போர்… போர்… இதோ காஸா முனையில் மீண்டும் போர்…..ஐந்து நாட்களாக அமுலில் இருந்த போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டபோது, அப்பிரதேச மக்கள் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பும் நிம்மதி பெருமூச்சு விட்டது.
ஆனால், அந்த நிம்மதி 24 மணித்தியாலங்களுக்குள் சுருங்கிவிட்டது. சூழ்நிலை மோசமடைய ஆரம்பித்துவிட்டது.
தற்காலிக யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்திவிட்டு, நிரந்தர யுத்த நிறுத்தத்திற்கு எகிப்து தலைநகர் கெய்ரோவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது இஸ்ரேல் தரப்பும் ஹமாஸ் தரப்பும். இரு தரப்புக்கும் இடையில் முக்கிய விவகாரங்களில் உடன்பாடு எட்டாத நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது,
இந்த சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வியுறுவதற்கான முழு காரணமும் இஸ்ரேல் தான் என்று ஹமாஸ் தரப்பு கெய்ரோவில் வைத்தே அறைகூவல் விட்டது.
இதோ இந்த பேச்சுவார்த்தைத் தோல்வியை அடைத்து காஸா முனையில் உக்கிர மோதல் ஆரம்பித்துவிட்டது.
அங்கே யுத்த யாமங்கள் தொடர ஆரம்பித்து விட்டன.
என்ன தான் ஹமாஸ் எதிர்த்தாக்குதலை நடத்தினாலும், இஸ்ரேலின் போர் உத்திகள் சற்று வித்தியாசமானது அதேவேளை பலம்பொருந்தியது.
இஸ்ரேலின் உயிர்மூச்சாக இருப்பது, அந்நாட்டின் உளவு நிறுவனமான மொஸாட்.
மொஸாட் என்ற பெயரைக் கேட்ட அத்தருணமே ஒரு சிலிர்ப்பைத் தரக்கூடிய ஒரு உளவுத்துறைதான் இது.
இஸ்ரேலுக்கே உரிய ஒரு உளவுத்துறை. உலகில் இயங்கும் அத்தனை உளவுத்துறைகளிலும் முதலில் இருப்பது இந்த மொஸாட்தான்.
இதை சாதாரணமாக ஒரு உளவு அமைப்புத்தானே என்று சொல்லிவிட்டு அப்பால் நகர முடியாது. காரணம் அது சாதித்த சாதனைகள் பல… போட்டத் திட்டங்கள் எல்லாமே கேட்பவர்களை கிடுகிடுக்க வைக்கும் திட்டங்கள். அத்தனை பலம், இரகசியம் காப்பதில் ஒவ்வொரு மொஸாட் அதிகாரியும் திறமைசாலிகள்.
எப்படி இது சாத்தியமானது இவர்களுக்கு மட்டும்?
ஒரு சிறிய நாடு இஸ்ரேல். ஆனால் அந்த சிறிய நாட்டைச் சுற்றியும் பெரிய பகை வளைந்திருக்கிறது. பகைக்கு நடுவே இஸ்ரேல். இந்தப் பகையை துடைத்தெறிந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கு பெரும் பங்காற்றி வருகிறது இந்த மொஸாட்.
ஒரு சிறிய சம்பவத்தை விவரித்துவிட்டு அடுத்து மொஸாட்டைப் பற்றிச் சொன்னால் உங்களுக்கு இதன் வீரியம் இலகுவில் புரிந்துவிடும்.
1972ஆம் ஆண்டு. ஜேர்மனியில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம். அதில் இஸ்ரேல் வீரர்களும் பங்குபற்றியிருந்தனர். அப்போது அங்கே போட்டியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இஸ்ரேல் வீரர்கள் ஒன்பது பேரை கொன்றுவிடுகின்றனர். ஆனால் இந்தப் படுகொலையை செய்தது யார் என்று தெரியாது.
ஒட்டுமொத்த உலகமும் அதிர்ச்சியில் உறையவைத்தது. இஸ்ரேல் கண்ணீரில் மிதந்தது. ஆனால் போட்டிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாததுபோல போட்டிகள் தொடர்ந்து நடந்துமுடிந்தன.
அப்போதுதான் இஸ்ரேலிய பிரதமர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்தக் கோரச் சம்பவத்தால் எம் மக்களை துயரத்தில் ஆழ்த்தி விட்டார்கள். அவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து அவர்கள் உலகத்தில் எங்கிருந்தாலும் தேடி கண்டுபிடித்து வேட்டையாடுவோம் என்று முடிவெடுத்தார்.
அப்போது வெளியே வந்ததுதான் மொஸாட்.
தன் நாட்டையும் தம் மக்களையும் இனி மொஸாட் பாதுகாக்கும் என்றார்.
அறிமுகமான கையோடு இந்த படுகொலைக்கு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் தேடிப் பிடித்து கொலை செய்தது என்று சொல்கிறது மொஸாட்டின் குறிப்புகள்.
மொஸாட்டின் பெருமையை மாத்திரம் வைத்து கணக்கில் எடுக்க முடியாது.
இதோ அதற்கு சான்றாக இன்னொரு சம்பவம்.
உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையாக பார்க்கப்படுவது. ஹிட்லரினால் மேற்கொள்ளப்பட்ட யூத படுகொலைகள்தான்.
ஒன்றல்ல இரண்டல்ல அறுபது இலட்சம் யூதர்களைக் கொன்று குவித்த கொலைக்களம் அது.
மனித வரலாற்றில் எப்போதுமே காணப்படாத இந்த இனப்படுகொலையை வடிவமைத்து முன்னின்று நடத்தியவன்தான் ‘அடோல்வ் ஏச்மென்’ (Adolf Eichmann).
Eichmann,_Adolf.
இவன் ஜேர்மனியதளபதி.
சற்றும் தயக்கம் காட்டமாட்டான். எவ்வித சஞ்சலமும் இல்லை இவனிடம். எதற்கு யூதர்களை புகையிரதங்களில் கொலை முகாம்களுக்கு அனுப்பிக்கொண்டே இருந்தான் இவன்.
இப்படி படுகொலைகள் நடந்துகொண்டிருக்க1942ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஹிட்லரின் கனவு சாம்ராஜ்யம் கலைந்து வீழ்ந்தது.
அத்துடன் யூத படுகொலைகள் முடிவுக்கு வந்தன.
ஹிட்லர் படையில் யூதப்படுகொலைகளுக்கு எல்லாம் பொறுப்பாக இருந்த அடோல்வ் ஏச்மென், தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளியத் தொடங்கினார்.
அமெரிக்கா மற்றும் நேசநாட்டுப் படைகளால் பிடிக்கப்பட்ட ஜேர்மனிய தளபதிகள் ‘நூரன்பேர்க்’ நகரில் அமைந்த நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சுட்டும், தூக்கிலிட்டும் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
நூரன்பேர்க் நீதிமன்றத்தில் பல ஜேர்மனியதளபதிகள் ஒப்பு தல்வாக்கு மூலங்களையும் வழங்கினார்கள்.
அதில் மிகமுக்கியமாக ‘அவ்ஸ்விற்ஸ்’ (Auschwitz) முகாமின் பொறுப்பாளரான தளபதி ‘ரொடுல்வ் கோய்ஸ்’ என்பவர் இந்த படுகொலைகளுக்கான முழு உத்தரவும் ‘அடோல்வ் ஏச்மென்’தான் தந்ததாக வாக்கு மூலம் கொடுத்ததன் பின்னர் ‘அடோல்வ் ஏச்மென்’ யூதப்படுகொலைகளுக்காக மிகவும் தேடப்படும் ஒருவரானார்.
முழு ஜேர்மனியும் கூட்டுப்படைகளினால் கைப்பற்றப்பட்ட சூழலில் என்ன செய்வது எங்கு ஓடி ஒளிவதென்று தெரியாமல் கிராமங்களிலும்,பண்ணைகளிலும் இவன் ஒளித்திருந்தான்.
இப்படியே ஒளிந்து ஒளிந்த 1948ஆம் ஆண்டில் இத்தாலியை வந்தடைந்து, அங்கு றிச்சர்டோ கெலிமன் என்ற பொய்யான ஒரு பெயருடன் சிரியா நாட்டில் இருந்தான்.
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் இஸ்ரேல் உதயமானது. யூதர்களுக்கான இஸ்ரேல்தேசம் உருவானவுடன் யூதப்படுகொலைகளின் சூத்திரதாரிகளை தேடி அழிக்கவும், பிடித்து இஸ்ரேலுக்கு கொண்டுவரவும் விசேட இஸ்ரேலிய பிரிவுகள் மோப்பம் பிடிக்கத் தொடங்கியிருந்த சமயம்.
முக்கியமாக இஸ்ரேல் உளவுப் பிரிவு தேடியது யாரைத் தெரியுமா? இந்தக் கொலைக்காரத் தளபதி அடோல்வ் ஏச்மென்னைத்தான்.
இந்த விடயம் எப்படியோ அவன் காதுகளில் எட்ட அங்கிருந்து தப்பி ஆர்ஜன்டீனாவுக்குள் புகுந்துகொண்டான். அங்கு கெலிமென் என்ற பெயரில் ஒரு தொழிலாளியாக இருந்தான்.
1952இல் ஆஸ்திரியாவில் இருந்து தனது மனைவியையும் மூன்று குழந்தைகளையும் ஆர்ஜன்டீனாவுக்கு வரவழைத்து குடும்பமாக வாழதொடங்கினான்.
ஆண்டுகள் பல கடந்தன. மொத்தத்தில் எல்லோரும் இந்த கொலைகாரனை மறந்துவிட்டிருந்தனர்.
ஆனால் ஒரு நாடு மட்டும் இவனை மறக்கவில்லை.
வலிகளை சுமந்த யூததேசமும் மக்களும் இவனை மறக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை.
எங்கோ ஒரு உலக மூலையில் ‘அடோல்வ் ஏச்மென்’ என்ற மானிட எதிரி பதுங்கி இருப்பான் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். தேடிக்கொண்டே இருந்தனர்.
ஒருநாளில் அதற்கு பலனும் கிடைத்தது. மெத்தனமாக இவன்போட்ட கடிதம் ஒன்றால் மாட்டிக்கொள்கிறான். ‘அடோல்வ் ஏச்மெனின்’ புகலிடம் ஆர்ஜன்டீனாதான் என மொஸாட்டுக்குத் தெரியவருகிறது.
ஒப்பரேசன் ஏச்மென்னை களமிறக்குகிறது மொஸாட்.
அந்த கொலைக்கார தளபதியை ஆர்ஜன்டீனாவில் இருந்து இஸ்ரேலுக்கு கடத்தி கொண்டுவருகிறது இஸ்ரேல்.
நாடுவிட்டு நாடு கடத்துவது என்பதென்ன அவ்வளவு எளிதா? இல்லை இல்லவே… இல்லை… இவனைப் எப்படிக் கண்டுபிடித்தார்கள் எப்படிக் கடத்தினார் என்பதுபற்றிக் கேட்பவர்களை உறையச் செய்யும் அந்த சாகசத் திட்டங்கள் அடுத்த இதிழில் வரும்…
-எஸ்.ஜே.பிரசாத்-
Extraits du procès d’Adolf Eichmann