சினிமாவில், 18வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் ஹீரோயினாக நடிக்க தடைவிதிக்க வேண்டும் என்பது தொடர்பாக, பெண் ஒருவர் தொடரப்பட்ட வழக்கை சென்னை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

தமிழ்நாடு மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் முத்துசெல்வி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், சினிமாவில் 18 வயதுக்கும் குறைவான பெண்களை ஹீரோயினாக நடிக்க வைக்கின்றனர்.

சின்ன வயதில் அவர்களது மனம் பக்குவப்படாமல் இருக்கும் சூழலில் சினிமாவில் நடிப்பதால் அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். பாலியல் கொடுமைக்கும் ஆளாகுகின்றனர்.

சமீபகாலமாக சந்தியா, கார்த்திகா, லட்சுமி மேனன், துளசி போன்றோர் 18 வயதை பூர்த்தியாகும் முன்பே, அதாவது பள்ளியில் படிக்கும்போதே ஹீரோயினாகிவிட்டனர். இப்படி சிறுமிகளை நடிக்க வைப்பது நீதிச் சட்டத்துக்கும், அகில இந்திய குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்துக்கும் எதிரானது ஆகும்.

எனவே, 18 வயதுக்கு குறைவான சிறுமிகளை சினிமாவில், ஹீரோயினாக நடிக்க வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இலட்சியம், கனவு, தாங்கள் என்ன ஆக வேண்டும் என ஆசை இருக்கும்.

அதன்படி அவர்கள் செயல்படுகின்றனர். இதில் கோர்ட் தலையிட முடியாது. இதற்காக பொதுநல வழக்கும் தொடர முடியாது, எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளனர்.

ஐயோ.. அதை எல்லாம் நம்பாதீங்க!
23-08-2014

Lakshmi-menon-thulasi-nair-karthika-nair1சித்தார்த் நடிகர் என்றாலும் அவருக்குள்ளும் ஒரு இயக்குனர் இருக்கிறார். எப்படி கமல்ஹாசன் உதவி இயக்குனராக பணியாற்றி இயக்குனராக வேண்டும் என்று ஆரம்பத்தில் ஆசைப்பட்டாரோ அதேபோன்று சித்தார்த்தும் இயக்குனர் கனவுடன்தான் சினிமாவிற்குள் வந்தார். மணிரத்னத்திடம் சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

அந்த நேரம் அவரே எதிர்பாராத வகையில், ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு பெற்றார். அப்படம் வெற்றி பெற்றதால் அதன்பிறகு சித்தார்த்தின் சினிமா கேரியர் அதிலிருந்து நடிகராக ஸ்டார்ட்டாகி விட்டது.

அதிலும் குறுகிய காலத்தில் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து விட்டார் என்றபோதும் எந்த மொழியிலும் அவருக்கென்று கமர்சியல் இடம் பெரிய அளவில் இன்னும் கிடைக்கவில்லை.

அதன் காரணமாக, கதை விசயங்களில் தற்போது அதிக ஈடுபாடு காட்டி வரும் சித்தார்த், சில படங்களில் நடிக்கும்போது இயக்குனர்கள் காட்சியை ஒரு மாதிரியாக சொன்னால், இவரோ இன்னொரு ஸ்டைலில் நடிப்பதாகவும், சில புதியவர்களிடம் நானும் இயக்குனர்தான், அதனால் இந்த காட்சியை இந்தமாதிரி படமாக்கிக் கொள்ளலாம் என்று அவர்களை சித்தார்த் ஓவர் டேக் செய்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி சித்தார்த்தைக் கேட்டால், வசந்தபாலன் இயக்கியுள்ள காவியத்தலைவன் படத்தில் நான் நடித்தபோதே இதுபோன்று செய்தி பரவியது. ஆனால் அதில் கொஞ்சம்கூட உண்மையில்லை.

அப்படியே எனக்கு வித்தியாசமாக நடிக்க வேண்டும் என்று தோன்றினால் அதை இயக்குனர்களிடம் முன்வைத்து, அவர்கள் ஓ.கே சொன்னால் மட்டுமே நடித்திருக்கிறேன். மற்றபடி, நானும் இயக்குனர்தான் அதனால் என் இஷ்டத்துக்குத் தான் நடிப்பேன் என்று எந்த இயக்குனரையும் நான் ஓவர்டேக் செய்ததில்லை.

என்னைப்பற்றி யாரோ இப்படி திட்டமிட்டு தவறான வதந்தி பரப்பிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார்.

Share.
Leave A Reply