாயகம், சில பொதுநலவாய நாடுகள் இடைத்தரகு செய்து ஒரு தீர்வைக் காணலாம் என ஒரு யோசனையை முன்வைத்தார். ஸ்ரீலங்கா பிரச்சினை சர்வதேச மயமாவதை நாங்கள் விரும்பாதபடியால், நாங்கள் அவரை அதைரியப் படுத்தினோம்.
மே 1987ல் ஒரு நெருக்கடி உதயமானது. அந்தச் சமயம் லலித் அத்துலத்முதலி யாழ்ப்பாணத்தை முற்றுகையிடுவதற்கான ‘லிபறேசன்’ என்கிற ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கான காலம் கனிந்துவிட்டது எனக் கூறி ஜெயவர்தனாவை அதற்கு சம்மதிக்க வைத்துவிட்டார்.
யாழ்ப்பாணம் முற்றுகையிடப்பட்டது மற்றும் நகரத்துக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவது கூட தடை செய்யப்பட்டது. பிரச்சினையை மேலும் மோசமாக்கும் வகையில் மே 27ல் ஜெயவர்தனா, இந்த தடவை யுத்தம் எல்லாவற்றையும் முடித்து வைக்கும் யுத்தம் என அறிவிப்பு செய்தார்.
இந்த வெளிப்பாட்டால் குழப்பமடைந்தார் ராஜீவ் காந்தி, எங்களது அதிருப்தியை, எங்களது தூதுவர் மூலம் ஸ்ரீலங்காவுக்க தெரிவிக்கப்பட்டது. மே,28ல் ஸ்ரீலங்காத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்தியா தலையீடு செய்யும் என பிரதமர் ஸ்ரீலங்காவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இது அலட்சியப் படுத்தப்பட்டது. இதற்கிடையில் யாழ்ப்பாணத்தில் நிலமை மோசமடைந்தது, அத்தியாவசிய பொருட்கள் குறைவடையத் தொடங்கின. யாழ்ப்பாண குடாநாடு ஒரு மனித பேரவலத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது.
1987 ஜூன் 2ல்,அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பெருட்களை கடல் வழியாக அனுப்புவது என்று ராஜீவ் முடிவு செய்தார். இந்தியாவின் விருப்பத்தை ஸ்ரீலங்கா அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வரைவு செய்யுமாறு பி.வி.நரசிம்மராவும் நானும் கேட்கப் பட்டோம்.
இதில் பளிச்சிடும் உண்மை என்னவென்றால், ஸ்ரீலங்கா மனிதாபிமான உதவிகளைக் கோரவில்லை, மற்றும் நாங்கள் அவர்களை வற்புறத்திக் கொடுப்பது மட்டுமன்றி ஒரு நட்பு நாட்டின் கடல் எல்லைகளை நாங்கள் மீறவும் செய்கிறோம் என்பதுதான்.
கப்பல் தொடரணி குறிப்பிட்ட திகதியில் யாழ்ப்பாணக் கடலுக்கு வந்து சேர்ந்தது. ஸ்ரீலங்கா கடற்படை இந்திய படகுகளை நிறுத்தியதுடன் அவர்களை திரும்பி போகும்படி கட்டளையிட்டார்கள், அவர்களும் அப்படியே செயதார்கள். கப்பல் தொடரணியின் தலைவனிடம் மோதலை தவிர்க்கும்படி நாங்கள் அறிவுறுத்தியிருந்தோம்.
பிரதம மந்திரி இந்த நடவடிக்கைக்கு தயவு காட்டவில்லை, கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்தார். இல.7, ரேஸ் கோர்ஸ் வீதியில் ஒரு கூட்டத்தக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
என்னையும் கலந்து கொள்ளும்படி கேட்கப் பட்டிருந்தது. நான் சில நிமிடங்கள் தாமதமாகவே வந்து சோந்தேன், மற்றும்; கூட்டம் ஏற்கனவே ஆரம்பமாகியிருந்தது.
சிரேஸ்;ட அமைச்சரவை அமைச்சர்கள், பாதுகாப்புத் துறை தலைவர்கள், பிரதமரின் முதன்மைச் செயலாளர், அமைச்சரவை செயலாளர், ரோ அதிகாரிகள் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் ஆகியோர் அங்கு பிரசன்;னமாகியிருந்தனர்.
கி;ட்டத்தட்ட பத்து நிமிடங்கள் வரை கூட்ட நடப்பை அவதானித்த எனக்கு ஒரு வகை சங்கடம் தோன்ற ஆரம்பித்தது. அசாதாரணமான ஒரு விடயத்தைப் பற்றிய விவாதம் நடைபெறுவதை நான் புரிந்து கொண்டேன்.
எங்கள் மனதில் என்ன செயல்பாடு தோன்றியுள்ளது என நான் பிரதமரிடம் கேட்டேன். அவரது பதில் எனது அமைதியின்மையை மேலும் அதிகரித்தது – மனிதாபிமான உதவிகளை யாழ்ப்பாணத்தின் மீது வான்வழியாக போடுவதற்கு அவர் முடிவு செய்திருந்தார்.
இதைப்பற்றி நாங்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு அறிவிக்க வேண்டாமா என நான் வினாவினேன் ஒரு மந்திரிசபை அங்கத்தவர் கிட்டத்தட்ட என்னை ஏசும் தொனியில்,”நட்வர்ஜி. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நாங்கள் ஏன் ஸ்ரீலங்காவுக்கு அறிவிக்க வேண்டும்? எனக் கேட்டார்.
“ஏனென்றால் ஸ்ரீலங்கா சுதந்திரமான இறையாண்மையுள்ள ஒரு நாடு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை, கூட்டுச் சேரா நாடுகளின் அமைப்பு, மற்றும் பொதுநலவாயம் என்பனவற்றின் ஒரு அங்கத்துவ நாடு. மேலும் அது எங்களுக்கு அருகிலுள்ள நட்பான அண்டை நாடு. அது ஒரு பகைமை நாடு அல்ல.
யாழ்ப்பாணத்தின் மீது மனிதாபிமான உதவிகளை போடுவதற்காக நாங்கள் விமானங்களை அனுப்பினால், நாங்கள் ஸ்ரீலங்காவின் வான் வெளியை அத்து மீறல் செய்ததாக ஆகிவிடும்” என நான் பதிலளித்தேன்.
இந்த முடிவைப் பற்றி ஐநாவிலுள்ள எங்கள் நிரந்தரப் பிரதிநிதி சின்மயா – காரேகானுக்கு நாங்கள் அறிவித்தால் என்ன என்று நான் கேட்டேன். நாங்கள் இதைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில உள்ளோம் ஏனென்றால் பாதுகாப்புச் சபை கூடி ஸ்ரீலங்கா விடயத்தை விவாதிக்க கூடாது என்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும் (ஸ்ரீலங்கா அப்போது பாதுகாப்புச் சபையில் அங்கத்துவம் பெற்றிருந்தது). பாதுகாப்புச் சபையிலுள்ள பெரும்பாலான அங்கத்தவர்கள் ஸ்ரீலங்காமீது அனுதாபம் காட்டுவார்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை என்றுநான் விளக்கினேன்.
அனுபவமும் உயர்மட்ட தலைமைத்துவமும் கொண்ட சின்மயாவுடன் நான் பேச வேண்டும் என்பதற்கு பிரதம மந்திரி சம்மதித்தார். எஙகள் எண்ணத்தைப் பற்றி நான் சின்மயாவிடம் தெரிவித்தேன். அதைக்கேட்டு அவர் திகைத்துப் போனார். இதைப்பற்றி விவாதிப்பதற்கு பாதுகாப்புச் சபை கூட்டம் எதுவும் நடைபெறக் கூடாது என அவரிடம் நான் சொன்னேன்.
எந்தக் கூட்டமும் கூட்டப் பட மாட்டாது என அவர் பதிலளித்தார். புது தில்லியில் உள்ள ஸ்ரீலங்கா உயர் ஸ்தானிகரான பேர்னாட் திலகரத்னாவுக்கு இதைப்பற்றி அறிவித்தால் என்ன? என்று நான் பிரதமரைக் கேட்டேன். இன்று மதியம் சவுத் புளொக்கில் என்னை வந்து சந்திக்கும்படி அவரிடம் என்னை கேட்கும்படி பிரதமர் என்னிடம் சொன்னார்.
பேர்னாட், தனது வழக்கமான உணர்ச்சிக் கொந்தளிப்பான சுபாவத்தில் இருந்தார். செய்தியை அவரிடம் சொன்னபோது, அவர் தனது நாற்காலியில் அப்படியே சரிந்தார். இந்த விமானம் மூலம் பொருட்களை போடுவது எப்போது நடைபெறப் போகிறது என அவர் என்னிம் கேட்டார்.
அது சில வேளைகளில் பி.ப 2.30 மற்றும் 3.30 க்கு இடையில் நடைபெறப் போகிறது என்று அவரிடம் நான் சொன்னேன். அவரது ஜனாதிபதியுடன் பேசும்படி அவரிடம் நான் கேட்டுக் கொண்டேன். அவரைத் தொடர்பு கொள்ள நேரம் போதாது என அவர் பதிலளித்தார்.
எனது தொலைபேசியை பயன்படுத்தும்படி நான் சொன்னேன். அவர் தனது ஜனாதிபதியுடன் சிங்களத்தில் பேசியதால் அங்கு என்ன சொல்லப்பட்டது என்பதை என்னால் அறிய முடியவில்லை, ஆனால் ஜனாதிபதியின் உரத்த தெளிவான குரலை என்னால் கேட்க முடிந்தது. முன்கூட்டியே அறிவிக்காததற்கு அவர் கோபத்தில் சீறுவது போல அது ஒலித்தது.
நான் கொழும்பிலுள்ள தூதர் ஜே.என். திக்சித்திடம் அறிவித்ததுடன் வான் வீழ்ச்சைக்கான நேரத்தையும் தெரிவித்தேன். இரண்டு விமானங்கள் பறப்பதாக இருந்தது, ஒன்று உதவிப் பொருட்களையும் மற்றது ஊடகப் பிரதிநிதிகளையும் காவிச் செல்ல ஏற்பாடாகியிருந்தது. ஊடகங்களின் பிரசன்னத்துடன் முதல் விமானத்தில் உதவிப் பொருட்களை ஏற்றுவதை நான் உறுதி செய்தேன், இல்லையெனில் எல்.ரீ.ரீ.ஈக்கு தேவையான ஆயுதங்களை இந்தியா போட்டது என அவர்கள் அறிவித்து விடுவார்கள்.
இறுதியாக இந்த வான்வழி உணவு விநியோகம,; சரக்கு விமானத்துக்கு போர் விமானங்கள் பாதுகாப்பு வழங்க 4 ஜூன்,1987ல் நிறைவு பெற்றது. இராணுவ வலிமையை விளக்கும் இந்த செயற்பாட்டுக்கான ஸ்ரீலங்காவின் பிரதிபலிப்பு அதிர்ச்சியானதாகவும் கோபத்தையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. ஒரு சுயாதீன நாட்டின் வான்வெளியில் நாங்கள் அத்துமீறல் நடத்தியுள்ளோம். ஸ்ரீலங்கா அரசாங்கம் உதவி கேட்கவில்லை…….
தயக்கம் காட்டிவந்த எல்.ரீ.ரீ.ஈயினை 1987 ஜூலை கடைசி – ஆகஸ்ட் ஆரம்பத்தில் இந்தோ – ஸ்ரீலங்கா உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்காக சில இரகசிய ஒப்பந்தங்கள் மூலம் ஏய்த்து ஒப்புக்கொள்ளச செய்யப்பட்டதா என்கிற ஒரு சந்தேகம் எப்போதும் இருந்து வந்துள்ளது.
1988 ஏப்ரலில் இந்திய அரசாங்கம், உடன்படிக்கைக்கு ஆதரவு வழங்குவதற்காக எல்.ரீ.ரீ.ஈ க்கு கணிசமானளவு பணம் வழங்கியதாக ஒப்புக் கொண்டதுடன் அந்த இரகசியம் அம்பலமானது. ஒரு துணிச்சலான இந்தியன் பத்திரிiயாளர் லண்டன் ஒப்சேவர் மூலமாக இந்தச் செய்தியை வெளிப்படுத்தினார்.
கசிவிற்கான ஆதாரத்தை அறிய கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் மற்றும் தீக்சித் அவர்களே மீண்டும் புலனாய்வில் ஈடுபட்டது. எல்.ரீ.ரீ.ஈ உடனான புதிய சமாதான முயற்சிகளை மேற்கொள்ள பாரிய ஒப்பந்தங்களை செய்யவேண்டிய நேரமாக இருந்தது, அதில் ரோ முன்னணிப் பங்கினை வகித்தது. இந்த கசிவு குட்டையை குழப்பும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்பட்டது.
உண்மை என்;னவென்றால் இந்திய – ஸ்ரீலங்கா ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதற்கான தங்கள் சம்மதத்தை தெரிவிப்பதற்கு முன்னரே எல்.ரீ.ரீ.ஈ இந்திய அரசாங்கத்திடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டதுதான் அரசியல் யதார்த்தம். இறுதியாக முதல் தவணைப் பணம் மட்டுமே கொடுக்கப்பட்டது, அனால் அது எதனாலென்றால் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட மூன்று மாதங்களுக்குள் இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் எல்.ரீ.ரீ.ஈயுடன் மோதலை ஆரம்பித்து விட்டது.
மாதங்கள் உருண்டு போகப்போக ஒப்பந்தம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. 1988ன் இறுதியில் ஜெயவர்தனா ஒய்வு பெற்றார். பிரேமதாஸ பொறுப்பேற்றுக் கொண்டதும் ஜெயவர்தனாவின் கொள்கைகளை படிப்படியாக அகற்றத் தொடங்கினார். அவரும் ராஜீவும் மாறுபட்ட இரு துருவங்களைப் போலிருந்தார்கள்.
1989ல் ராஜீவ் காந்தி லோகசபைத் தோதல்களில் தோல்வியடைந்தார். அவருக்குப் பதிலாக வி.பி.சிங் பிரதமராக பதவியேற்றார். வி.பி. சிங் மற்றும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி பிரேமதாஸ ஆகியோர் ஸ்ரீலங்காவிலிருந்து இந்திய அமைதி காக்கும் படை திருப்பி அழைக்கப்பட வேண்டும் என்பதில் இணக்கம் கண்டார்கள். ஆரம்பம் முதலே ஸ்ரீலங்கா இனப் பிரச்சினை தவறாகக் கையாளப் பட்டதால் அது தோல்வியில் முடிவடைந்தது.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்