பெத்த மகளைக் கல்யாணம் செய்து கொள்வான் என்ற நம்பிக்கையில் கள்ளக் காதலனுடன் அனுப்பி வைத்த தாய்க்கு செத்த மகளின் சடலம் தான் கிடைத்துள்ளது. இக்கொலை வழக்கில் தாயையும் சேர்க்கலாமா வேண்டாமா என்று பொலிஸார் திணறி வருகின்றனர்.
பெத்த மகளைக் கல்யாணம் செய்து கொள்வான் என்று கள்ளக் காதலனுடன் அனுப்பி வைத்த தாய்க்கு செத்த மகளின் சடலம்தான் கிடைத்துள்ளது. இக்கொலை வழக்கில் தாயையும் சேர்க்கலாமா வேண்டாமா என்று பொலிஸார் திணறி வருகின்றனர்.
தமிழகத்தில் சிதம்பரம் கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். திட்டில் உள்ளது அரசு தொடக்கப்பள்ளி. இதற்குப் பின்புறம் உள்ள புது ஓடையில் ஜூலை 10 ஆம் திகதி வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தது இளம் பெண்ணின் சடலம்.
இதை அவ்வழியே சென்றவர்கள் பார்த்துப் பொலிஸாருக்கு தகவல் கொடுக்க கிராமமே பதறியது. ஆடை களையப்பட்ட நிலையில் சடலத்துக்கு அருகே கிடந்த பேக்கில் சுடிதார்கள் செருப்பு மற்றும் அந்தப் பையில் 10 ஆவது வகுப்பு என்று எழுதப்பட்டிருந்தது தான் பொலிஸுக்கு கிடைத்த ஒரே ஆதாரம்.
இதையடுத்து கடலூர் எஸ்.பி. ராதிகாவின் உத்தரவின் பேரில் சிதம்பரம் டி.எஸ்.பி ராஜாராம் தலைமையில் தனிப்படை களம் இறங்கியது. பொலிஸார் நடத்திய விசாரணையில் சீர்காழி அருகே காரைமேடு அரசு ஆதி திராவிடர் உயர் நிலைப் பள்ளி மாணவி கவுசல்யாதான் அப்பெண் என்பது ஊர்ஜிதமானது.
அங்கிருக்கும் அரச விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவி கவுசல்யாவின் சொத்த ஊர் சீர்காழி வட்டம் தென்னலக்குடி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து தென்னலக்குடி கிராமத்தினரிடம் விசாரித்தோம். புவனிகிரி அருகிலுள்ள குறியாமங்கலத்தைச் சேர்ந்த அன்பு தாஸ் என்கிற ஜானி சிறுவயதில் பெற்றோரை இழந்தவன். எம்.ஜி.ஆர். திட்டைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற மீனவர் தத்து எடுத்து வளர்த்தார். வேல்விழி என்ற பெண்ணுடன் அன்புதாஸுக்கு திருமணம் ஆகி விட்டது.
இவன் கட்டுமரத் தொழில் சம்பந்தமாக பனை மரம் வாங்க சீர்காழி, பழையாறு கிராமத்திற்கு வருவான். அங்கு அருள்தாஸ், ஜான், விஜய் என்று பல பெயர்களில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வான். அப்போது தான் சித்தாள் வேலைக்குச் சென்ற கவுசல்யாவின் தாய் பழனியம்மாளுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அந்தத் தொடர்பே ஏற்பட்டது. அதற்குள் அவனைப் பற்றி விசாரிக்காமல் அவனுக்கு தனது மகள் கவுசல்யாவை கட்டிக் கொடுக்க பழனியம்மாள் முடிவெடுத்தாள்.
அவளுக்கு நான்கு பெண் குழந்தைகள். ஒரு ஆண். நான்கில் ஒருத்தியையாவது கரைசேர்த்தால் போதுமே என்ற நம்பிக்கையில் ஒரு மாதமாக அவனுடன் கவுசல்யாவை அடிக்கடி அனுப்பி வைத்தாள். இம்முறை கவுசல்யாவைத் திருமணம் செய்து கொள்வான் என்ற நம்பிக்கையில் பழனியம்மாளே உறவினர்களிடம் இருந்து உடைகளை வாங்கிக் கொடுத்து அனுப்பி வைத்தாள்.
ஆனால் இப்படிச் செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை என்று அக்கம் பக்கம் வசிப்பவர்கள் கூறினர்.
இது பற்றி பொலிஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, சீர்காழி, காரைமேடு ஆதி திராவிடர் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்ற வைத்தீஸ்வரன் கோயில் பொலிஸார் கவுசல்யா வீட்டிற்கும் போய் கன்பேர்ம் செய்து கொண்டனர்.
ஜானிக்கு கவுசல்யாவின் அப்பா பேசுவது போலப் போனைப் போட்டு பொலிஸார் பேச வைத்த போது சென்னையில் இருக்கிறேன். கவுசல்யாவை மதியம் பேச வைக்கிறேன். சிங்கப்பூருக்கு போகப் போகிறோம் என்று கடலூரில் இருந்த படியே பேசினான்.
மீண்டும் தொடர்பு கொண்ட போது மூன்று மணிக்கு செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. அதன் பிறகு அவனுடைய செல்போன் டவரை வைத்து ஜூலை 15 ஆம் திகதி இரவு கடலூரில் ஒரு லொட்ஜில் தங்கிருந்த போது பிடித்தோம். அப்போதும் கூட ஒரு பெண்ணோடு உல்லாசமாக இருந்தான்.
அப்போது பூம்புகார், கும்பகோணம், சிதம்பரம் போன்ற இடங்களுக்கு மாணவி கவுசல்யாவை அழைத்துச் சென்று சுற்றியிருப்பதைக் கூறியிருக்கிறான். ஜூலை 6, 7ஆம் திகதிகளில் பிச்சாவரத்தில் உல்லாசமாக இருந்திருக்கிறார்கள். என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதாச் சொன்னியே, எப்ப பண்ணிக்குவ-? என்று கவுசல்யா கேட்ட போதுதான், தனக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கிறது உன்னை வைப்பாட்டியா வச்சிக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறான்.
இதில் கோபமான கவுசல்யா உனக்குத் தான் கல்யாணம் ஆகிப்போச்சில்ல அப்ப ஏண்டா என் வாழ்க்கையை கெடுத்தே? படிச்சிக்கிட்டு இருந்த என்னை நாசமாக்கிட்டியே உன்னைச் சும்மா விடமாட்டேன்டா என்று கத்திக் கூச்சல் போட்டிருக்கிறாள்.
இதனை எதிர்பார்க்காத அருள் தாஸ், அவளுடைய கழுத்தை நெரிக்கவே மயங்கி சரிந்து இறந்து போயிருக்கிறாள். அவளை அப்படியே தூக்கிக் கொண்டு போய் எம்.ஜி.ஆர். திட்டுக்குப் பின்புறமுள்ள புது ஓடையில் போட்டு விட்டு எஸ்கேப் ஆகி விட்டான் என்றனர்.
கவுசல்யா படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உலகநாதனிடம் பேசியபோது, இந்த கவுசல்யா ஏற்கனவே ஒரு வருடமாகப் பள்ளிக்கு வராததால் ஒன்பதாம் வகுப்பில் இரண்டாண்டுகள் படித்தார். ஜூலை 3ஆம் திகதியிலிருந்து பள்ளிக்கு வரவில்லை.
அவருடைய தங்கை கௌதமியும் பத்தாம் வகுப்பு இங்கு தான் படிக்கிறார். அவரிடம் ஏன் உங்க அக்கா ஸ்கூலுக்கு வரலைன்னு கேட்ட போது, உடம்பு சரியில்லை. அதனால் வரவில்லை என்றார்.
அவங்க அம்மாகிட்டே கேட்ட போதும், அவளுக்கு உடம்பு சரியில்லை என்றே சொன்னார்கள். ஜூலை 15 ஆம் திகதி பொலிஸார் வந்து எங்களிடம் விசாரித்த போது அவருடைய தங்கை கௌதமியைக் காண்பித்தோம். அவளிடம் தனியாகப் பேசி அவரை அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள். அதன் பிறகு தான் எங்களுக்குத் தெரியும் என்றார்.