ரஷ்யாவில் திருமணமான முதலிரவு அன்றே காதலருடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட இளம்பெண் ஒருவரை அவரது கணவன் உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
Volgograd in southern Russia, என்ற பகுதியை சேர்ந்த Veronika Filippova என்ற 27 வயது பெண்ணுக்கு 30 வயதான Ivan Kuzmin என்பவருடன் சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் முதலிரவுக்கு மிகுந்த கனவுடன் மணப்பெண்ணின் அறைக்கு சென்ற கணவனுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு தனது புது மனைவி இன்னொரு ஆணுடன் படுக்கையில் இருந்தார். இதுகுறித்து தனது மனைவியிடம் கணவன் Ivan Kuzmin விசாரித்தபோது அவர் தன்னுடைய பழைய காதலர் என்று கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த கணவன் உடனே அருகில் இருந்த ஆல்கஹால் பாட்டிலில் இருந்த ஆல்கஹாலை பெண்ணின் மீது ஊற்றி தீ வைத்தார்.
தீக்காயத்தினால் அலறின மணப்பெண் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து துடிதுடிக்க மரணம் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் காதலர் தலைமறைவாகிவிட்டார்.
கணவன் Ivan Kuzmin அவர்களை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 15 வருடங்கள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.