அமெரிக்காவில் உள்ள WARM SPRINGS என்ற பகுதியில் உள்ள ஒரு பெண், தீயணைப்பு படையிலுள்ள தனது காதலருக்கு வேலையே இல்லாமல் போர் அடித்ததால் காடுகளில் தீயை மூட்டிவிட்டார்.

அவருடைய விளையாட்டுத்தனத்தால் அந்த பகுதியில் 51,000 ஏக்கர் அளவிற்கு காட்டுத்தீ ஏற்பட்டு விலைமதிக்க முடியாத மரங்கள் சாம்பலாகின. தற்போது அந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டூள்ளார்.

அமெரிக்காவில் உள்ள Sadie Renee Johnson என்ற 23 வயது பெண்,அந்த பகுதியில் உள்ள தீயணைப்புத்துறையில் பணிபுரியும் ஒருவரை காதலித்து வந்தார்.

1408928885fire2இருவரும்   ஒருநாள் பேசிக்கொண்டிருந்தபோது, நீண்ட நாட்களாக அந்த பகுதியில் தீவிபத்து எதுவும் ஏற்படாததால் தனக்கு மிகவும் போர் அடிப்பதாகவும், பொழுதே போகவில்லை என்றும் காதலன் தன் காதலியிடம் கூறினார்.

இதனால் மறுநாள் அதிகாலையில் Sadie Renee Johnson அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று அங்கு தீயை வைத்தார். சிறிது நேரத்தில் அந்த காட்டுத்தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. பின்னர் தீயணைப்பு படையினர் பல நாட்கள் கஷ்டப்பட்டு தீயை கட்டுப்படுத்தினர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் Sadie Renee Johnson என்ற பெண்தான் தீயை வைத்தவர் என்பதை அறிந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த காட்டுத்தீயினால் $7,901,973 மதிப்புள்ள மரங்கள் சேதமாகின என்று காட்டிலாகா அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த காட்டுத்தீயினால் சுமார் 51,000 ஏக்கர் காடுகள் பெருமளவு பாதிக்கப்பட்டதாகவும், இதில் 31,000 ஏக்கர் காடுகள் முற்றிலும் சாம்பலாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

குற்றவாளி பெண்ணுக்கு சுமார் 18 வருடங்கள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன,.

Share.
Leave A Reply