பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அட்டூழியத்தை கட்டுப்படுத்த குர்திஸ்தான் ராணுவமான பெஷ்மெர்காவின் பெண்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் துடிக்கிறார்கள்.

ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்கள் குர்த் இன மக்கள் அதிகம் வசிக்கும் ஈராக்கின் வடக்கு பகுதியில் தொடர்ந்து நாச வேலையில் ஈடுபட்டுள்ளனர். இது குர்திஸ்தான் ராணுவமான பெஷ்மெர்காவின் பெண்கள் பிரிவைச் சேர்ந்தவர்களை ஆத்திரம் அடைய வைத்துள்ளது. இந்த பெண் படை, அவர்களின் கோபம் குறித்த விவரம் வருமாறு,

19-1408444556-kurdistan-map-600

குர்திஸ்தான்
துருக்கியின் கிழக்கு பகுதி, ஈராக்கின் வடக்கு பகுதி, ஈரானின் வடமேற்கு பகுதி, சிரியாவின் வடகிழக்கு பகுதி ஆகியவற்றை சேர்த்தது தான் குர்திஸ்தான். குர்த் இன மக்கள் அதிகம் வசிக்கும் இடம் ஆகும்.

19-1408444590-isis-terrorist2-600

தீவிரவாதிகள்
குர்திஸ்தான் ராணுவமான பெஷ்மெர்காவின் பெண்கள் பிரிவு தங்கள் பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக செய்யும் அட்டூழியங்களை பார்த்து கோபம் அடைந்துள்ளது.19-1408444568-in-raqqa-an-all-female-isis-brigade-cracks-down-on-local-women3-600

அனுப்புங்கள்
எங்களை அனுப்பி வையுங்கள் அந்த தீவிரவாதிகளை அடக்குகிறோம் என்று துடிக்கிறார்கள் பெஷ்மெர்கா பெண்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள்.19-1408444543-kurdistan-600

பெஷ்மெர்கா
பெஷ்மெர்காவின் பெண்கள் பிரிவு குர்திஸ்தான் பெண்கள் வீட்டுக்குள் அடைந்து கிடப்பவர்கள் இல்லை, மாறாக ஆண்களுக்கு நிகராக ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுபவர்கள் என்பதை நிரூபிக்கும் வண்ணம் உள்ளது.19-1408444580-in-raqqa-an-all-female-isis-brigade-cracks-down-on-local-women1-600

போராட்டம்
நாங்கள் தற்போது தீவிரவாதிகளை எதிர்த்து போராடுகிறோம். எனக்கு திருமணமாகி மகள் உள்ளார். என் மகளை என் பெற்றோரிடம் விட்டு வந்துள்ளேன். குர்திஸ்தானுக்காக போராடுவதில் பெருமை அடைகிறேன். என் நாட்டை காக்கவும், பெண்களை பாதுகாக்கவும் தான் நாங்கள் போராடுகிறோம் என்று பெஷ்மெர்கா உறுப்பினரான செலான் ஷக்வான் தெரிவித்துள்ளார்.

19-1408444524-kurdistan234-600

1996
1990களில் குர்திஸ்தான் உள்நாட்டு போர் நடந்ததையடுத்து 1996ம் ஆண்டு பெஷ்மெர்காவின் பெண்கள் பிரிவை உருவாக்கி ஆட்களை சேர்த்து பயிற்சி அளித்தனர்.
பாலியல் அடிமைகளாக 500 பெண்களை விற்பனை செய்த ஐ.எஸ்.ஐ.எஸ்.: திடுக் தகவல்!
18-08-2014

19-isis-terrorist23-600மொசூல்: ஈராக்கில் தங்களது கட்டுப்பாட்டு நகரங்களில் இருக்கும் பிற மதத்து பெண்களை பாலியல் தொழில் அடிமைகளாக ஐ.எஸ்.ஐ.எஸ்.இயக்கத்தினர் விற்பனை செய்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈராக்கில் ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக சன்னி முஸ்லிம்கள் உள்நாட்டுப் போரை நடத்தி வருகின்றனர். அத்துடன் சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளைக் கொண்டு இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டை பிரகடனப்படுத்தியுள்ளனர்.

பாலியல் அடிமைகளாக 500 பெண்களை விற்பனை செய்த ஐ.எஸ்.ஐ.எஸ்.: திடுக் தகவல்! அங்கு இஸ்லாத்தின் ஷரியத் சட்டம்தான் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மொசூல் நகரத்தில் வசிக்கும் கிறிஸ்துவர்கள் உட்பட பிற மதத்தினர் கட்டாயம் மதமாற வேண்டும் என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் கட்டளையிட்டுள்ளனர். இதனை நிராகரித்து பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக சிரியாவுக்கும் குர்திஷ் மாகாணத்துக்கும் தப்பி சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் மொசூல் நகரில் 500க்கும் மேற்பட்ட பிற மதப் பெண்களை பாலியல் தொழில் அடிமைகளாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் விற்பனை செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன் தப்பி ஓடும் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதாகவும் இதனால் பலர் தற்கொலை செய்துகொள்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

FSA rebel stabilized with SAA firepower

FSA Beheaders (Obama Friends) Dancing Chicago Gangsta Theme

Share.
Leave A Reply