இந்திரா காந்தி கொலை பற்றிய பஞ்சாபி சினிமாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31–ந் திகதி காலை சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்ற போது அவரது மெய்க்காப்பாளர்களே அவரை சுட்டனர்.    இந்திராவை சுட்ட இருவரும் சீக்கியர்கள்.

19-1408449653-kaum-de-heere13-600ஒருவர் பெயர் சத்வந்த் சிங், மற்றொருவர் பியாந்த் சிங். இதில் பியாந்த் சிங் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் கொலைச்சதியில் ஈடுபட்ட சேகர் சிங்கும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சத்வந்த் சிங், சேகர்சிங் இருவரும் திகார் ஜெயிலில் தூக்கிலிடப்பட்டனர்.இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டு 30 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த சம்பவத்தை பின்னணியாக கொண்டு பஞ்சாபி மொழியில் ‘காவும் தே ஹேரே’ என்ற பெயரில் சினிமா படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் பியாந்த்சிங், சத்வந்த் சிங், சேகர் சிங், இந்திரா காந்தி ஆகியோர் பற்றி காட்சிகள் முக்கிய இடம் பெற்றுள்ளது.

ரவீந்தர் ராய் என்பவர் இந்த படத்துக்கான கதையை எழுதி இயக்கி இருக்கிறார். விரைவில் இந்தப்படம் திரைக்கு வரஇருக்கும் நிலையில் இதற்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. படத்தில் கொலையாளிகளான பியர்ந்த் சிங், சேகர்சிங், சத்வந்த் சிங் ஆகியோர் தியாகிகளாக புகழப்பட்டு உள்ளனர்.

எனவே படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரமஜித் சிங் சவுத்திரி பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

19-1408449965-kaum-de-heere-13-060இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டது சரி என்பது போல் படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. படத்தை நாடு முழுவதும் வெளியிட தடை விதிக்க வேண்டும் இல்லையேல் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம் என்றும் இளைஞர் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும். பஞ்சாபில் மீண்டும் தீவிரவாதத்தை தூண்டு விடுவது போல் உள்ளது என்றும் இளைஞர் காங்கிரசார் கூறியுள்ளார்.

ஆனால் பியர்ந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங் கல்சா கூறும்போது, 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்திரா காந்தி கொலையில் உள்ள நியாயத்தை வெளிப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது.

பொற்கோவிலில் ராணுவ நடவடிக்கை எடுத்தது அதன்பிறகு இந்திரா பொற்கோவிலுக்கு சென்றது ஆகியவை இந்திராவின் மெய்க்காப்பாளர்களுக்கு ஏற்படுத்திய வேதனையை உணர்த்துவதாக உள்ளது என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையே இந்திரா காந்தி கொலை படத்தை வெளியிட்டால் பஞ்சாபில் வன்முறைச் சம்பவங்கள் தலை தூக்கும் என்றும் உளவு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளனர். இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Share.
Leave A Reply