மூன்று பவுண் தங்கத்தினையும் பணத்தினையும் கண்டெடுத்த பெண் ஒருவர் வாழைச்சேனை பொலிஸில் ஒப்படைத்த சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.
கல்மடு வீதி விநாயகபுரத்தைச் சேர்ந்த எஸ்.சகுந்தலா என்ற பெண் வாழைச்சேனை இலங்கை வங்கிக்கு தனது தேவையின் நிமித்தம் முச்சக்கரவண்டியில் வந்த போது குறித்த முச்சக்கரவண்டியில் மூன்று பவுண் மதிக்கத்தக்க தங்க சங்கிலியையும் 38560 ரூபா பணமும் இருந்த தனது கைப்பையை தவறவிட்டுள்ளார்.
இதேவேளை மேற்படி முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்திச் சென்ற வாழைச்சேனை அறபா வீதியைச் சேர்ந்த எம்.ஐ.மசாகிரா என்ற பெண் முச்சக்கரவண்டியில் இருந்த கைப்பையைக் கண்டு சாரதியிடம் கேட்டபோது அவர் தெரியாது என்று சொல்லவும் வாழைச்சேனை பொலிஸில் ஒப்படைத்துள்ளார்.
இதே வேளை தனது பணமும் தங்க சங்கிலியும் தொலைந்து விட்டதாக குறித்த பெண் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு சென்ற போது குறித்த பெண்ணிடம் பணத்தினதும் தங்க சங்கிலினதும் அடையாளங்களை விசாரித்து விட்டு உரியவரிடம் பொருட்களை கையளித்ததுடன் கைப்பையை கண்டெ டுத்து பொலிஸில் ஒப்படைத்த பெண்ணை பொலிஸார் பாராட்டினர்.