நீ எல்லாம் அப்பன் காசில் வாழுகிறவன். நான் என் சொந்தக் காசில் வளர்ந்தவன் போன்ற தனுஷின் வசனங்கள் ரஜினி குடும்பத்தில் பெரிய புயலை கிளப்பியுள்ளதாம்!
தனுஷின் தயாரிப்பிலும் நடிப்பிலும் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 25 ஆவது படமான “வேலையில்லா பட்டதாரி” படத்தின் வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் அஸ்வின் என்பதாகும்.
ரஜனிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யாவின் கணவன் பெயரும் அஸ்வின் தானாம். நிஜ வாழ்க்கையிலும் அஸ்வின் கட்டுமானத்துறைத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
வேலையில்லா பட்டதாரி படத்தின் கதாநாயகன் ரகுவரனாக நடிக்கும் தனுஷும் அப்படத்தில் கட்டுமானத்துறைப் பட்டதாரியாகவே தோன்றுகிறார்.
ஒரு கட்டத்தில் அஸ்வினைப் பார்த்து ”நீ எல்லாம் அப்பன் காசில் வாழுகிறவன்.” நான் என் சொந்தக் காசில் வளர்ந்தவன் போன்ற வசனங்கள் ரஜினி குடும்பத்தில் பெரிய புயலைக் கிளப்பியுள்ளதாம்.
இப்படிப்பட்ட வசனங்களால் அக்கா ஐஸ்வர்யாவுக்கும் தங்கை செளந்தர்யாவுக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாம்.
இளைய மகளின் இயக்கத்தில் ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினி நடித்தார். அதே போலத் தனக்கும் ஒரு வாய்ப்புத் தரவேண்டும் என்று மூத்த மகள் ஐஸ்வர்யா கேட்டும் வாய்ப்பு மறுக்கப்படவே மகள்களுக்குள் மெளன யுத்தம் தொடங்கியுள்ளது.
இது நாளுக்கு நாள் பெரும் பிரச்சினையாக உருவெடுத்த வேளையில் தான் மேற்படி புயல் கிளம்பியிருக்கிறது. இருவரையும் எப்படிச் சமாதானப்படுத்துவது என்பது தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறாராம் ரஜினி.
தனுஷின் மூத்த மகனின் பெயர்தான் லிங்கா. அந்தப்பெயரில்தான் ரஜினி நடித்து வரும் படத்தின் பெயரும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
”அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே” என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகளை ”அக்கா என்னடா தங்கை என்னடா அவசரமான கலைக்குடும்பத்திலே” என்று கூட மாற்றிப் பாடலாம் போலும்.
‘வேலையில்லாப் பட்டதாரி’ தனுஷின் நடிப்பில் ஹிந்தி யிலும் தயாராகப்போகிறதாம்!
தகவல்கள் :- ஷண்
சிறைப்பறைகை்கு இலச்சிறை