நாளொரு கோலத்தில் அழகுறும் நல்லைக் கந்தன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
வரலாற்றுச் சிறப்பும் உலகப் பிரசித்தமும் பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் 21ஆம் நாளான நேற்று தங்க வேல் இரத உற்வசமாகும்.
வேல் வழிபாடு தமிழர்களின் பண்டைய வழிபாட்டு முறைகளில் முக்கியமானதொன்றாகும். தமிழர்களின் வரலாற்றையும் நாகரிகத்தையும் எடுத்தியம்பும் வேல் வழிபாடு தமிழர்களின் பண்பாட்டின் குறியீடாகவும் விளங்குகின்றது.
தங்க வேலானது நல்லுார் கந்தனின் வருடாந்த உற்சவத்தின் போது மாத்திரம் மக்களுக்கு அருள் பாலிக்க வெளியில் எடுத்துவரப்படுவது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய உற்சவத்தின் போதும் நாட்டின் பல பகுதகளிலிருந்தும் இன மத பேதமின்றி பக்தர்கள் கலந்து கொண்டு நல்லூரானைத் தரிசித்து அருளாசி பெற்று மகிழ்ந்தனர்.