கிராமமொன்றைப் பற்றி முகப்புத்தகத்தில் அவதூறாக பதிவேற்றம் செய்த ஜேர்மனில் வசிக்கும் இளைஞர் ஒருவரின் யாழ்ப்பாணத்திலுள்ள சகோதரன் மீது தாக்குதல் நடத்திய இருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
திங்கட்கிழமை (25) இரவு நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநகபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (26) மதியம் கைது செய்யப்பட்டனர் என ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கரம்பன் கிராமத்தை பற்றி ஜேர்மனில் வசிக்கும் இளைஞர் ஒருவர், தனது முகப்புத்தகப் பக்கத்தில் அவதூறாக பதிவேற்றம் செய்துள்ளார் என்று கரம்பனில் வசிக்கும் அவ்விளைஞனின் சகோதரன் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 26 வயது சகோதரன், ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பியுள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் அதேயிடத்தைச் சேர்ந்த 24 மற்றும் 26 வயதுடைய இரு சந்தேகநபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2000 இல் சுவிஸில் கொலை – இலங்கையர் 2014 இல் நியூசிலாந்தில் கைது!
26-08-2014
13 வருடங்களுக்கு முன்னர் சுவிஸில் தனது முன்னாள் காதலியான 23 வயது நிரம்பிய கவிதா கந்தையா என்ற இளம் பெண்ணைக் கொலை செய்துவிட்டு, போலி ஆவணங்களுடனும் நியூஸிலாந்துக்குள் நுழைந்து, அங்கு பிரஜாவுரிமை பெற்று வசித்து வந்த இலங்கைப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஒருவரே ஒக்லண்ட் பொலிஸார் இவ்வாறு கைது செய்யப்பட்டு இன்று ஒக்லண்ட் மாவட்ட நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுவிஸில் வசித்து வந்தவ இவர் 2000 டிசம்பரில் தனது காதலியான 23 வயது இளம் பெண்ணைக் கொலை செய்து விட்டு 2001 பெப்ரவரியில் போலியான அடையாளப்படுத்தல் மற்றும் பயண ஆவணங்களுடன் நியூஸிலாந்துக்குள் நுழைந்து, 2004 ஆம் ஆண்டு அந்த நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றிருக்கின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
குவான்டனாமோ கைதிகள் போல் ஆஸி புகலிடக் கோரிக்கையாளர்கள் நடத்தப்படுகின்றனரா?
26-08-2014
உலகின் மிகவும் மோசமான சிறைச்சாலைகளில் ஒன்றாக கருதப்படும் குவான்டனாமோ சிறைச்சாலையின் கைதிகளுக்கு நிகராக அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்கள் நடத்தப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையர்கள் உள்ளிட்ட பல நாடுகளின் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவினவரின் பரிந்துரைகளுக்கு அமைய நான்கு புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒருவர் கால வரையறையின்றி முகமாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்களை நடாத்தும் விதம் குறித்து ஏற்கனவே ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில், இந்த புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மெல்பர்ன் மற்றும் சிட்னி ஆகிய நகரங்களில் 44 புகலிடக் கோரிக்கையாளர்கள் எவ்வித குற்றச்சாட்டுக்களுக்கும் சுமத்தாது கடந்த ஐந்து ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தடுத்து வைக்கப்பட்டமைக்கான காரணங்களை அறிந்துகொள்ள இதுவரையில் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
அவுஸ்திரேலிய அதிகாரிகளின் நடவடிக்கைகளினால் புகலிடக் கோரிக்கையாளர்கள் பாரியளவில் மன உலைச்சல்களுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புகலிடக் கோரிக்கையாளர்கள் கால வரையறையின்றி தடுத்து வைக்கப்படும் நடவடிக்கையானது ஐக்கிய நாடுகள் சர்வதேச பிரகடனங்களை மீறும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளானது மனிதாபிமானற்ற வகையில் அமைந்துள்ளதாக சிட்னி பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் பென் சாவுல் தெரிவித்துள்ளார்.
எவ்வித குற்றச்சாட்டுக்களையும் சுமத்தாது புகலிடக் கோரிக்கையாளர்கள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்படுவது மனிதாபிமானமற்ற குரூர செயலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கால வரையறையின்றி புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும், இவ்வாறான முகம்கள் குவான்டனாமோ சிறைக்கு நிகரானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
44 புகலிடக் கோரிக்கையாளர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் ஒப்புக்கொண்டுள்ளார்.
புகலிடக்கோரிக்கையாளர்களின் உளவியல் சுகாதாரத்தை மேம்படுத்த தகுதியான மருத்துவர்களின் ஊடாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.